கோபத்தினால் பேசின வார்த்தைகள் அனைத்தும்
மன்னிக்கப்படலாமே தவிர,
அது என்றும் மறக்கப்படாது...
Siva Ranjani
தெருவோர குழந்தைகளுக்கு அர்ப்பணம்வாடக்கூடாத மென்மலர்கள்
தெய்வம் தந்த வரங்கள் இவர்கள் - மண்ணில்
பூத்த மணம் மாறா மென்மலர்கள்!
வாடக் கூடாத இந்தப் பூக்களிலே
துயரப் பனி வந்து சேரலாமா?
தாய்மடியில் தவழ வேண்டிய மழலைகள் - இன்று
தார்ச் சாலையில் தவம் கிடப்பதா?
கல்விப் பை சுமக்க வேண்டிய தோள்களில்
கல்லும் மண்ணும் கனப்பதா?
அன்பால் நனைய வேண்டிய இளமை - இங்கே
வறுமைக் கண்ணீரில் நனைவது நீதியா?
பிறர் ஏவலுக்குத் துடிக்கும் பிஞ்சுக்கரங்கள்,
தன் உரிமையைத் தேடி ஏங்குவது பாவம் அல்லவா?
நம் பிள்ளைகள் போலவே அவர்களையும் காண்போம்,
அவர்களின் வாடிய முகத்தைத் துடைக்கத் துணிவோம்!
தாய்மையின் அரவணைப்பும், தந்தையின் அன்பும்
ஒவ்வொரு குழந்தைக்கும் சொந்தமாகட்டும்!
வாடாமல் காப்போம் இந்த மென்மலர்களை - என்றும்
வசந்தம் வீசட்டும் அவர் வாழ்வினிலே! இந்திரா ஸ்ரீ
indra sree
உயிர் உள்ளவரை..
நம்முடன் இருப்பது..
கற்ற கல்வி ஒன்று தான்..!"
காடு மலை தாண்டியாவது..
கல்வி கற்று விடு..!"
கட்டியவன் கைவிட்டாலும்..
கற்ற கல்வி கைவிடாது...!!
RK
Kalpana Subramaniam
மற்றவர்களுக்காக
விட்டுக் கொடுப்பதும்,
அனுசரித்து செல்வதும் தவறில்லை..!"
ஆனால்..,
அது எப்போதும்,
நாம் தான் என்றால்..!"
ஒருநாள் நமக்கும் மனம் இருக்கிறது என்பதையே,
அவர்கள் மறந்து விடுவார்கள்...!!
RK
Kalpana Subramaniam
உலகிலேயே சிறந்த
வாசனை பொருள்
உயிர்..!"
அது மட்டும் இல்லையென்றால்,
உடல் நாற்றமெடுத்து விடும்...!!
RK
Kalpana Subramaniam
ஒரு காலத்தில்,
சிரிப்பை வைத்த தருணங்கள்,
இன்று என் நெஞ்சில்,
சுமையாக முளைக்கின்றன..!"
மறந்து விடலாம் என்று எண்ணும்
ஒவ்வொரு முறையும்,
அந்த நினைவுகள்,
இன்னும் தெளிவாகவே திரும்பி வருகின்றன...!!
RK
Kalpana Subramaniam
மனிதத்தை.தொலைத்த
மண்னிது.இங்கு
குண்டுகள்வெடிப்பதும்.மனித
துண்டுகள்துடிப்பதும்
வாடிக்கையாகிப்பபோனது
ர.அஸ்ரில்
இலங்கை
Mohideenabdulmanaff
உறவுகளை தேடிச் செல்வதை விட
நமக்கு நாமே உறவு என்று வாழ்ந்து விடலாம்.
sabari sri lakshmi
உன் கண்களில் பார்த்த அந்த நொடி,
என் உலகமே நிறம் மாறிவிட்டது...
உன் சிரிப்பின் சின்ன ஒலி கூட,
என் மனதில் இசையாக ஒலிக்கிறது...
நீ அருகில் இருந்தால் நேரம் நின்றுவிடும்,
தொலைவில் இருந்தால் நினைவுகள் பேசும்...
என் இதயம் ஒரு புத்தகம் என்றால்,
அதில் எழுதப்பட்ட ஒரே பெயர் — நீ தான்...
உன் காதல் எனக்கு காற்று போல,
காண முடியாது... ஆனால் வாழ விடுகிறது...
Bala Kumar
கல்வியும், மனிதனும்,
அணிகலன் உடுத்தி
களிப்புடன் சுற்றி உலகம் !
உன்னிலு மென்னிலும்,
கலந்து உயிராய்
தெளிந்தேனே ! புத்தியாக !!
David Anthony
சமையல் காற்று
கருஞ்சந்தை செல்கிறது !
பசியால் மக்கள் நோண்புகள் !
அரசுக்குப் புரியலயோ?
நித்தமும் அறுசுவை செல்வர்கள் !
பிணியில் பசி ஏழைகள் !
அரசுக்கு ஓலம் எட்டலையோ?
தணியும் சுதந்திர தாகம் ! என்று
தணியுமோ? இந்த
சமையல் காற்றின் வாஞ்சை?
அரசுகளே பதில் சொல்லுங்கள் !*
David Anthony
அன்பு
எப்போதும்
பிடித்தவர்களிடம்
தோற்றுக்
கொண்டே தான்
இருக்கும்...
Karuppasamy
தனிமை:
என் தவிப்பு அறிந்தவள்
தலைவிறி கோலம் அறிந்தவள்
என் கவலை அறிந்தவள்
கருவிழியின் கண்ணீர் அறிந்தவள்
என் ஏழ்மை அறிந்தவள்
எண்ணத்தின் ஏக்கம் அறிந்தவள்
என் வலிகள் அறிந்தவள்
மனதிலுள்ள வடுக்கள் அறிந்தவள்
மனமுடைந்த நொடியில் மடிகொடுத்த
தனிமை என்னும் தாய் அவள்...!
ஆல்யா
நான் பயணிக்கும் பயணம் எது என்பது எனக்கும்,
மற்றவர்களுக்கும் தெரியாது
அதுவே எனக்கும் மற்றவர்களுக்கும் நல்லது.
dharani dharan
தனிமை:
கருவிழியின் அஞ்சனம்
கரைந்ததில்
ஒளியை மறந்தது
இவ்வுலகா
இல்லை - என்
உடலா...!
ஆல்யா
ஒரே ஒரு பார்வை என்ன சொல்லும்?
தனிமையோடு போராடி எப்படியேனும் வென்று தனக்காய் ஒரு ஜீவன் வராதா! என வெறிச்சோடும் பார்வையில் தான் எத்தனை வலி?
மழலைகளின் குறும்புகளை வாஞ்சையோடு பார்த்து, அவளுக்கும் சிரிக்க வரும் என்பதே மறந்து போய் இந்த மலடான சமூகத்தோடு போராடும் தாயின் பார்வையில் தான் எத்தனை ஏக்கம்?
தேவை இல்லை என சாலையில் வீசும் நாற்றமெடுக்கும் குப்பைகளை அள்ளிசெல்ல கூட மனிதன் வருவான்.ஆனால் என்றேனும் மகனும் மகளும் நம்மை வந்து பார்த்து சிறிதேனும் நம்முடன் இருக்க மாட்டார்களா என விழியால் வாசலையே நிரப்பி இருக்கும் தாய் ,தந்தையின் இருக்கும் பார்வையில் தான் எத்தனை சோகம்?
அந்த குப்பையின் அருமை உணர்ந்தவர்கள் தான் சிறிதும் பிசிறின்றி மானிடராய் பிறந்திட்டவர்கள்.
மனிதனின் வண்ணத்தை சொல்ல வில்லை
அவன் எண்ணத்தை சொல்லுகின்றேன்
நமக்கு நடந்தால் அநீதி என்போம்
பிறர்க்கு நடந்தால் நியாயம் என்போம்
வலி ஒன்றுதான் கனவும் ஒன்றுதான்
மனிதமும் ஒன்றுதான்
மரணமும் ஒன்றுதான்
ஏற்றுக்கொள்ள மட்டும்
மனிதரில் இத்தனை நிறங்களா?
BASKAR BASKAR
இது நாளும் எனைக் காக்கும் இறைவா!
என் பிள்ளையை இல்லை இல்லை உன் பிள்ளையை காக்க ஓடி வர மாட்டாயா....
இடரெதுவாயினும் மாதவனேயவை
உன்னால் நீங்கியதே..
துவாரப யுகத்தில் துயரங்கள் தீர்த்தாய்
யாவரும் மகிழ்ந்தனரே...!!
எல்லை மீறிய துயரங்கள் யாவும்
கலியுகம் காணுது பார்...!!
தொல்லையளித்திடும் முள்ளைமுறித்திட
என்றோ நீ வருவாய்..??
நல்லவரெனவே அடவினில் முகங்கள்
வஞ்சகர் நீயறிவாய்..!!
நிறத்தினை வெளுக்க, நீசரை ஒடுக்க
இன்றே அவதரிப்பாய்...!!
உன்னை நினைத்தே உருகி அழைப்பதுன்
செவிதனை சேரலையோ..??
எந்தை இறைவா புவியின்னல் களைந்திட
பிறந்திடு நீ விரைவாய்..!!
மாதவன் வருகையில் மண்ணுலகின் கொடு
மாயைகள் விலகட்டும்...!!
பூ லோகம் எங்கும் புன்னைகை சிந்தி
இன்பத்தில் களிக்கட்டும்...!!
என் பிள்ளையும், சகோதரியும் மனைவியும் மருமகளும் அம்மாவும் அவருடன் சென்றோரும் உன் ஆசியுடனும் நலத்துடனும் வீடு திரும்ப காப்பாய் இறைவா!!!!
பாஸ்கர்.
BASKAR BASKAR
பொங்கல் திருநாள்.
பூமியும் நீறும்
காற்றும் கதிரும்
உழவனும் அருளும் ஒருசேர பெற்றெடுத்த
உயிர்மனியே
*நெற்கதிரே*
உனக்கொரு திருநாள்
அதுதான் தைத்திருநாளாம் *பொங்கல் திருநாள்*
உயிர்களின் பசியைப் போக்கும் உயிர்நாடி உனை வைத்து சூரியக் கடவுளுக்கு படையலிடும்
உன்னதத் திருநாள்
*பொங்கல் திருநாள்*
தை மகளே வா
உழவன் வாழ்வில் திருப்பத்தைக் தந்திட வா...
