Logo
உங்கள் கவிதைகளை பகிர ஆப்பை பதிவிறக்குங்கள்!
Logo

தொழில்நுட்பம் கவிதைகள்

*வாயேஜர் – 1 : ஓர் ஒளி நாள் பயணம்* அண்டம் நோக்கி பறந்தது வாயேஜர் ஒன்று, ஐம்பது ஆண்டுகள் நெருங்கி இன்னும் பயணித்துக் கொண்டே, சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறியும் ரேடியோ அலை வழி பூமியோடு உரையாடுகின்றதே! அடுத்த நவம்பரில் ஓர் ஒளி நாள் தூரம் அடையும், மனிதகுல வரலாற்றின் மைல்கல்லாகும், அன்றைய தினம் நாம் கொண்டாடும் சாதனை நாளாகும்! சவால்களைச் சாய்த்துப் பயணிக்கும் அது— கடும் குளிர் தாக்கம், மின்காந்த அலை மோதல், விண்கற்கள் சுழலும் தடைகள், எல்லாம் எதிர்த்து எட்டிப் படைக்கிறது வெற்றி! அதன் இதயத்தில் இயங்கும் நியூக்ளியர் மின்கலம், அளவுக் கருவிகளை இயக்கி, தாரகையிடைவெளியின் மர்மங்களைத் திறந்து, பூமியிலே செய்தி கடத்துகிறது. இருள் சூழ்ந்த வெற்றிடத்தில் ஒளி போல ஒரு தூதன், மனித குரல்களும் இசைகளும் பதிந்த *தங்க ஆவணம்* சுமந்து செல்லும்! ஒருநாள் வேற்றுகிரகவாசிகள் அதனை எதிர்கொள்வார்களோ? பூமியின் சிறு துகளிலிருந்து அண்டத்தின் வனப்பை நோக்கும் மனிதன், தன் கருவியை நட்சத்திரங்களுக்கு அனுப்பி தான் எவ்வளவு சிறியவனும், எவ்வளவு பெரும் கனவுகள் நிறைந்தவனும் என்பதை உணர்ந்தான்! வாழ்க மனிதகுலம் சாதனையோடு, வளர்க மேலும் ஆய்வுகளோடு, அடுத்த தலைமுறைகள் சந்திக்கும் நாளில் விண்மீன் நட்பை வரவேற்கட்டும்! கோ. தியாகு 01/10/25 தங்க ஆவணம்... golden record

#
Thiagarajan G

ஸ்விஃப்ட் விண்கலம் விழுகிறது இருபதாண்டுகள் முன் இறக்கை முளைத்துப் பறந்தது வானவீதியில் பெரும் பறவை. நாசாவின் சாதாரண பறவையன்று, கழுகுப் பார்வை கொண்டு வானவெளி வட்டமிட்டது. கருந்துளைகளின் நிழல் கண்டு, காலக் கோடுகளின் ஒளிக் கூட்டங்கள், மின்காந்த அலைகளின் ரகசியங்கள் விளக்கி வெளிப்படுத்தியது – ஸ்விஃப்ட் விண்கலமே! ஆனால் இன்றோ இக்கலம் சக்தியிழந்ததே! இப்பறவை இனி பறக்க முடியாமல் பூமித் தாய் மடியில் சரிகிறதே, சரிந்து வரும் பாதையில் அழிந்து எரிந்துவிடுமே! அதைத் தடுத்து காப்பதற்காய், லிங்க் எனும் விண்கலம் பாய்ந்து வந்து ஸ்விஃப்டைப் பிடித்து மேல்சுழற்றுப் பாதை கொண்டு புது உயிர் ஊட்டுமே! மீண்டும் பணி தொடங்கும் ஸ்விஃப்ட், நாசா கூடம் பெருமையோடு, வானில் தன்னிச்சையாய் இயங்கி, விண்வெளி அறிவை விரிவாக்கி, மனிதக் கனவுகளைக் காத்திடுமே! விண்வெளி பறவைகள் விழுந்தாலும், விஞ்ஞானிகள் கனவு நின்றிடாது, ஒரு பறவை கருகினாலும் மற்றொரு பறவை பறப்பதே! மனிதனின் ஆர்வம் அழியாதே! கோ.தியாகு 29/09/25

