சிறுசிறு சண்டைகள்
காதலின் அம்சம்
பார்வைகள் சந்தித்தால் ஊடலும் ம(ப)றந்துபோகும் ️
தோற்றுத்தான் போகின்றது
என் பிடிவாதம்
உன் அன்பின் முன்
நீயருகிலிருந்தால்
இருளிலும் நான்
பௌர்ணமியே...
கவிதை எழுத காதல் தேவையில்லை.....
பெண்களின் அழகை
ரசிக்க தெரிந்தாலே போதும்.......!!!!
வருடாவருடம் பூ புதிதாகலாம் ஆனால்
வாங்கும் ,கொடுக்கும் கை
மாறக்கூடாது........
உன்
அன்பெனும்
எண்ணெய்
வற்றாதவரை
நான் ஓர்
சுடர்விட்டெரியும்
விளக்கே
உன்னை பிடித்துவிட்டதால்
இனி உனக்கு பிடிக்காதது
எனக்கும் பிடிக்காது...
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்
சின்னச்சின்ன
ஊடல்கள்
உன்னை
பிரிவதற்கல்ல
நம் காதலை
வளர்ப்பதற்கு
நீ
உடனில்லாத போது
உன் நினைவுகளுடன்
பயணிக்கின்றேன்
விடுவிக்க
முயன்றும்
தோற்றுப்
போகிறேன்....உன்
பார்வை
பிடியிலிருந்து
உன் நினைவுகளோடு பேசிப்பேசி
ஊமை மொழியும் கற்றுக்கொண்டேன்
சோகங்கள்
இதயத்தை
துளைக்கும்
போதெல்லாம்
புல்லாங்குழலும்
கண்ணீர்
வடிக்கின்றது
இவள் மறைய அவன் வர அவன்மறைய
இவள் வரவென்று வானிலும் ஓர்
கண்ணாமூச்சி
நடுநடுங்கும் குளிரில்
அணைத்துக்கொண்டே
உளறாமல் பேசு என்றான்
எனக்காக நீ விட்ட
ஒரு சொட்டு
கண்ணீர்....
உனக்காகவே
வாழவேண்டுமென்று
இதயத்தில்...
உறைந்துவிட்டது
நாணத்திற்கு
விடுதலை
கொடுத்தேன்
வளையல்களும்
தலைக் கவிழ்ந்தது
கரைசேர
துடுப்பிருந்தும்
கரையேறும்
எண்ணமில்லை
நிலவொளியில்...உன்
நினைவுகள்
நிறைந்திருப்பதால்
நீ மௌனமாகும் போதெல்லாம்
என் கவிதைகளும்
கண்ணீர் வடிக்கின்றது...
விழிகளுக்குள்
நீயிருக்கும் வரை
என் கனவுகளும் தொடரும்...
படிக்காமலேயே
மனப்பாடமாகிப்போனது
உன் நினைவுகள்
சிறை
வாழ்க்கையும்
பிடிக்கும்
அது உன்
இதயமென்றால்
கவிதை வரியின் சுவை
அர்த்தம் புரியும் வரையிலாம்.....
உன் விழிக்கவிதையின்
அர்த்தம் புரிந்தபின்னே
நான் சுவைக்கவே
ஆரம்பித்தேன்
ஒரு நொடி வந்து போனாலும்
மனதை ரணமாக்கியே
செல்கிறது சில நினைவுகள்...
நினைவென்றாலே...
அது நீயானாய்...
கெஞ்சலும்
கொஞ்சலும்
காதலில்
அழகு
தொலைவேன் என்று
தெரியும் ஆனால்
உனக்குள் இப்படி
மொத்தமாய்
தொலைவேன் என்று
நினைக்கவில்லை
வார்த்தைகள்
ஊமையாக
உன்வசமானேன்
காதல் மழையில்
குடை நனைய....
குடைக்குள் காதலில்
நாம் நனைகிறோம்.....
நிலைக் கண்ணாடி
என் முகத்தை காட்டினாலும்
மனக் கண்ணாடியில்
உன் முகத்தையே
ரசிக்கின்றேன்
கண்களுக்குள் என்னவன்
கனவே கலையாதே
தொலை(ந்த)த்தஒன்று
உனக்காக காத்திருக்கலாம் தொலையாமல்...
என்னவனின்
அன்பில்
எல்லையற்ற
மகிழ்ச்சியில்
நான்.......
என் வானம் நீ
தேய்ந்தாலும் மறைந்தாலும்
மீண்டும் வலம்வரும்
நிலவாய் நான்...
காதல் தூறல் போட
சட்டென
வானவில்லாய்
ஆனது மனம்...
மனக்கடலில்
நீ குதிக்க
மூழ்கிப்போனேன் நான்
சூடாக நீ தந்த ஒரு கப் காஃபி
இதமாகவே இருந்தது
உன் அன்பில்
உள்ளத்தின் வண்ணமது தெரிவதில்லை
உடைத்து சொல்லும் வரை புரிவதில்லை
பூ போன்ற மனம் என்றாய் ரசித