பாஸ்கர்.
BASKAR BASKAR
பிடித்த ஒன்றை
பிடித்து வைக்க
எண்ணினால்..
அது நம்
கையைவிட்டு
பிரிந்து செல்கிறது.
சரியென்று; சற்று
ஒதுங்கி இருந்தால்..
அது உதறிவிட்டு
பறக்கிறது.
என்ன செய்வது என
அறியாமல் நான்..?
குயிலின் கவிதை
இணைய மோசடி –செல்வழி
எங்கிருந்தோ ஒருவன் அழைத்தான் கைபேசியில்,
“அமலாக்கத் துறை அதிகாரி” என அறிமுகம்.
கருப்பு பண இருப்பு என குற்றம் சுமத்தி,
ஆதாரம் காட்டி அச்சம் ஊட்டும் நுட்பம்.
போதாத வேளை மருண்டு
உண்மை என்று துவண்டு
காட்டும் ஆவணங்கள் நாட்டும் உண்மை
கேட்பவர் ஏய்ப்பவர் என்றறியாது
ஆசிரியர் முன் நடுங்கும் மாணாக்கரே
தன்னை மறந்து, தன்னுடைய
அறிவே மறைந்து உளறி,
வங்கியின் ரகசிய விவரங்கள் ஒப்படைத்து,
வங்கிப் பணம் இழந்து
பரிதவிக்கும் நிலை வந்ததே!
மெய்நிகர் உலகின் கொடியவர்களின் இடர்,
மிரட்டலாய் வந்து மனதைப் பிளக்கும்;
புகார் செய்தாலும் நடவடிக்கை தாமதம்,
இணையக் குற்றம் கணை தொடுத்த பின்
திரும்புமோ இழந்த பொருள்?
அழைப்பே சட்டமல்ல – அதிகாரமும் அல்ல,
பயமே அவர்கள் ஆயுதம் என்பதை உணர்;
ஒரு நொடி யோசித்தால் தப்பிக்கலாம்,
ஒரு தவறு செய்தால் தவிக்க வேண்டுமாம்.
அறிவே கவசம் – எச்சரிக்கையே ஆயுதம்!
எச்சரிக்கை! எச்சரிக்கை! எச்சரிக்கை!
உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதும்,
துச்சமெனத் தோன்றும் பேச்சுக்கு
இச்சையின்றி இணங்கிடோம் –
ஒருபோதும் இடங்கொடோம்!
கோ.தியாகு
16/12/25
Thiagarajan G
மார்கழித் திங்கள்
குளிர் ஊட்டும் மாதம் மார்கழியே
இதமான காலை வேளை
இதயம் தொடும் இன்னிசை
காதில் வந்து பாயுதே
கன்னியர் வரையும் வளைகோலம்
துலங்கும் பரங்கிப் பூக்கள்
வரவேற்கும் வாயில் படியில்
மஞ்சள் முகத்தாள் முகிழ்கிறாள்
அஞ்சனம் தீட்டிய அன்னம்
பஞ்சுபோல் பாதம் பதியும்
மிஞ்சியின் மென்மை ஒலியுடன்
தஞ்சம் என வந்ததே மார்கழி
கோவில் மணி ஓசையும்
கூடி நிற்கும் அன்பர் கூட்டம்
பாடும் அவர்தம் பாட்டும்
பதிக்கும் மாதம் மார்கழியே
செவ்வந்திப் பூக்கள் சிரிக்கும்
மகிழம் பூக்கள் மணம் தரும்
ஊதாப் பூக்கள் குழல் இசைக்கும்
பூசணிப் பூக்கள் பூத்திடும் மார்கழியே
திருப்பாவை திருவெம்பா
திருவாயில் திறக்கும் நேரம்
உறங்கிய உள்ளம் விழித்து
உயிரே பக்தியாய் உருகும்
கோ. தியாகு
15/12/25
Thiagarajan G
சமத்துவமின்மை
நாட்டில் வளரும் சமுதாயம்
நாகரிகம் பெற்று உயர்கிறது
அறிவாலும் பண்பாலும் வலுப்பெற்று
வளர்ச்சி உயர்ச்சியாய் மாறுகிறது
நாட்டின் நிலவும் செல்வமெல்லாம்
சமமாய் சென்றே கரைசேர வேண்டும்
உழைப்பால் வந்த வருமானம்
உரிமையாய் அனைவர்க்கும் சேர வேண்டும்
ஏழ்மை என்ற இருள் சூழல்
சாய்ந்து சிதைந்து போக வேண்டும்
உழைக்கும் வர்க்கம் உலகில்
ஓங்கிப் பெருகி வளர வேண்டும்
மதுவில் மூழ்கி உடலைக் கெடுத்து
வரையறையில்லா சொற்களில் சிதறி
நேரத்தை மாய்த்து வாழ்வின் வேகம் தேய்ந்து
வீணாகாமல் வாழ்க்கை ஒளியேற்ற வேண்டும்
ஊரும் உலகமும் போற்றிப் புகழ்ந்திட
அறிவியல் கூட்டி ஆற்றலைப் பெருக்க வேண்டும்
இன்னும் எத்தனையோ பாதைகளில்
சிந்தனை செய்து உயர வேண்டும்
கல்வி என்ற ஆயுதம் கையில் கொண்டு
சம வாய்ப்பை சமமாக விதைக்க வேண்டும்
அரசியலும் நிர்வாகமும் நேர்மை பெற்று
ஒவ்வொரு குரலும் மதிப்புற வேண்டும்
இந்தியாவில் நிலவும் சமத்துவமின்மை
விரைந்து குறைய வேண்டும், முன்னேற வேண்டும்
அனைவருக்கும் செல்வமெல்லாம்
தண்ணீர்போல் பாய வேண்டும்
ஒவ்வொரு இந்தியனும் கனவுகாண
தடைகள் அல்ல, படிக்கட்டுகள் வேண்டும்
சிலர் உச்சியில் நிற்பதைப் பார்த்து
பலர் தரையில் தங்கிவிடக் கூடாது
திட்டங்கள் மட்டும் போதாது
திசையும் நடைமுறையும் மாற வேண்டும்
சிந்தனை மாறி, செயல் மாறி
சமத்துவம் கதவுதட்ட வேண்டும்
சந்தர்ப்பங்கள் பல உருவாக்கி
அவற்றை பயனாய் மாற்ற வேண்டும்
உண்மையைச் சேர்த்து
நாளும் பகலும் உழைத்தாலே
சமத்துவமின்மை
நாட்டினின்று நீங்கும்!
கோ. தியாகு
13/12/2025
Thiagarajan G
வாக்காளர் பட்டியல்
வழியும் வரும் வாக்காளர் பட்டியல்
வீடு தேடி வந்து சேர்ப்பாரோர்
ஏடெடுத்து கொடுப்பார், பின் ஒதுங்கிச் செல்வார்
மூன்று நாளில் ஒப்பமிட்டு ஒதுங்கிடுவார்.
வாக்காளர் படிவம் புரியாத புதிரே
படிக்கவும் கடினம், புரியவும் வழியில்லை
படிவம் கொடுத்தவர்க்கும் தெளிவு சிலவே
வலையத்தில் வல்லோரும் வழி காணமாட்டார்.
தத்தளிக்கும் சீர்திருத்தம் வருத்தமே
தப்பிச் செல்வோர் எத்தனையோ, தத்தளிப்போர் மேனும்
முதல் பட்டியல் வருத்தக் கதையைச் சொன்னால்
இரண்டாம் பட்டியல் சோகக் கதையாய் நடந்திடும்.
பாமரரில் இருந்து பண்டிதர் வரை
தாமரைத் தட்டில் மிதக்கும் தங்கதிர்போல்
அல்லி மலர் போலாகப் பதிக்கும் பெயர்கள்
அழகாக இருந்தால் அரசு கூட உயருமே.
கணினியில் தோன்றிடும் கணக்கினும் கடினம்
காணாத பெயர்கள் கானல்போல் மறையும்
ஒத்துப்பார்க்கும் ஓட்டமெல்லாம் ஊசலாட
உரிமை எனும் உரம் கூட உதிர்ந்து போகாதோ?
கோ. தியாகு
07/12/25
Thiagarajan G
தமிழர் சிறப்பு
நாவில் நின்ற நற்சொற்கள் நழுவி விழும்
நல்மாந்தர் உள்ளத்தில் ஊறும் அன்பு;
தேன் மதுரத் தமிழால் வானுயர வாழ்த்துவார்
வான்புகழ் வள்ளுவன் வாழும் பண்பாளன்.
பாவலர் நாடும் பைந்தமிழ்க் காவலன்,
தேன் மலர் நாடும் வண்டினைப் போல்;
பூமலர் கூட்டம் வண்ணம் சூட்டி அழைக்க
மாவீரன் ராஜராஜன் வீறு கொண்டு வந்தான்.
நாட்டில் வளம் பெருக்க நாளும் உழைக்கும்
ஏர் உழவர் வாழ்வு தன்னை ஏற்றம் பெருக்கும்;
போற்றும் உயர் மாந்தர் நிலை கூட்டும்
மாற்றமெனும் மாவீரன் வந்தெழும் எண்ணம்.
உயர்தமிழ் மண் எனும் ஊற்றில் நின்று எழும்
பாரதப் பண்பின் பழமொழி பேசும்;
அன்பு விதை விதைத்திடும் தமிழ்ச் செல்வன்
ஆண்டாண்டு வாழ்ந்திடும் ஆருயிர் பண்பாளர்.
கோ.தியாகு
06/12/25
Thiagarajan G
மனிதநேயம் மலர்கின்றது
டிட்வா புயல் தாண்டியதும்
துயரத்தின் தடங்கள் நிறைந்ததுமே—இலங்கை
பெருந்துயரில் பல உயிர்கள்
பொலிவிழந்தன மலைச் சரிவில்.