#
Thiagarajan G

பொறியிற் கல்லூரி பெருகும் மாணவர்கள் வரவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் தொழில்நுட்ப மாணவர்களின் எண்ணிக்கை, அரசின் பொறுப்பும் பெருகி தொழிற்சாலைகள் பெருகும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். தமிழ்நாடு தொழில்நுட்பத்தில் இந்தியாவின் உயர்கோப்பை தாங்கும்; புதிய தொழிற்புரட்சி வந்தால் தமிழகம் தலைநிமிரும், தமிழ் மொழி உலகம் முழுதும் வளரும். சென்னையில் வாகன உற்பத்தி, திருப்பூரில் ஆடை உற்பத்தி, நெய்வேலியில் நிலக்கரி மின் உற்பத்தி, மென்பொருள் பூங்காக்கள் — உழைப்பின் வெளிச்சம். ஆய்வுக் கூடங்கள் விரிவடைந்து அறிவியல் ஊக்கமளித்தால், தேக்கம் எதற்கு வேலைவாய்ப்புக்கு? ஊக்கம் ஒன்றே உயிர்மூச்சு. தொழில் பெருக்குவோம் — துயர் துடைப்போம், மாசு நீக்குவோம் — தூய்மை ஆக்குவோம், தொழில் முனைவோர் ஊக்கமளிப்போம், புதிய தலைமுறையை உயர்த்துவோம். உலகம் நோக்கும் நாளை வரும், தமிழ்நாடு தொழில் மையம் ஆகும்; சிந்தனைச் சிறகில் பறக்கும் மாணவர்கள் சாதனை செய்வர் — இயற்கையும் அறிவியலும் இணைந்து இன்னலற்ற இன்ப உலகம் தருவர். கோ.தியாகு 14/09/25

#
Thiagarajan G

வளரும் சமுதாயம் எடுக்கும் ஆயுதம் உயரும் தொழில்நுட்பம் உயரும் மனிதத் திறன் கோ.தியாகு 03/09/25

#
Thiagarajan G

* நடராசா வண்டி ஒரு காலம்! * மிதிவண்டி ஒரு காலம்! * மின்சார வண்டி ஒரு காலம்! * பறக்கும் பயணம் ஒரு காலம்! * ஏவுகணை ஒரு காலம்! * தொழில் நுட்ப வேகத்தில் இது ஒரு பொற்காலம்!

#
InbaKani M

நிலவில் அணுஉலை வான் நிலவில் வெண்மதி மலரும், விண்மீன் தோட்டம் திறக்கின்றது. மனிதன் கனவின் அரண்மனை, நிலவில் நெஞ்சம் நிறைகின்றது. அணுஉலை அங்கு மலர்கின்றதே, ஒளி தரும் பொற்கனல் வீசுகின்றதே. இரவின் இருளைத் துளைக்கின்ற ஒளி, மனிதம் வாழ்வு விளக்குகின்றதே. கிரகம் தாண்டி கிரகமென, கனவுகள் பறக்கும் பாதையிலே. சந்திரன் தாயின் தளபாடத்தில், புதிய பூமி பிறக்கின்றதே. மேலாடை இல்லா நிலவிலே, காற்றாடை நெய்து போர்த்துகின்றோம். ஆறுமாதம் பகலும் இரவும், ஆழ்கடல் அலைபோல் மாறுகின்றது. பாசம் கொண்டு நேசம் கொண்டு, புதிய வாழ்வை விதைக்கின்றோம். அன்பின் விதைகள் முளைத்திட, நிலவில் மனிதம் மலர்கின்றோம். கோ. தியாகு 23/08/25