இலங்கை நிற்கின்றது நடுங்கி,
இந்தியர்கள் நீட்டுகின்றனர் கைப்பிடியாக,
பாகிஸ்தானும் இணைகிறதே
மனிதநேயம் தேச எல்லை பார்க்காததே.
உணவு, மருந்து தேவைப்படும் நேரத்தில்
உதவி கேட்கும் கதவுகளில்
அன்பின் ஒளி வீசிட—
உலக நாடுகள் திறந்தன தங்கள் உள்ளங்களை.
சீனா, ஜப்பான் வரிசையில் வந்து
துயரத்தில் தள்ளாடும் இலங்கைக்கு ஆதரவாய்;
நன்றியின் கோடி மலர்களை
நாட்டினர் நெஞ்சகத்தில் பூக்கச் செய்தன.
பேரிடர் தாண்டி மேலெழும்
மனித குலத்தின் மறுபிறப்பு இதுவே;
அழிவின் நடுவிலும் உதயமாவது
அன்பின் விடியல்தான் என்பதை
உலகம் மறுபடியும் உணர்கிறது.
தேடி வந்து அமிர்தம் தருவது
சில சமயம் கொடுங்காற்றே ஆகினும்,
அது நீக்கும் காயங்கள் மீண்டும்
வலிமை தரும் வீர மனத்தைக்
தூண்டிச் செல்லாமலா இருக்கும்?
மனிதநேயம் மலரட்டும்—மழைபோல்,
தேச எல்லை தாண்டி ஓடட்டும்—நதிபோல்,
காயம் காணும் பூமி முழுவதும்
அன்பின் ஒலி ஒலிக்கட்டும்.
கோ. தியாகு
02/12/2025
Thiagarajan G
யோசித்து பார்த்தால்
இங்கு எனக்கான
கவிதைகளை எல்லாம்
நானே தான் எழுத
வேண்டி இருக்கிறது
Karuppasamy
சீனாவின் ‘த்ரீ கோர்ஜஸ் ' அணை அற்புதமே'
மனிதனின் அற்புத ஆற்றல்
நாளுக்கு நாள் பெருகுதே!
அறிவியல், பொருளியல், சமூகவியல்
ஒன்றென இணைந்து தரும் எழுச்சி!
சுற்றுச்சூழல் மறைய விடாது
புதுப்பிக்கும் ஆற்றலை போற்றியே
நீரின் பலத்தால் மின்சக்தி கண்டான்
இயற்கை சக்தியையே
உலகுக்குப் பரிமாறினான்
யாங்சே ஆற்றின் மார்பின்மேல்
த்ரீ கோர்ஜஸ் — சீன தேசத்தின்
வானம் தொடும் அணைக்கட்டாய்
அதிசயம் விரித்தான் மனிதன்!
மாபெரும் நீர்த் தேக்கம்
புவியின் சமநிலையைச் சற்றே அசைக்க
வளர்ச்சி ஒரு புறம்
தளர்ச்சி மறுபுறம்…
கரையோரக் கிராமங்கள் கரைந்த வரலாறு
புலம்பும் பறவைகள் இழந்த தாயகம்
மனித மேதைமையின் மகத்துவத்தோடு
முறியாதிருக்க இயற்கை நெஞ்சமும்!
வளர்ச்சியும் வேண்டும்
வாழ்வும் வேண்டும்
இயற்கைக்கு இடர் இன்றி
பொருளாதார வளர்ச்சி காண
உலகமே விழிப்புடன் முயல்வோம்!
கோ. தியாகு
24/11/25
Thiagarajan G
*கண்ணீர் அஞ்சலி*
நண்பா நமன்ஸ்யால்
தாயைப் போல் தாய் நாட்டை சுவாசித்தவனே...
தாய்நாட்டின் பெருமையை அயல் நாட்டில் விதைக்க முற்பட்டவனே...
உன் உயிர் கொடுத்து அயல் நாட்டிலும் பார்வையாளரைக் காத்தவனே...
காற்றோடு கலந்த உன் சுவாசம்...
கண்ணீராய் வடிந்த உன் பாசம்..
உலகினைக் கடந்து போனாலும்...
உறவினைக் கடந்து போனாலும்...
ஒரு நல்ல மனிதரை
உன்னோடு பயனித்தவர்கள் மறந்து போவார்களா...
மறந்து போனது இந்த சமுதாயம்...
ஒரு கலைக் கூத்தாடிக்கு கொடுக்கும் மராயாதையை...
தாய் நாட்டைக் காக்கும் மாவீரன் உனக்களிக்க மறந்து போன கேடு கெட்ட சமுதாயம்...
விடு... நானளிக்கிறேன் நண்பா தலை வணங்கி ராயல் சல்யூட்...
பாஸ்கர்.
BASKAR BASKAR
கழநி வாசல் காக்க
விறுவிறுப்பாய் விதைவிதைத்து
கழநியில் கன்னிநீர் சொரிய,
உழவுசனம் ஊன்றிய நாற்று
வானம் பார்த்து வளர விரும்பும்.
உரம் ஊறி உயிர்ப்பெடுத்த
உரமான மண் தன் நெஞ்சில்,
உறவாக மண்ணுயிர் உழலும் பயிருக்கு
உழவன் உற்சாகம் மணி முழிக்கும்.
உயிரான நெல்மணிகள் — அவன் கண்மணிகள்;
புல்-பூச்சி பகை காத்து,
நீர் சேமித்து நீர் சுரந்து
உணவாய் உலகை வளர்க்கும்.
மழை மறந்தாலும் காலம் சுருங்கினும்,
காற்றழுத்தம் மிகை எதிர்த்தாலும்,
மிடிமுருவாய் நிலைகொண்டு
துயர் நீக்கிடும் விவசாயி.
மண் பேசுமே அதன் உள்ளோசையில்,
“மனிதா, நீயும் நானும் ஒருஉயிர்” என;
விந்து முதல் உணவாகும் வரை
வாழ்க்கை வட்டம் நெஞ்சில் சுழல்கிறது.
அந்நெல் மணம் வீசும் நேரம்
அவனின் நெஞ்சே பண்டிகை ஆகும்;
கழநி வாசல் காக்கும் காப்பாளன்,
காலத்தின் காவலன் — விவசாயி.
கோ.தியாகு
17/11/25
Thiagarajan G
காவிரி கண்ணீர் வடிக்கிறாள்
காலந்தொட்டு பாலூட்டிப்
பேணி வளர்த்த காவிரி அன்னை
அணைமூடி கட்டுண்டவளாய்
கண்ணீர் சிந்தித் தவிக்கிறாள்;
கைகட்டி நிற்கும் நீதி—
கண்டும் காணாத பாவி மனிதன்.
சோழப் பேரரசு போற்றிய தாய்,
இசை வளர்த்த தஞ்சையின் தாய்,
சோழ வளநாடு சோறூட்ட
வாழ்வு வழங்கிய பேரன்புத் தாய்—
காவிரிதான் எங்கள் காவியம்.
குடகுமலையின் மடியில் பிறந்து,
சிவசமுத்திர அருவியாகி,
அகண்ட காவிரியாய் செழித்து
தமிழகத்தைத் தழுவும் பொன்னி நதி—
காண்க! அவளின் பெருக்கு இன்றோ
அவசம் கொண்ட ஓர்நீராய் குறைகிறதே.
அவள்கண் நீர் தடுத்து நிறுத்தி
அழுகை ஆற்றைக் கேளாதோ?
வெள்ளம் கொடுத்து வளம் தரும்
தாயின் நெஞ்சம் தளர்கிறதே;
வெட்டவெளி வயல்களில்
எரிந்த பசுமை பேசுகின்றதே.
மனிதன் இயற்றும் சட்டம் இன்று
இயற்கை நியதியை மீறுகின்றது;
தானே செதுக்கிய பாதை மாறி,
இயற்கை தடுமாறி நிற்கின்றது.
இதன் பயனை யார்தான் தாங்குவர்?
இதன் விலையை யார்தான் காண்பர்?
கோ.தியாகு
14/11/25
Thiagarajan G
மேகதாது அணை அனுமதி
காவிரித்தாய் குடகுமலையில்
பொங்கி பாய்ந்து வரும் நேரத்தில்,
தமிழர்களின் தாகம் தீர்க்க
ஓடோடி வரும் நீர்ப்பாய்ச்சல்—
தடுப்பணைக் கட்டி தடுக்கின்றது
மேகதாதுவின் புதிய காயம்.
கர்நாடகா கவலை தீர்க்க
தமிழனின் கவலை பெருகுதே;
உச்ச நீதிமன்ற உத்தரவு
புதிய அனுமதி அளித்ததோ,
கடை வழி நீர்வரத்தை
இடைமறிக்கும் தீர்ப்பதோ?
ஜூன் முதல் செப்டம்பர் வரை
காவிரியின் கரைபுரளும் அன்பை—
அதிகாரிகள் அரைக்குறையாக்கி
அழுகின்றார் டெல்டா நிலம்;
அழிவா வளர்ச்சியா என்று
காலம் கேட்டு நிற்குதே.
காவிரி ஓர் உயிராட்டம்,
கரையோரம் வாழ்வாட்டம்;
ஒரு அணை தீர்ப்பதல்ல,
நிலம் முழுதின் நீதியாட்டம்.
விழித்தெழுந்து உபரி நீர் காப்போம்,
கொட்டும் வயல்கள் சொட்டும் பாசனம்;
மழைநீர் சேகரிப்பு முறையும்
கடல்நீர் சுத்திகரிப்பும் சேர்ந்து—
உபாயங்கள் அபயம் தரும்,
சவால்களை ஏற்று சரித்திரம் படைப்போம்.
கோ.தியாகு
13/11/25
Thiagarajan G
அன்புச் சக்கரம் சுழலும்
உயிர்கள் மலர்வது உறவாலே,
உறவும் வளர்வது அன்பாலே;
பிறவி இணைவது அதனாலே,
கலையும் உயிர்கள் வெறுப்பாலே.
உரிமை கோரும் உறவாலே,
உணர்வும் பொங்கும் அதனாலே;
உணர்வும் தாண்டி வெறுப்பாகும்,
அன்பை மறந்தார் அழிவோடே.
இன்பம் பொங்கும் அன்பாலே,
துன்பம் மறையும் துணையாலே;
மனதாலே காண்போம் சுவர்க்கம்,
கனவிலும் நினையாதே தொடும் துன்பம்.
அன்பே விதை நம் வாழ்விலே,
அதுவே மரம் நம் உறவிலே;
நிழலாகும் நட்பினிலே,
நிம்மதி தரும் இதயமிலே.
அன்பே ஒளி நம் விழியிலே,
அதுவே நிழல் நம் நெஞ்சிலே;
அன்பே உயிரின் ஆதாரமே,
அதுவே உலகின் ஆறுதலே.
உலகம் தழைக்கும் உரமான அன்பாலே,
உயிர்கள் வாழ்வதற்கே சூழல் வளரவே;
தினமும் போராடும் பூவுலகமே,
அன்பை விதைப்பாய் வளர்ப்பாய்.
கோ.தியாகு
11/11/25
Thiagarajan G
கைத்தலம் பற்றினேன்
காலம் என்னும் காற்றில்
ஓடம் தள்ளாடும் வேளையில்,
துடுப்பெனும் கைத்தலம் பற்றி
அக்கரையை அடைந்தேன் அமைதியாய்.
நிலவின் கைத்தலம் பற்றி
நீந்திடும் அலைகள் போல,
நிஜத்தின் கைத்தலம் பற்றி
அறியாமை ஆற்றைக் கடந்தேன் தெளிவாய். ச வீணையின் கைத்தலம் பற்றி
நாண்தொடர் இசையில்ச நெகிழ்ந்தேன்,
மனமென்னும் தேயிலைப் பற்றி
மனிதநேயம் துளிர்த்தேன் பசுமையாய்.
மனையாள் கைத்தலம் பற்றி
இணைவாழ்வின் சுவை கண்டேன்,
இதமான குழாம் சூழ்ந்து
இளநீரின் இனிமை பருகினேன்.
இயற்கையின் கைத்தலம் பற்றி
பசுமை புன்னகைத் துளி சேர்த்தேன்,
புயலின் கைத்தலம் தொட்டும்
புதிய நம்பிக்கை விதைத்தேன்.
கோ.தியாகு
09/11/25
தேயிலை.....நறுமணம்
Thiagarajan G
அமைதியான இரவினிலே
அமைதியான இரவினிலே கேட்கும்
இனிமையான பாடல் ஒன்று,
சுமையான மனதிற்கே அருமருந்தாய்,
கனிவான சொல் தரும் அமைதியான இரவு.
இரவின் அமைதியில் இயற்கை உறங்கும்,
புள்ளினங்கள் கூண்டுக்குள் ஒடுங்கும்,
மேகத்தின் மடி தழுவும் நிலவு,
மென்மையாய் புன்னகைக்கும் கடல்.
அலைகள் அடங்கும் ஆழ்கடலில்,
இருள் விழுங்கும் பிரகாசமான பகல்,
மருளில் மறையும் நினைவலைகள்,
ஊரடங்கும் அமைதியான இரவில்.
பொய்கள் முடங்கிப் போகும் நேரம்,
போராட்டங்கள் புருவ வில்லாகும்,
நடமாட்டங்கள் நிம்மதியாய் நின்றிடும்,
அமைதியான இரவு ஆட்கொள்ளும்.
அமைதியின் அரண்மனையில் மனம் தங்கும்,
சொற்கள் இல்லா சிந்தனை மலரும்,
உள்ளம் தேடும் உண்மை வெளிச்சம்,
அமைதியான இரவில் பிறக்கும்.
கோ.தியாகு
08/11/25
Thiagarajan G
நிலாவானின் அரசி நீ, வெண்ணிலவே,
கார் இருள் போக்கும் ஒளிச்சுடரே.
கோடிக் கண்கள் உன்னைப் பார்க்க,
உன் குளிர் ஒளி உள்ளம் ஆட்க!
அலைகடல் உன்னால் ஆடுமே,
கவிஞன் கவிதை பாடுமே.
குழந்தை உன்னைக் கண்டு கை நீட்ட,
காதலர் உன்னில் காதல் கூட்ட!
தேய்ந்து வளர்வாய், பிறை முதலே,
முழுமையாய் மின்னும் பொற்கலமே.
மௌனமாய் நீயும் காண்கிறாய்,
உலக ரகசியம் யாவையுமே.
மேகத் திரைக்குள் ஒளிந்திருந்தாலும்,
மின்னும் உன் அழகு குறையாதே.
பூமியின் தோழியே, துணைவி நீயே,
பகலின் கனவை இரவில் நீ தீட்டு!
indra sree
இருவழிச்சாலை வழி காட்சி
இருவழிச்சாலை வழி
ஊர்பக்கம் போகையில்,
இருவிழிச் சாலை திறந்து
பசுமை வயல்கள் வரவேற்றதே.
களைஎடுத்துச் சிரிக்கும் மக்கள்,
மண்ணின் நெஞ்சில் விதை நட்டு;
நெற்பயிர் நிமிர்ந்து சொல்லுது —
“உழவரே… நாம் வாழ்வின் மூச்சே!”
வரப்பு மேல் கருவேலம்,
கழனி வழி நீர் பாய்கிறது;
வளரும் பயிர்கள் காற்றோடு
வாழ்த்து பாடி குனிகின்றது.
தாமரை இலை குளத் தடவில்
அலைகள் ஆடும் தாலாட்டில்;
பூப்பொட்டு நெளிந்து திறந்ததும்,
வானம் கண்ணாடியில் பிரதிபலிக்குது.
கோழியின் கூவும் நேரம்,
மரக்கிளை மேல் சூரியன் தானம்;
காற்றில் ஜல்லிக்கட்டு தாளம் போல
நெல் அலைகள் ஆடும் ஆனந்தம்.
கோ. தியாகு
03/11/25
Thiagarajan G
அட்லஸ் வால் நட்சத்திரமா?
கண்ணிலே பிறந்து விண்ணிலே மறைந்த
அட்லஸ் — விநோத வான்பருந்தே!
இருநாளில் சூரியன் அருகில்,
என்ன நிகழுமோ உனக்கு?
உன் வால் திசைமாறியது ஏன்?
யார் உன்னை ஏவினார்?
யார் உன்வாலைத் திருப்பினார்?
விண்மீன் வித்தை விசித்திரமாயிற்றே!
ஹார்வார்டு அறிஞர் அவி லோப் கூறுவார்
அரிதான அட்லஸ்,
அயல் கிரக தூதனாக வந்திருப்பான்;
அதிரடி அலைகளாய் தாக்கி,
அனைவருக்கும் எச்சரிக்கை ஒலியிடுவான்!
முப்பத்தி மூன்று பில்லியன் டன் எடையுடன்,
கருப்பு அன்னம் போல் மறைந்து வரும்
வானின் ட்ரோஜன் குதிரையே நீ!
அறிவியலின் கருவறையில்
மாயம் புனைந்த மாயவன் நீயே!
விண்மீன் மையம் குலுங்கும் வேளையில்
விழிகள் வியப்பாய் விரிகின்றன,
தொலைக் கண்களின் வழி உன்னைப் பார்க்க
மனித குலம் மூச்சை அடக்கி நிற்கின்றது.
அட்லஸ்! உன் பயணம் எச்சரிக்கையா?
அல்லது புதிய உலகின் அறிவுறுத்தலா?
எது வந்தாலும் நாமிருப்போம் ஒன்றாய்,
அறிவும் ஒற்றுமையும் ஆயுதமாய்,
நம் பூமிப் பந்தை காப்போம்
அன்பின் வட்டமாய், ஒளி வட்டமாய்!
கோ. தியாகு
27/10/2025
Thiagarajan G
புதுமை உலகம்
மண்ணால் உருண்டை செய்து
மனதுக்கு விருந்து படைத்தான் —
யாரோ அவன்!
உருண்டைகள் பல படைத்தான்,
உணர்ச்சியும் அதில் சேர்த்தான் —
யாரோ அவன்!
கண்ணுக்கு விருந்து படைத்தான்,
காதலையும் சேர்த்தான்,
பூக்களையும் பல படைத்தான்,
பூவைப் பெண் கூந்தலும் படைத்தான்,
தேனையும் தந்து வண்டையும் படைத்தான் —
யாரோ அவன்!
உணர்வுகள் பல படைத்தான்,
உணர்வுக்கு மொழிகள் படைத்தான்,
உணர்வுகள் ஆள ஆள்படைத்தான்,
இன்பமும் துன்பமும் சேர்த்தான் —
யாரோ அவன்!
மரங்களும் மலைகளும் அவனது படைப்பு,
அருவிகளும் ஆறுகளும் அவனது இசை,
நீருக்கு உயிர் தந்தான்,
வளி படைத்து சுழலும் படைத்தான்,
சுழலில் நீர் பிறக்கச் செய்தான் —
யாரோ அவன்!
நுண்ணிய அணுவிலும் அவன் தங்கி,
எண்ணத்தில் எழுந்து உயிர் தந்தான்,
உணர்வின் வடிவமாய் நாமாகி,
நாமே அவனாகி வாழ்கின்றோம்!
அவன்தான் நானோ? நான்தான் அவனோ?
கண்ணில், காதில் உருவாகி,
மனதில் அறிவில் புகுந்து,
கருவாகி உருவாகி வந்தானோ —
அவனே அவன்தானோ?
கோ.தியாகு
24/10/25
Thiagarajan G
அதிகமான
"நல்லவர்கள்"
இருக்கிறாறார்கள்
"வாய்ப்புகளை"
பயன்படுத்த பயந்து ....
Karuppasamy
மழை எச்சரிக்கை
வங்கக் கடல் பொங்குது,
காற்று மண்டலம் சுழலுது,
வலைக்குள் பிடிபட்ட மீன்போல்
ஈரக் கால்கள் அதில் சிக்குது.
கடலோரம் கலக்கம் நிறைந்து,
அதிர்ச்சி கண்ணீர் துளிர்கிறது,
எச்சரிக்கை கொடிகள் பறக்க,
இயல்பு வாழ்வு தடுமாறுது.
மின்கம்பிகள் தரைபடும்,
எச்சரிக்கை என்றும் வேண்டும்,
மரங்கள் தரைமீது சாய,
பள்ளத்தில் வெள்ளம் சேர,
உள்ளத்தில் அச்சம் பெருகுது.