#
Thiagarajan G

*விண்வெளி சுரங்கப்பாதை* நமது குடும்பம் சூரியக் குடும்பம், குடும்பத்தில் கோள்கள் எட்டு! சூரியனுக்கப்பால் வெற்றிடம் என்றே நினைத்தோம் பல நூற்றாண்டு — அவ்வாறில்லை எனக் காட்டினரே நவீன விண்வெளி ஆய்விலே! மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்தில் முனைவர் சாலா அவர்களும் ஈ-ரோசிட்டா எக்ஸ்ரே தொலைநோக்கியும் கண்டறிந்த சுவடே சுரங்கப்பாதை! வியப்பமாய் — நம் சூரியக் குடும்பம் சுரங்கப் பாதை மத்தியில் சுழல்கிறது! சுரங்கப்பாதை இரண்டு வலையோடு நட்சத்திரத் தொகுப்புகள் இணைகிறது! முன்னால் வெடித்துச் சிதறிய நட்சத்திர துகள்கள் வழியே சூடான பிளாஸ்மா வழித்தடம் — விண்வெளி சுரங்கப் பாதை அப்படியே! முன்னோர் யூகமாய் சொன்னதை இந்நாள் தொழில்நுட்பம் உறுதிசெய்கிறது! விண்கூட்டங்களை இணைக்கும் வழிகள் மனிதரின் அறிவுக்கு வியப்பூட்டுகிறது! ஆய்வு ஆழமாய் தொடர்கையில் அதிசயம் பெருகி ஆர்வம் பெருகுதே! விண்வெளி ரயில் பாதை போல மனிதம் நாளை வேற்று மண்டலம் செல்லுதே! அந்த நாளில் நமது சந்ததிகள் புதிய கோள்களில் வீடுகட்ட, பூமி எல்லைகளைத் தாண்டி புதிய உலகங்கள் வாழ்விடம் ஆக, இன்றைய சுரங்கப் பாதை கண்டுபிடிப்பு மனித குலம் கனவுகள் பறப்பிக்கும் அறிவியல் கதவாய் நிற்கிறது! கோ.தியாகு 19/08/25

#
Thiagarajan G

*ஏன் என்ற கேள்வி* அறிவில் சிறந்த ஆக்கமில்லை ஏன் என்ற கேள்வி! அறிவைத் தூண்டும் தீப்பொறி, அறிவை வளர்க்கும் அம்பலம்! இளமையில் கல் என்றார், புலமையில் ஏற்றம் பெற, ஏன் என்று கேட்க வேண்டும், எதற்கு என்று ஆராய வேண்டும்! ஆப்பிள் ஏன் தோப்பில் விழுந்தது என்று நியூட்டன் கேட்டார், பூமியின் ஈர்ப்பு விசையே அதனை இழுத்தது என்றார்! கடல் நீரின் நிறம் நீலம் ஏன் என்று ராமன் கேட்டார், சூரிய ஒளியின் சிதறலே அதன் காரணம் என்றார்! “பொருளின் தன்மை அறிய ஒளி தான் வழி” என்றார்! “பூமியா சூரியனா மையம்?” என்று கேள்வி கேட்டார் கோப்பர்நிக்கஸ், “சூரியே மையம்” எனத் தீர்வு கண்டார், கலிலியோ தொலைநோக்கி காட்டி உறுதி செய்தார்! ஏன் என்று கேட்காமல் உண்மை வெளிப்படாது! எந்த சொல்லும் சோதனை இன்றி சத்தியம் ஆகாது! ஏன் என்ற கேள்வியாலே அறிவியல் வளர்ந்தது, ஏன் என்ற கேள்வியாலே மனிதன் விண்ணை தொட்டான்! ஏன் என்ற கேள்வியாலே அறிவே பூமியில் வேரூன்றியது! கோ. தியாகு 17/08/25

#
Thiagarajan G

ஒளி மின் விளைவு (Photoelectric Effect) மின்னும் ஒளிக் கதிர் பொருள்மீது பட்டால், விலைமதிப்பான எலக்ட்ரான் பொருளை விட்டு பறந்து செல்லும் — இதுவே ஒளி மின் விளைவு! இதைக் விளக்கியவர் குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்! எலக்ட்ரான் எகிறிப் பாய குறிப்பிட்ட ஒளி அலைவெண் தேவை என்றார்! இதுவே குவாண்டம் விளைவு, ஒளியின் துகள் பண்பு — ஒளியே அலையாகவும் துகளாகவும் இரு பண்பு கொண்ட அதிசயம்! இந்தக் கண்டுபிடிப்பால் நோபல் பரிசு பெற்றார் பேட்டண்ட் அலுவலக உதவியாளராய் இருந்து, உலகின் மகத்தான இயற்பியலாளரானார்! ஒளி மின் விளைவால் சூரிய சக்தி உற்பத்தி சாத்தியமானது. விண்வெளியில் சுற்றும் விண்கலங்கள், இந்தத் தொழில்நுட்பத்தால் தம்மைத் தற்காத்துக் கொள்கின்றன. ஒளியின் சிறு துகள் — ‘போட்டான்’ எனும் மந்திரம், எலக்ட்ரானை தூக்கி வெளியேற்றும் சக்தி, அதற்கேற்ற அலைவெண் சக்தியே! இதுவே அறிவியல் சொல்வது! கோ. தியாகு 16/08/25