மழைநீர் மேலாண்மை செய்து,
வழி வகுப்போம் புத்துணர்வுடன்,
களை எடுப்பது போல நாம்,
பிழை நீக்கி உயர்வோம்.
தூர்வாரி ஆழப்படுத்தி,
கரையுயர்த்தி இணைப்போம்,
ஏரியும் குளமும் ஒன்றிணைத்து,
ஆறு கால்வாய்கள் திருத்துவோம்.
மழை பொழியும் பொழுதினிலே
மனம் பதறாது நிற்க வேண்டும்,
எச்சரிக்கையின் ஒளிவிளக்கில்
உயிர் பாதைகள் காக்க வேண்டும்.
கோ.தியாகு
21/10/25
Thiagarajan G
பட்டாசு சத்தம் ஓயவில்லை
என்னதான் வான்மாசு மேலிட,
மாறவில்லை மகிழ்வொளி,
வான் தேவதைகள் போல் திகழ்ந்த
வண்ண தீப்பொறிகள் துளிர்த்தன.
ஒலிச்சத்தம் புகை மண்டலம்,
ஓங்கி மழைச் சத்தம் தாழ்ந்ததே,
சிறுவர்கள் சிரிப்பொலிகள் இணைந்து,
திங்களில் தீபாவள் பொங்கிற்றே!
இருக்கின்ற மகிழ்ச்சிகளை அவிழ்த்து,
வரும் நாளில் வலுசேர்த்து,
உரம் ஏற்றி உயர்வோம் நாம்,
தரம் பல தந்து வளர்வோம்.
களைத்துப் போன உழவர்கள்,
அயர்ச்சி நீக்கும் தீப நாழி,
விளைச்சலை பெருக்கும் பெயலே,
முயற்சிக்கு உறுதுணை நாளே!
மின்னும் தீப்பொறி மேகத்தில் கலந்தது,
மழைத்துளி நெஞ்சை நனைத்தது,
இருளில் ஒளி பிறந்தது போல்
தீபம் நம்பிக்கையை வளர்த்தது.
கோ.தியாகு
20/10/25
Thiagarajan G
சாம்பலாகி
சாம்பலாக்கும்
வரம் பெற்றது
சிகரெட்....
Karuppasamy
பண்டிகைத் திருநாள்*
பண்டிகைத் திருநாள் நெருங்கி வரும் நன்னாள்
தீபம் ஒளிரும் தீபாவளித் திருநாள்
கொண்டாடும் ஆசையில் குவிந்திடுவர்
பேருந்து, இரயில் நிலையங்களில்.
சாலைகள் நெரிசலாய் பயணம் தொடர்வர்
சேலை தேர்வில் பெண்கள் ஆக்கிரமிப்பர்,
அழகு சேர்த்த அலங்கரித்த கடைகள்
அனல் பளிங்கென ஒளிர்கின்றன.
கவனத்தில் பணியில் மூழ்கியோர் கூட
மகிழ்ச்சியில் மனதைப் பதிக்க வருவர்
உலகெங்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து
உவகையோடு தீபத் திருநாள் கொண்டாடுவர்.
சிறுவர்கள் சிறுமியர் ஆவலுடன்
புதுமணத் தம்பதிகள் பூரிப்புடன்
உற்றார் உறவினர் உவகையுடன்
அன்பு பொங்கும் ஒளிநாள் இது.
இருள் நீக்கும் ஒளி பிறக்கும் தீபம்
இதயம் குளிர்க்கும் அன்புத் தீபம்,
ஒளிரட்டும் ஒவ்வோர் இல்லமுமே
இணக்கமாய் வாழும் உலகமாய்!
கோ. தியாகு
18/10/25
Thiagarajan G
கல்யாணம் பண்ணவங்க கூட மட்டும் பழக கூடாது புருஷன் கூப்பிட்டானு நடுத் தெருவுல விட்டுட்டு போயிடுவாளுங்க
Karuppasamy
நடைப் பயிற்சி
எட்டி நடை போட்டு
எட்டுப் போட்ட பாதையிவ்
நடந்து
கட்டிய கால் தசைகள்
விட்டு விட்டு உறுதிப்பட்டது
பட்டுப் போன்ற இதயமே
லப்டப் எனக் குரலிட்டது.
குழாய்களில் இரத்தமோ
பீறிப் பாய்ந்து மகிழ்ந்தது.
கையை மாறி மாறி வீசி
தலையை நிமிர்த்தி நேராக
நெஞ்சை சிறிது உயர்த்தி
உடலுக்கு உற்சாகம் ஊட்டுவோம்
தினமும் தினமும் செய்வோம்
உடலில் இரத்தம் ஓட
உணவு நன்கு செரிக்க
இது நம்முடைய கடமைதான்
வெயிலும் மழையும் வந்தாலும்
நடையை நிறுத்தாதே நண்பா
உறைந்த உடல் உருகி
உயிர் துள்ளும் துயிலில் கூட!
கோ.தியாகு
07/10/25
Thiagarajan G
உலகம் மிக மிக அழகானது!
காற்று தென்றலை தந்து!
மரம் கனிகளை தந்து !
பூக்கள் மலராக மணமாக தந்து !
ஆகாயம் விண்மீனாக இரவில் ஜொலித்து !
குழந்தை புன் சிரிப்பில் முகம் மலர்ந்து !
மழை பனி துளிராய் புல்நுனியில் விழுந்து !
புல்லங்குழல் போல் வாத்தியங்கள் மயக்கும் இசையை தந்து!
சூரியனின் வெளிச்சத்தால் இலைகளின் பச்சையத்தை தந்து!
மனித மனங்களில் கற்பனை கனவுகளை தந்து!
நிறங்களில் வானவில்லாய் அரைவட்டமாய் நின்று!
மனித ஜாதி மத வேறுபாடுகளை அன்பு என்ற காதலை தந்து!
துன்பமும் துயரமும் அல்லால் படும்போதுபடும்போது கடவுளை தந்து!
உலகம் மிக மிக அழகானது
மலை அடிவாரத்தில் இரு
அறிவியல் கவிதை
ஒளி வேகத்தில் பயணித்தால்
விண்கலமேறி ஒளி வேகம்
நெருங்கிப் பயணித்தால் –
அண்ட்ராமிடா பால்வெளி கூட
கணநேரத்தில் எட்டியதாகும்
பயணியின் கண்களுக்கே!
திரும்பி அதே வேகத்தில்
பூமி வந்தடைந்த போதும்
அவரின் கடிகாரம் சொல்வது
அதே இரண்டு நிமிடங்கள் மட்டும் தான்!
ஆனால் பூமியில் இருக்கும் மனிதர்க்கு
தோராயமாக நான்கு மில்லியன் ஆண்டுகள்
ஓடி நிற்கும் காலமிது.
கண்டதைக் கேட்க ஆளிலர்.
இதுவே ஐன்ஸ்டைன் கண்ட
சார்பியல் அதிசயம் –
ஒளி வேகத்தை நெருங்கினால்
தூரம் சுருங்கும்,
நேரம் வளைந்து நின்று விடும்.
சிந்தனையின் சோதனையே
இச்சாதனை!
உலகே வியந்த மாபெரும் சிந்தனையால்
ஜெர்மன் காப்புரிமை அலுவலர்
ஐன்ஸ்டைன் சிந்தனையில் பேரரசர் ஆனார்.
வான்வெளி, நேரம் வளைதலை
முதலில் காட்டிய
அந்த பேரறிஞர் –
அறிவியல் வழிகாட்டி ஐன்ஸ்டைன் ஆவார்.
கோ. தியாகு
03/09/25
Thiagarajan G
கரூரின் துயரக் காட்சிகள்
காண்பவர் உள்ளம் பதைபதைக்கும்
கேட்பவர் உள்ளம் பரிதவிக்கும்
கொண்டவர் உள்ளம் உறைந்துவிடும்
நேரில் கண்ட அறியாமைக் காட்சி
பாலும் தேனும் ஓடிவரும்
பாகும் பருப்பும் தேடிவரும்
நோயும் நொடியும் சடுதியிலேகும்
நம்பி வந்த அப்பாவி மக்கள்
விலை கொடுத்தனர் அப்பாவி உயிர்கள்
கல்விப் பணியில் சறுக்கிவிட்டோம்
சிந்திக்கும் செயல் மறந்தோம்
ஊடகங்கள் வசம் ஆட்பட்டோம்
உண்மை ஈதென உணர்தல் மறுத்தோம்
பசுமைப் புரட்சி செய்து பலியானோமா
தொழிற்புரட்சி செய்து செழித்தோமா
அறிவுப் புரட்சிக்கு ஆள்பட்டோமா
ஊடகக் காட்சியில் சிக்குண்டு சீர்குலைந்தோம்
என்று வரும் சிந்தனைப் புரட்சி?
கோ.தியாகு
28/09/25
Thiagarajan G
வடலூர் செல்வமணி – 72 வயது மாணவர்
*இளமை*
சிறுவர்களோடு புன்னகையாய் நிற்பவர்,
கேள்விக் களத்தில் தோழனாய் இருப்பவர்;
மாணவ மன்றத்தில் கலந்துரையாட,
மாணவராய் மீண்டும் பிறந்தவரே!
*முதுமை*
வயது மலை போல் உயர்ந்தாலும்,
ஆர்வம் அலை போல் ஓடுகிறது.
மறதி மேகம் சூழ்ந்த போதும்,
அறிவு சூரியன் துளிர்க்கிறது.
*கல்வி*
தோண்டத் தோண்ட மணற்கேணி ஊறும்,
கற்கக் கற்க அறிவு ஊற்று பொங்கும்.
செல்வமணி காட்டும் வாழ்வியல் பாடம்—
கற்றல் நித்தியம், காலம் காத்திருக்காது.
*வாழ்வின் பாடம்*
“வயது ஒரு எண், ஆர்வமே ஆயுள்,
கற்றல் தான் மனதின் நித்திய இளமை!”
கோ. தியாகு
26/09/25
Thiagarajan G
ஈதல் கேட்டர்ஹேம் – 116
இங்கிலாந்தின் பெருமகள் ஈதல்,
உலகின் மூத்த குடிமகள்.
வயதை எட்டிய நூற்றிபதினாறு,
நான்கு தலைமுறை சாட்சி அவர்.
இரு உலகப் போர்கள் கண்டார்,
காலனிய ஆட்சியின் முடிவும் கண்டார்,
உருசியப் புரட்சி, அறிவியல் வளர்ச்சி –
உலகம் மாறும் நடைமுறையைக் கண்டார்.
இந்தியாவில் பணியாற்றி,
இங்கிலாந்தில் மணந்தார்.
நூறு வயதிலும் உறுதியாக
வண்டி ஓட்டி மகிழ்ந்தார்.
எதையும் தாங்கும் மனம்,
சிரித்துப் பேசும் பேச்சு,
அன்பை அணைக்கும் உறவு,
அறிவு வளர்த்த கூர்மை –
அவர் வாழ்வு உயர்வு காட்டும் தீபம்.
வானொலி முதல் இணையம் வரை,
மாற்றம் கண்ட சாட்சியாக,
நூற்றாண்டை நன்கு வாழ்ந்தார்
நிலையான நம்பிக்கை போல.
கோ. தியாகு
22/09/25
Thiagarajan G
அழகான நாளின் தொடக்கம்
ஒரு சிறிய
நம்பிக்கையிலிருந்து தான்!
Karuppasamy
பொட்டு"
கூட
"அழகு"
தான்...
இருக்குமிடத்திலிருந்தால்...
Karuppasamy
நிழலாடும் நினைவுகள்
தாய்ப் பால் குடித்த தனயன்,
தமிழ்ப் பால் குடித்து திகழ்ந்தான்.
அன்பினில் ஆடி வளர்ந்தான்,
பாசத்தின் கரையில் மகிழ்ந்தான்.
பெரம்படிப் பட்டு உயர்ந்தான்,
வரம்புகளைத் தாண்டி நகர்ந்தான்.
திறம்படத் தொழில் செய்து நிமிர்ந்தான்,
தேர்போல் நெடிது உயர்ந்தான்.
நுழைந்த தொழிலில் பாடம் கற்றான்,
சூழ்நிலையோடு சுழன்றான்.
அறிவும் தெளிவும் வளர்த்துக் கொண்டான்,
உரிமை உடைமையைக் கடந்தான்.
கடந்த காலம் கண்ணில் தெரிகிறது,
நினைவின் ஓடைகள் ஓடுகின்றன.
மறைந்த தருணங்கள் மனதில் நிற்கின்றன,
மரபின் குரல்கள் இசை தருகின்றன.
நிழலோடு நடக்கும் நினைவுகள்,
நாளைய கனவாய் மலர்கின்றன.
இனிமையும் துன்பமும் சேர்ந்த பாதை,
இறுதி வரை வாழ்வை நிறைவு செய்கின்றன.
கோ.தியாகு
17/09/25
Thiagarajan G
நான் மட்டும்தான்
இங்கே இருக்கிறேன்
என் மனம் ஏனோ
உன்னிடமே
கதைத்துக் கொண்டிருக்கிறது
கவிதையில் காதலாக...
Karuppasamy
வெண்மை புரட்சி
ஆவின் பால் ஆதரிக்கும்
வெண்மைப் புரட்சி மாட்சியே,
தமிழ்நாடு தன்னிறைவு பெறும்,
கிராமம் செழிப்பில் மலருமே.
பாலில்லா உலகம் பஞ்சத்தில் வாடும்,
மாடில்லா கிராமம் வயல்வெளி வாடும்;
காளையில்லா கிராமம் வீரம் இழந்திடும்,
அன்பில்லா ஊராகும் ஆதலால்.
பாலில்லா வாழ்வு பலவீனமாய்,
தசையற்ற எலும்புக் கூடமாய்;
பச்சைக் குழந்தை நிமிர்ந்து வளர்வது,
அருந்தும் தாய்ப் பாலாலே.
நாட்டு மாடுகள் வளரவேண்டும்,
பசும்புல் மேய்ச்சி விரிவடையவேண்டும்;
குடிலில் பொங்கும் ஆவின்பால்,
குடும்ப நலத்தைக் காக்கவேண்டும்.
மாட்டுப் பண்ணை விரிவடையும்,
பாலின் விநியோகம் பெருகிடும்;
அரசின் வளமும் மக்கள் நலமும்,
இணைந்து செழிக்கின்ற நிலை வரும்.
பாலிலுள்ள புரதம், கால்சியம்,
வளர்ச்சிக்கு வேராய் திகழ்கின்றது;
மூளை, எலும்பு, தசை வளர்ச்சியில்
பால் உண்மையின் உயிர்த்துளியாம்
கோ.தியாகு
13/09/25
---
Thiagarajan G
எழுத்தாளனும் வாசகனும் சந்தித்து நகரும் புள்ளி
புத்தகம்.
#சுடர் ️
Karuppasamy
அழகினை ரசி அடைய நினைக்காதே
அழகைப் பார்த்து துணை தேடாதே
அழகு நிரந்தரமில்லை
உள்ளத்தை நேசி கடைசி வரை உனக்காக வாழும்,
அதுவே உண்மையான அழகு..!
Karuppasamy
சாலை ஓர வண்டிக் கடை
நெருக்கம் மிகு நெடுஞ்சாலை
வறுத்துத் தள்ளுகிறார் மசால் வடை
வண்டி சட்டியில் எண்ணெய் கொதிக்க,
கூட்டம் கூட்டமாய் மொய்க்கின்றார் கடைமுன்..
சுற்றும் வீசும் வாசம்
போவோர் வருவோர் ஈர்க்கும்
நாவில் உமிழ்நீர் ஊறும்
கையிலே காசு நிரம்பும்.
வடை சாப்பிட்ட பின்
சுவைப்போர் முகம் மகிழும்
தொடரும் பின் அவர் பயணம்
மாலை நேரத்து தின்பண்டம்.
சில நாள் சுவை தீங்கு இல்லையே,
நாளும் சாப்பிட்டால் நலம் குறையே,
அதுவும் வறுத்த எண்ணெயில் வறுத்தால்
உணவே உறுத்தும் உடலை.
வேர்க்கடலை, முளைகட்டிய பயிர்கள்,
வேகவைத்த சுண்டல்கள் நன்மை தருமே.
சொல்லில் அடங்காத சுவையோடு,
உடல் பலம் கூடுமே!
வாசம் வீசும் சாலை ஓரம்
விருப்பம் மிஞ்சும் சுவை தேடும்
அறிந்தும் உடல் நலம் குன்றும்.
அடக்கம்தான் வாழ்க்கை தரும்.
உணவே உடலுக்கு மருந்து,
உயிருக்கு உடலே ஆதாரம்,
சாலை ஓர மசால் வடை,
மனதில் வரவேண்டும் நடை.
கோ. தியாகு
09/09/25
Thiagarajan G
எது கவிதை?
கனத்த இதயம் பேசுவது கவிதை!
காதல் இதயம் பேசுவது கவிதை!
கண்கள் மொழிப் பேசுவது கவிதை!
காலம் முழுவதும் பேசுவது கவிதை!
InbaKani M
புகழ்!
******
1. வானின் புகழ் அதன் உச்சத்தில்!
2. நீரின் புகழ் அதன் தன்மையில்!
3. நிலத்தின் புகழ் அதன் பொறுமையில்!
4. காற்றின் புகழ் அதன் சுவாசத்தில்!
5. நெருப்பின் புகழ் புகழ் அதன் வெளிச்சத்தில்!
6. இதயத்தின் புகழ் அதன் துடிப்பில்!
7. இன்பத்தின் புகழ் அதன் களிப்பில்!
8. இசையின் புகழ் அதன் சுரத்தில்!
9. இல்லத்தின் புகழ் அதன் அறத்தில்!
10. உலகோர் புகழ் அவர் வாழும் வாழ்க்கையில் !
InbaKani M
இன்பம்!
**********
1. காதலில் ஓர் இன்பம்!
2. கடமையில் ஓர் இன்பம்!
3. மழலையில் ஓர் இன்பம்!
4. மன்னிப்பில் ஒரு இன்பம்!
5. இளமையில் ஒரு இன்பம்!
6. இயற்கையில் ஓர் இன்பம்!
7. இசையில் ஓர் இன்பம்!
8. புகழில் ஓர் இன்பம்!
9. புதுமையில் ஓர் இன்பம்!
10. வாய்மையில் ஓர் இன்பம்!
InbaKani M
உலகப் பொதுமறைத் தமிழே!
**********************************
* அகிலத்தின் வரவே!
* செம்மொழி உறவே!
* எனை ஆளும் அரசியே!
* எனை நீங்கா அரசே!
* என் உயிர் தமிழே!
* உனைப் பாடா ஏது நாவே!
* இன்சொல் நாயகியே!
* இன்பத்தின் சுவையே!
* காதலின் மொழியே!
* எம் தமிழே! வாழ்கவே! வளர்கவே!
InbaKani M
. உலகு!
*********
* உயிர்களின் ஆணி வேர்!
* இயற்கையின் அதிசயப் பிறப்பு!!
* அற்புதத்தின் உறைவிடம்!
* எதற்கும் அசராத இறைவன் படைப்பு!
* மூப்படையாத இளங்கன்னி!
* ஆதியும் அந்தமும் புரியாத புதிர்!
* சில நாட்களில் புன்னகைக்குச் (மின்னல்) சொந்தக்காரி!
* சில நாட்களில் கோபத்திற்கு (இடி) சொந்தக்காரி!
* சில நாட்களில் ஆனந்த(மழை) கண்ணீருக்குச் சொந்தக்காரி!
* பெரும்பாலும் சமாதானப் (வெள்ளை வானம்) பேச்சுக் காரி!
InbaKani M
கடவுள் வாழ்த்து!
********************
* தாய், தந்தை ஆனோர் முதற் கடவுள்!
* குருவும் இறையும் மற்றோர் கடவுள்!
* உடன், பிறந்தோர் உற்றக் கடவுள்!
* நட்பு, உறவு தொடரும் கடவுள்
* சுற்றத்தார், யாவரும் வாய்த்த கடவுள்!
* மாக்கள், பறவைகள் காட்சி கடவுள்!
* இயற்கை அளித்த ஐம்பூதங்கள் கொடைக் கடவுள்!