#
Thiagarajan G

[12/08, 12:18 pm] Thiagarajan: https://kalkionline.com/lifestyle/home-and-family/5-diy-for-your-living-room-to-look-more-beautiful [12/08, 7:14 pm] Thiagarajan: *துரித ரேடியோ அலைவெடிப்புகள்* (FRB 20240304B) சென்ற ஆண்டு செய்தி வந்ததே— தென்னாப்பிரிக்கா ரேடியோத் தொலைநோக்கி விண்வெளி கருமேகக் கடலை துளைத்துப் பார்த்தபடி மறைந்த இசையைப் பிடித்ததே! பதினொறு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிரபஞ்சத்தின் அலைநீரில் விட்டெறியப்பட்ட ஓர் அலைக்குறி, காலமும் தூரமும் கடந்து இன்று பூமியைத் தொட்டது! அண்டம் பிறந்த இளங்காலத்தில்— தாரகைகள் நடனமாடிக் கொண்டிருந்தபோது, கோலாகலமான ஆற்றல் வெடித்து அலைமோதிய ரேடியோ ஒலி விண்வெளி இருளில் வட்டம் போட்டது! நியூட்ரான் நட்சத்திரங்கள்— பெரும் காந்தச் சுழலில் மூழ்கியவாறு, கோடி சூரியன் சுடரை நெருக்கிப் பிழிந்து ஒலி-ஒளி அலைகளை விண்மீன் நதி வழியே தள்ளின! ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியும் அந்தத் தாரகையைப் பார்த்து அண்டத்தின் மறைந்த ஓவியத்தை விளக்கியது— நிறங்களின் மொழியில்! அலை வந்த பாதை— கோள்களின் கருவூலம், தாரகைக் குழுக்களின் நடுவே சென்று, கருந்துளைகளின் நிழல் ஓரத்தைத் தாண்டி நம் காதில் விழும் இசையாய் மாறியது! இன்று நாம் கேட்கும் அந்தத் தொலைத் தாளம், பிரபஞ்சத்தின் பிறப்புக் கீதமென ஒலிக்கிறது— ஒவ்வொரு அதிர்வும் ஒரு வரலாறு, ஒவ்வொரு ஒலியும் ஒரு அதிசயம்! கோ. தியாகு 12/08/25

#
Thiagarajan G

அறிவியல் ஆழம்* *காணவேண்டுமே* உலகெங்கும் உணர்வுடன் அறிவியல் இலைகள் விரிகின்றன, ஏவூர்தி போல பாயும் ஆய்வுகள் எங்கள் நாட்டு முன்னேற்றம் ஏன் மந்தமாம்? விண்வெளியில் தடம் பதித்தோம், வியாழனையும் வட்டமிட்டோம் – ஆனால் நாட்டுக்குள் நிதி குறைவால் கண்மூடி நிற்கும் கண்டுபிடிப்புகள்! மின்னூட்டம் போல் புத்திசாலித்தனமுள்ள தன்னிகரில்லா இளைஞர்கள் அறிவாற்றலால் நன்நீர் நீர்வீழ்ச்சி போல் பெருகுகிறார்களே – ஊக்கமில்லை என்றே தவமிருக்கிறார்களே! இந்திய உளங்கண்களில் நோபல் கனவுகள் ஒளிந்திருக்கின்றன நிதியுடன் நேர்மை கலந்து ஆய்வுகள் வெற்றியின் உச்சிக்கே செல்லட்டுமே! பள்ளிக்கூட வாசல்களில் பசுமை அறிவு வளரட்டும் ஆய்வுப் பாதையில் ஓர் குழந்தையின் எண்ணமும் தாமரையாக மலரட்டும்! அறிவுடன் பண்பும் இணைந்தால் அரிவின் கனியும் மக்களின் கைகளில்! அந்த நாள் வருமானால் இந்தியா அறிவியலால் இரண்டாவது சுதந்திரம் பெறும்! மக்களும் மெளனமின்றி பங்களிக்க வேண்டும், அறிவியலுக்கான ஆதரவு அவர்களிடமிருந்தே! ஒவ்வொரு வரியிலும் விழிப்புணர்வு விதைத்தால் நாட்டின் எதிர்காலம் அறிவின் கைத்தொலைபேசி! கோ.தியாகு 06/08/25