* அறம், ஈகை பண்புகள் நீதி கடவுள்!
* பகை, வீரம் தன்மானக் கடவுள்!
* தானம், தர்மம் நம்மை காக்கும் கடவுள்!
InbaKani M
* உன் செயலில்
முயற்சி!
பயிற்சி!
இலக்கு!
இது தரும் வெற்றி!
நீரோடும் சாலையிலே
கால் நனைந்த தண்ணியிலே,
காணாத பள்ளத்தில்
கால் பதித்து வந்தவரே.
தூவானம் தூரம் கண்டேன்,
கையிலே குடை பிடித்தேன்,
கடற்கரை வழியிலே
கால்நடை போட்டேன்.
தேடித் தேடி வந்தேன்
தென்றலின் இனிமையை,
பாடிப் பாடி வந்தேன்
குயிலின் குரலினை.
நாடி நாடி சென்றேன்
நெஞ்சம் ஏங்கும் வானத்தை.
காற்றோடு மிதந்தேன்,
ஓடம்போல ஆடினேன்
கதிரவன் மறைந்திட,
சதிராடும் மேகத்தாலே!
ஆனால் என் உள்ளத்திலே
ஒளி மறையவில்லை;
நம்பிக்கையின் நட்சத்திரம்
நெஞ்சமெங்கும் பிரகாசமாய்!
கோ.தியாகு
31/08/25
மக்கள் மன்றம்
ஊர்கூடி தேரிழுக்க ஒன்றுகூடி,
சங்கம் அமைத்து, சங்கமிட்டோர்
பல விவாதம் செய்து முடிவுகள் கண்டாரே!
பல மக்கள் மனதோடு உரையாடி
மகிழ்ந்தாரே!
சிக்கல்கள் வந்த போதும்,
சண்டைகள் மூண்ட போதும்,
சங்கங்கள் முன்னிட்டு கரையுமே;
ஒற்றுமை என்றும் பலமே!
உலக ஒற்றுமை மக்கள் விருப்பமே,
அணு சுடர் அச்சமல்ல நலமெனும் விளக்கே;
அலைகடல் நீரெனச் செழித்து பாய்ந்திட,
சூரியன் புன்னகை போலச் சுடரொளி தர,
உலகம் உயர்ந்து விளங்குமே!
இட்டுக்கட்டி, விட்டுக் கொடுத்து,
கட்டிக் காக்கும் கடமை;
தொட்டிலிலிருந்து எட்டுவரை
தொடர்ந்தால், வட்டிப் போட்டு
நன்மை கொட்டிக் கொடுக்குமே!
செய்தி ஊடகங்கள் சத்தியம் பேசி,
சமூகமே நீதியாய் எழுந்து நிற்க,
பிறப்பிடமோ, மொழியோ, மதமோ பாராது
மனிதம் ஒன்றே என்று உணர்ந்தால்,
மக்கள் மன்றம் உலகம் தழைக்குமே!
கோ.தியாகு
31/08/25
Thiagarajan G
இயற்கை இயந்திரம்
அன்னையின் கரு சமைத்த இயந்திரம்
இந்த அற்புத மனிதனே!
இன்பத்தால் விளைந்த
மனித இயந்திரமே!
அன்பும் அறிவும் அணிந்த இயந்திரமே!
உள்ளே ஓர் எக்கிப் பொறி – அது
உந்தித் தள்ளும் செங்குருதி,
கடைக்கால் பாசனம் போல்
கணுக்கால் வரை பாயும்.
கெண்டைக் கால் தசைகொண்டு
மீண்டும் மேலேற்றும் கடம்பாறை நீரேற்றம் போல்,
எக்கிப் பொறி ஏற்றிய
தலைகால் பாசனம் அறிவுப் பயிர் விளையும்.
மூளை எனும் நுண்ணிய கணினி,
மின்னலைப் போல சிந்தனைச் சமிக்ஞைகள் அனுப்பி,
அறிவைச் செதுக்கும் செயலி ஆகி
மனித இயந்திரம் நெறி பெறுகிறது.
இயந்திரமாக உருவான பின்
அன்பும் அறிவும் சூழ்நிலை கொடுக்கும்.
பின்னர் களமாடும் மனித இயந்திரம்,
உள்ளுணர்ச்சி கொண்டு உலகை வெல்வான்.
துணை இயந்திரங்கள் பலகூடி
துடிப்புடன் அவை இயங்கி,
முழு மனிதன் உருவாகி
முப்பாலும் பருகி வென்றான்.
இயந்திரமானாலும் உயர்திணையாயினான்,
ஆறறிவு அடைந்து ஆருயிர் போற்றுகின்றான்,
பல்லுயிர் போற்றி பரவசமாகின்றான்,
ஏழாம் அறிவாம் நுண்ணறிவு படைக்கின்றான்.
கோ. தியாகு
27/08/25
Thiagarajan G
நினைத்து நினைத்து பார்க்கிறேன்
என்ன செய்தேன்?
என்ன கற்றேன்?
கற்றது கையளவு,
கல்லாதது உலகளவு!
அன்பின் தோணியில்
ஆழ்கடல் சென்றேனா?
பிறந்த உள்ளம்
பிறருக்காக எரிந்ததா?
ஏட்டில் வந்த கல்வி
மறைந்ததோ?
வாழ்க்கை தந்த பாடம்
என்னைப் புதிதாய் படைத்ததோ!
தேடல் எனும் தீபம்
அறிவின் வெளிச்சம் காட்டுது;
தேவை எனும் தாகம்
உண்மை கதவைத் திறக்குது.
நேரம் நதி போல் ஓடும்;
நினைவுகள் கரையில் நிற்கும்;
நாளைய பாதையில் நான்—
நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.
கோ. தியாகு
26/08/25
Thiagarajan G
புத்தம் புது காலை வரும்
நித்தம் நித்தம் மாறும் காலநிலை,
நிழலென மாறும் மனநிலை;
நீந்திச் செல்லும் வாழ்க்கை நதி,
நேரம் ஓடும் சத்தமற்ற அலை.
அறிவை விதைக்கும் கல்விநிலை,
அறம் வழி நடத்தும் நீதிநிலை;
அகம் இருள் காட்டும் மனிதநிலை,
ஒளி தரும் தன்னுணர்வு நிலை.
வாழ்வின் பாதை சவால்களால் நிரம்பும்,
தாழ்வில் துவளா மனம் தான் உயர்வும்;
ஓய்வின் நொடியில் இன்பம் மலரும்,
புதிய விடியல் நம்பிக்கையாய் வரும்.
எண்ணத் துளிகள் அகமெனத் தோன்றும்,
மறைந்த மகிழ்ச்சி மனதில் விளையும்;
அறிவு சுடராய் சுயநிலை காட்டும்,
புது புது காலம் சாந்தியாய் மலரும்.
அறியாமை இருள் கலைக்கும் ஒளி,
ஆன்மிகப் பாதை திறக்கும் வழி;
இருள் கடந்தே காணும் உண்மை,
புத்தம் புது காலை – அதுவே நித்யம்.
கோ.தியாகு
20/08/25
Thiagarajan G
நிழலை நம்பாதே..
நிஜத்தை மட்டுமே நம்பு..!!
,இதற்கு ஆகச்சிறந்த
உதாரணம். .
வாட்ஸ் அப் DP
Karuppasamy
ஈல் கண்டேன்
காலைக் கடற்கரை ஓரத்தில்
ஒதுங்கி கிடந்த ஓர் ஈல்
உயிரிழந்தவனைப் போலவே
வாய் பிளந்தது – கடலையே நோக்கி
விலாங்குமீன் வகையைச் சேர்ந்ததாய்
வீசும் அலைகளில் விளையாடியதாய்
பூமி வாழ் மனிதருக்கு உணவாய்
பருந்துகளுக்கும் பயனாய்
எண்ணற்ற கடல்வாழ் உயிர்கள்
சுற்றும் சுறாமீன்கள்,
நடமாடும் திமிங்கிலங்கள்
உணவுச் சங்கிலி வழி சமநிலையை வகுக்கும்
புவிவெப்பம் உயராமல்
கடல்நீர் கெடாமல்
உயிரின் சங்கிலி முறையாமல்
காத்து நிற்கும் – ஈல் எனும் எளியவொன்று
இறந்தும் இருந்தும் இனத்தைக் காக்கும் ஈலே
உனக்கிடையே மனிதன் பார்வை போடட்டும்!
தன்னை காக்கும் சூழலை
இழையறுபோல மறந்து விட வேண்டாமே!
கடல் தந்த உயிரின் பாசம்
கரையோரக் கண்கள் கேட்டுக் கொண்டது
இறந்த ஓர் ஈல் சொல்லும் பாடம்
இறக்குமுன் வாழ வழி காட்டியது.
— கோ. தியாகு
08/08/2025
Thiagarajan G
*இனிமை ஒரு சோதனை*
உலகம் முழுதும் ஆட்சி செய்கிறது சக்கரை வியாதி,
பல உயிர்களை பள்ளக்குழிக்குத் தள்ளி,
கரையான் போல கட்டிடத்தை கரைக்கும் —
உடலும் ஒத்த கட்டிடத்தை நொறுக்குகின்றதே!
பாலில் துளியாய் கலக்கும் விஷம்போல்,
குருதியில் அளவிழந்து ஒழுகும் சக்கரை,
நெஞ்சில் வேலாய் பாய்ந்து
இதயத்தை இறுக்கிப் பிழிகிறதே!
ஒன்றா இரண்டா என்று எண்ண முடியாத
உறுப்பு முழுதும் தகர்த்து விடுகிறதே,
கால்களில் தொடங்கி தலைவரை வரை,
மருத்துவம் எங்கே என்று யோசிக்க வைக்கிறதே!
இருந்தும் நம்பிக்கையுடன் எழுகின்றோம்,
சீன விஞ்ஞானி ஒருவன் உருவாக்கினான் —
இன்சுலின் சுரக்கும் செயற்கை செல்களை,
கல்லீரலில் சிறப்பாய் குடி புகுத்தினான்!
இதனால் இன்சுலின் குறைவின்றி ஓடுகிறது,
சக்கரை கட்டுப்பாட்டில் தாளம் போடுகிறது!