#
Thiagarajan G

கைத்தொழில் கற்று வளர்ந்தோம் பலவும் பொருளென கண்டோம் காந்தியின் இராட்டை நாட்டை ஆண்டது கதர் ஆடை மேனியில் வெளுத்தது இயந்திரம் இயங்க இடுபொருள் கூடியது உற்பத்தி உயர்ந்து பொருளாதாரம் பெருகிற்று வியக்கும் உலகம் உயர்தொழில்நுட்பம் தந்தது. வறுமை ஒழிந்தது வளமும் செழித்தது. களவும் மறைந்தது கல்வியும் உயர்ந்தது மேலும் மேலும் பொன் கொழிக்கும் பூமியானது கனவும் விரிந்தது கற்பனை நிறைந்தது செயற்கை நுண்ணறிவு செயல்திறன் விண்ணில் ஏற்றியது!!! கோ.தியாகு 06/08/25

#
Thiagarajan G

*நிசார் பூமி நோக்கும் விண்கலம்* இஸ்ரோ நாசா இணைந்து இனிதே தொடங்கிய திட்டம் நிசார் விண்கலம் விண்ணில் பறந்தது – விஞ்ஞான வெற்றி தொட்டது! ஜிஎஸ்எல்வியின் தோளில் ஏறி பூமி சுற்றும் துருவ பாதையில் நிசார் பயணிக்கிறது நிம்மதியாய் – புலனாய்வின் புதிய கணம் தொடங்குகிறது! எரிமலை, மண்சரிவு, பெருவெள்ளம் பேரழிவைக் கணிக்க முன்பே அறிவித்திடும் நிசார் கண் – அச்சத்தில் இருந்து அருளாகும் வரம்! சுனாமி, புயல், சூறாவளி சுழல்காற்று செய்த சீரழிவுகள் முன்னறிவிப்பு வழங்கும் விழிக் கண்ணாடி நிசாரே! இரு ராடார்கள் இணைந்து மிக்றோ அலைகளை அனுப்பி பூமியின் மடியில் படம்பிடிக்கும் – மிகத் துல்லிய உண்மைத் தரவு தரும்! எஸ்பேன்ட், எல்பேன்ட் எனும் இஸ்ரோ நாசா சாதனங்கள் கைகோர்த்து செயல்படும் நேரத்தில் துல்லியத்திற்கே இலக்காகும் நோக்கம்! இந்தியா அமெரிக்கா கைகோர்த்த அறிவியல் முயற்சி பெருமிதமாய் பூமி நன்மைக்கே நிசார் பணி மனித குலத்தின் கனிவான காவலாய்! விவசாய நிலங்கள் நன்கு வளர்கிறதா என அறியும் மண்ணின் ஈரத்தையும் சூட்டையும் சுட்டிக் காட்டும் நிசார் கண்! மழை குறைவுகளும் வெப்ப வெள்ளிகளும் விளைவிக்கும் வேலாண் சிக்கல்கள் தீவிரமாகக் கணிக்கின்ற கண் நம் விவசாயம் வலிவர வாழட்டும்! கோ.தியாகு 01/08/25

#
Thiagarajan G

: *இன்று வருமா? நாளை? வருமா* * வளர்ந்து வரும் கணிணிப்புரட்சி புரட்டிப் போடும் அயல்நாடுகளை! குவாண்டம் கணிணி – குடைந்துவிடும் தரவுகளை அதிவேகத் த்தில் அனுப்பும். அணுவைப் போல அவள் செயல்பாடு அறிவின் எல்லைகளை அகலச் சொலும்! அனைத்து ஆய்வுகளும் உத்வேகமாகும், பிரபஞ்ச இரகசியங்கள் கரையும்; வானுலாவும் தகவல்கள் வலைக்குள் விழும் – அறிவியல் ஆசனம் அடைந்தோம்! பெங்களூரின் குவாண்டம் கணிணி இந்தியக் களத்தில் இறங்கிவிட்டது, ஹைதராபாத்தின் குவாண்டம் கனவு துவங்கி தூபம் காட்டத் தொடங்குகிறது. ஆக்க சக்திக்கும் ஊக்க சக்திக்கும் அனுசரணையாகவும், அழிவு சக்திக்கு எதிரான அமோகவாளாகவும் – குவாண்டம் கணிணி கவனமாக இயக்கி பகிழ வேண்டும்! அணுவைப் போல அவள் செயல்பாடு அறிவின் எல்லைகளை அகலச் சொலும்! சோதிக்கத் தயார் நம் புதுமை தேசம், புதிய கனவுகள் பொங்கும் பாதை இது! அணுவைப் போல அவள் செயல்பாடு அறிவின் எல்லைகளை அகலச் சொலும்! சோதிக்கத் தயார் நம் புதுமை தேசம், புதிய கனவுகள் பொங்கும் பாதை இது! கோ.தியாகு 29/07/25

#
Thiagarajan G

"நாளை இயக்கும் ஹைட்ரஜன் கனவு" இத்தாலி இயக்கும் ஹைட்ரஜன் இரயில் அல்ஸ்தாம் அமைக்கும் காப்புயிர் பாசிலே இயங்கும் புதுமை இத்தாலியில் சுற்றுச்சூழல் பாடலாய் துலங்குமே! நீரில் மறைந்த நீரகவாயுதனை மின்சாரத் துணையால் பிரித்து எடுப்போம் நீரகம் ஓர் ஆற்றல் மூலமே நம்மை நெகிழச் செய்கின்றதே! நீராகமும், காற்றும் கூட மின்கலங்கள் உருவாக்கும் ஊடாட மின்சாரம் விளையும் விசையால் மாசில்லா ரயில்கள் ஓடட்டும்! வெளிவரும் வாயுக்கள் நஞ்சில்லையே நீராவியாகக் காற்றில் கலந்திடுமே! மாசில்லா பசுமை வெளியில் மகிழ்ச்சிப் பயணம் தொடரட்டுமே! ஜெர்மனியில் வந்த தொடக்க நிமிடம் ஐரோப்பியரின் கனவு நடைபாதை சவால்கள் பல இருந்தாலும் கூட அறிவின் துணையுடன் கடக்கத் தயாராய்! வெற்றிக்குப் பின்னால் எண்ணங்கள் வாழும் விலகிடட்டும் புகைமூட்டம், வெப்பம் நாம் சேர்க்கும் ஒரு ஹைட்ரஜன் துளி நாளை உலகை பசுமையாக்கும் தொடக்கம்! கோ. தியாகு 23/07/25)

#
Thiagarajan G

தொழில்நுட்பம் தெரிந்தால் வழிப்பாதை தெரியும் சந்திரனைக் கூட மந்திரம் செய்யாது தந்திரம் செய்து திசை மாற்றலாம் வல்மைதரும் தொழில்நுட்பம் வல்லவர்கையில் ஆயுதம் செய்யும் தொழிலே தெய்வம் தொழில் நுட்பம்தான் மந்திரம் மீனுக்கு நீந்தும் நுட்பம் மானுக்கு ஓடும் நுட்பம் மனைவிக்கு சமையல் நுட்பம் கணவனுக்கு தொழில்நுட்பம் எல்லாம் வாழ்க்கையின் நுட்பங்களே! கோ.தியாகு 22/07/25

#
Thiagarajan G

பிறரை 'ஏத்தி'* விட்டுப் பார்க்காதீர்கள்.. *அடுத்தவரை 'ஏற்றி'* விட்டுப் பாருங்கள்.. வாழ்க்கை அழகாய் இருக்கும்!

#
Karuppasamy

மாவீரனும் தோற்று தான் போவான் உன் புறமுதிகில்...!

#
Karuppasamy

மூளை என்பது பயன்படுத்த வேண்டியது...!!! சுமந்து திரிவதற்கு அல்ல.....!!!

#
Karuppasamy

மார்கழி பனி பொழிவில் இருக பிடித்த தேநீர் கோப்பை அவள்...!

#
Karuppasamy

கண்டேன் கண்ணகியை கையில் ஆலைப்பேசியுடன்.. எரித்ததும் மதுரையை அல்ல எதிராளியின் மனதை..

#
கவிதையின் காதலன்

பொருட்காட்சி... கண்காட்சி கண் கொள்ளா காட்சி கலை நயமிக்க பொருட்காட்சி.... அறிவியல் அரங்கம் ஆங்காங்கே வேளாண்மை சுரங்கம்.... வாண்டுகளுக்கு விளையாட்டு அரங்கம்... வளரும் தலைமுறைக்கு பயிலரங்கம்... பெரியோர்களுக்கு இசை சுரங்கம்.. பெண்மணிகளுக்கு உணவு அரங்கம்.. சந்தோசமாய் வாருங்கள்... சங்கீதம் பருகுங்கள்.. இரவு வணக்கம் ராமசாமி

#
Ramasamy Ramasamy

பார்க்கின்ற அனைத்தையும் மனதிற்கு கொண்டு செல்லவும் கூடாது,, மனதில் நினைப்பது அனைத்தையும் பேசிவிடவும் கூடாது, இரண்டும் பிரச்சனைதான்.....

#
Karuppasamy

கேள்விக்குப் பதில் எதுவென்று தெரியவில்லை என்றால் அது தேர்வு ... கேள்வியே எதுவென்று தெரியவில்லை என்றால் அதுதான் வாழ்வு...!!!

#
Karuppasamy

நீங்கள் அழகு என்றால் என்ன நினைக்கின்றீர்களோ தெரியாது .. யாரைப் பற்றி நினைத்தால் மனதிற்கு இன்பமாக இருக்குமோ அவர்கள் எல்லாம் அழகானவர்கள் தான்

#
Karuppasamy

அடிக்கடி பார்க்கிற எல்லாரையும் நேசிக்க முடியாது ஆனால் நேசிக்கின்ற ஒருவரை அடிக்கடி பார்க்க முடியாது...

#
Karuppasamy

காலக்கெடுப்பில் பகுப்பாய்வு... ஒரே கணத்திலே  பூக்கள் மலர்வது கிடையாது! பல கணங்களில்  சிறிது சிறிதாகத் தான் மலரும்! இன்றையத் தொழில்நுட்பமான காலக்கடப்பில் ஒளிப்பதிவு செய்தால் ஒரே கணத்திலே  பூக்கள் மலர்வதைப் பார்க்கலாம்! ஒரே நொடிப் பொழுதில்  கனவை அடைந்துவிட முடியாது! பல சிறு சிறு முயற்சிகளை  விதைத்தால் தான்  வெற்றியை அடைய முடியும்! வெற்றியை காலக்கடப்பில்  பகுப்பாய்வு செய்தால் இலக்கை அடைய மேற்கொண்ட  முயற்சிகள் அரும்புவதைக் காண முடியும்! ஆனால் அதைக் காண  வெற்றி மட்டுமே  அவசியம் இல்லை! ஏனென்றால் வெற்றி மட்டும் அல்ல, தோல்விகளும் பட்டறிவைத் தரும்! வெற்றியும் தோல்வியும் சேர்ந்தது தான் வாழ்க்கை... இதை அறியாவிட்டால் தோல்வி மட்டுமல்ல வெற்றியும் அர்த்தமற்றுத் தான் போகும்! இரண்டையும் சமமாக பாவிக்கக்  கற்றுக் கொண்டால் வாழ்வின் மர்மம் விளங்கும்! வாழ்வு ஒளி பெரும்! வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறும்!

#
மகுட தாரிணி

விந்தை கதைகள் விக்கிரமாதித்தன் விண் தொட்டு கடல் தாண்டி விதியென பெயரிட்டவையெல்லாம் விஞ்ஞானம் அருகில் வைத்தது விளையாட்டாய் தொழில்நுட்பத்தில்... நிலா அருகில் வந்தது நிலவுக் கதையில் அல்ல நிலவு தொடும் தூரத்தில் தொலைநோக்கியில்... நிலவில் ஆயா சுட்ட வடை நீர்க்காமல் மனதில் வைத்தது நிலவை நோக்கும் போது நில்லாமல் வந்து போனது நிலவும் தொடும் தூரம் தான்.

#
John Sophi

ஆண்ட்ராய்டு போனில் வாழ்வதால் ஆரோக்கியத்தை இழக்கிறோம்... ஆப்பிள் போனின் ஆசையால் ஆசா பாசத்தை தொலைக்கிறோம்...

#
anishya anu
Logo

© Red Nucifera