கணையமும் புதுசாய் செயல்படத் தொடங்க,
இன்னும் பத்தாண்டுகளில் நோய் மறையும் என நம்பிக்கை!
பேதைமைக்கு அடிமையாய் இனிமையை விரும்பினோம்,
இப்போதோ வாழ்க்கையின் இனிமையே நமக்கு சோதனை!
அளவோடு உண்பதுவே ஆனந்தம் தரும் அருந்தவம்,
அதுவே நோயில்லா நாள்களின் நெறி வழிகாட்டும்.
கோ.தியாகு
05/08/25
Thiagarajan G
மனதுக்கு மருந்து
உடலுக்கு மருந்து – உணவாய் அமையும்
கடலுக்கு மருந்து – உயிருள்ள மீன்கள்
மடலுக்கு மருந்து – தேனெனும் மென்மொழி
மனதுக்கு மருந்து – மெல்லிய அன்புச் சொல்!
உடலுக்கு உபாதை – உயிரற்ற உணவுகள்
உறவுக்கு இழப்பு – உரசும் மனங்களால்
உயிருக்கு வறட்சி – பாசத்தின் வீழ்ச்சி
மனதுக்கு சிதைவு – அன்பின் அழிவால்
இதயம் தொட்டு பேசினால் –
இதயம் நெகிழ்ந்து பதிலளிக்கும்
உதயம் மலரும் நேரத்தில் –
உயிர்கள் ஆர்வத்துடன் எழும்
மனதுக்கு மருந்து – மோகனப் புன்னகை
மனதுக்கு இதம் – இனிமைமிகு மலர்ச்சொல்
மனம் உயரும் – உயர்ந்த குணமுடன்
மனமருந்து – கல்வியின் ஒளியில்!
துன்பத்தை தாங்கி சிரிக்கும் மனம்
துளிர்விடும் மரம்போல் வளர்கின்றது
மூடி இருந்த நினைவுகளுக்குள்
முரசுபோல் முழங்கும் ஒரு நம்பிக்கை
அறிவு சேரும் வார்த்தைகள் சொல்வோம்
அன்பின் மெளன மொழியைப் படிப்போம்
துன்பக் கவலை தீர்க்கும் மருந்தாய்
துளிர்க்கட்டும் நம் இதய மொழிகள்!
கோ.தியாகு
03/08/25
Thiagarajan G
இன்று அனைத்திலும் சமத்துவம் உண்டாகி விட்டது எனில் காதலுக்கு மட்டும் ஏன் சாதி என்ற சதியை தீட்டுகிறார்கள்???
Vaishu Vaishnavi
*பறக்கும் மனிதன்*
புதியதோர் உலகம் செய்குவோம்!
புதியதோர் ஊர்தி உருவாக்குவோம்!
ஊர்தியில் ஓர் குடும்பமாய்
செல்வோம்! செல்லவும் — ஓர் மின்கலம் செய்குவோம்!
போகும் வழியில் கொஞ்சி விளையாட,
வஞ்சிக்கொடியிடை மேகலை ஆட,
செங்கதிரோன் தங்கப் பாதை அமைக்க
பறக்கும் தேர் பதிந்தது மனதில்.
பேரிரைச்சல் காதில் விழவில்லை,
பெருவெள்ளம் எதிர்கொள்ளவில்லை,
இரவில் ஓர் விளக்கு அணைந்தால் —
பல விளக்குகள் மெழுகின்றன நம்மில்!
இறங்கி நடந்தால் மிதக்கிறோம்,
விஞ்ஞானம் பேச வில்லை,
அஞ்ஞானம் போதவில்லை,
அஞ்ஞானமே இங்கு தேவையானது போல...
எட்டிப் பார்க்க ஏதுமில்லை,
தட்டிப் பார்த்தால் சத்தமில்லை,
சொர்க்க லோகம் இதுவோ?
சொல்லவும், சிரிக்கவும் வேண்டுமோ?
கணங்கள் பறக்கும் நம் கூண்டில்,
கனவுகள் விளைந்தது பூமியில்!
அறிவியல் இன்று ஆனந்த மொழி —
அன்னம் போல உயர்வோம் எழுந்து!
கோ.தியாகு
30/07/25
Thiagarajan G
கங்கை கொண்ட சோழபுரம்
சோழர் மன்னர்ச் சிறப்பெனும்
நட்சத்திரம் நீடிக்கவே,
கங்கை கொண்ட சோழபுரம்
பொன்னாழி எனப் பெயரிட்டதே!
அரியலூர் மண்ணின் நெஞ்சில்
அழகிய வரலாறெழுதி,
இராஜேந்திரன் – வீரத் தனயன்,
இராஜராஜனின் அரிமகனாக,
கலை வளர்த்தான், கல்வி வளர்த்தான்,
படை கொண்டு வெற்றி வென்றான்,
கங்கை வரைக்கும் கடந்து சென்று
சோழர் கொடி ஏற்றி வந்தான்!
முப்பெரும் விழா – ஓர் ஆனந்த விழா,
இராஜேந்திரன் பிறந்த நாள்;
தெற்காசிய வெற்றி நாள்,
பிரகதீசுரர் எழுந்த நாள்!
சோழநாடு சோறு கொடுத்தது,
சிந்தனைக்கு வேரூன்றியது,
வீரம் வளர்த்தது,
விகடமாய் நம்மை மாற்றியது!
அழியாத பெருமை தந்தது,
அறிவின் சுடர் ஏற்றியது,
கலை, போர்க்களம், கரையோரம்
முழுவதும் சோழர் சிரிப்பு கலந்தது.
கோ.தியாகு
28/07/25
Thiagarajan G
எல்லா நாட்களும் திருவிழாக்களும் இல்லை.
எல்லா நாட்களும் அறைகள் பூட்டி வைக்கப்படுவதும் இல்லை.
கவிதா
காலை ஒரு சின்ன உழி பதம் பார்த்து விட்டது.
கணகொடுர வலி.
கால் ஊன்ற முடியவில்லை.
மூன்று நாட்கள் என முடிவு செய்து
ஒரு வார விடுப்பு.
அப்பா சங்கட படுவார் என கல்லூரி சென்றேன்.
நானோ வலியில் அங்கோ கொண்டாட்டம்.
ஒரு வாரம் சுற்றுலா.
காலில் இருந்த வலி நெஞ்சிற்கு பரவிவிட்டது .
வரும் வழியில் மீண்டும் ஒரு உழி காலை பதம் பார்த்து விட்டது.
இம்முறை நடக்க முடியாமல் ஆகவில்லை.
கவிதா
நான் வா என்கையில்
உனக்கு தலைக்கு மேல் வேலை .
பாத்திரங்கள் தேய்க்கும் போதும்,
துணிகளை குளிக்க வைக்கும் போதும்,
வீட்டுக்குரியவர்களை அங்கு அங்கு அமர வைக்கும் போதும்
பற்களை அழகு படுத்த முயலும் போதும் வந்து பொழிகிறாய் மழையாய்!
கேட்டதயாவது தந்தாயா?
என்ன செய்வது நான் !
ஈர கைகளோடும், சோப்பு நுரைகளோடும் முடிந்த வரை பிடித்து வைத்து கொள்கிறேன் இந்த கவிதையை!
கவிதா
கவிதையை படிப்பதற்கே ஒரு கவிதை எழுத வேண்டும் போலிருக்கிறதே?
நிச்சயம் அந்த கவிதையும் புரிய போவதில்லை.
கவிதா
கவிதைக்கென கொஞ்சம் சுருக்கினேன்.
மேலும் சுருக்கினேன்.
சுருக்கினேன்
வந்துவிட்டது கவிதை!
கவிதா
அர்த்தமற்ற வரிகளோ!
அர்த்தங்கள் என்ன?
எப்படி புரிந்து கொள்வது?
மூளை வெடித்து சிதறாமல்
கவிதை உலகிற்குள் நுழைய முடிவதில்லை!
கவிதா
சுற்றியிருக்கிற அழகில் கரைந்த நான் அதனை வரிகளில் வரிக்க விரும்புகிறேன் அவ்வளவே!
கவிதா
கவி போல அழகு இல்லை.
பெயரிலாவது இருக்கட்டும் என எண்ணியிருந்தார் போலும் அப்பா
கவிதா
சப்பாத்தி செய்து சாம்பாரும் ஊற்றி விட்டது மழலை.
இதுதான் அடுப்பில்லா சமையலோ?
கவிதா
கவிதைக்கு பின் ஓடிக் கொண்டே இருந்தேன்!
ஒரு துளியை தொட்டு விட்டேன்!
என்னிலிருந்தும் கவிதைகள் வெளிப்படலாம்!
கவிதா
காற்று வாங்கப் போனேன்
காற்று வாங்கப் போனேன்,
காட்சி மட்டும் கட்டி வந்தேன்;
ஆர்ப்பரிக்கும் அலைகளிடம்,
அழகை நெஞ்சில் சேகரித்தேன்.
துள்ளி வரும் வெள்ளல்கள்,
துள்ளி வரும் ஆசைகள்;
உள்ளம் எனும் ஆழக் கடலில்,
ஒளிந்து கிடக்கும் கனவுகளைத் தூண்டும்.
கள்ளமின்றி, கபடமின்றி,
அலைகள் வந்தும் சென்றும் திரும்புகின்றன;
ஓவென ஒலித்து,
கரையை அன்பாய் தழுவுகின்றன.
அந்த கரையிலுள்ளோர்,
அக்கரையை அணைப்பார்களா?
அருஞ் கடலைக் காப்பார்களா?
கடற்கரை கன்னியை
கண்ணோட்டமுடன் கவனிப்பார்களா?
சந்தனமும் ஜவ்வாதும் பரவ
சிறகு விரிக்கும் கனவில்,
ஒரு நூறு கேள்விகளை விட்டுவிட்டு
அலைகள் சும்மாகச் செல்லுகின்றன!
அலைகளின் மென்மையிலும்
அழுத்தமிருந்தது –
அவைகள் தந்த பதில்கள்
அவை எழுப்பிய வினாக்களில் மறைந்தன.
மனிதர்கள் கடலுக்குள்
மாற்றங்களை வேண்டுகிறார்கள்,
ஆனால் மாற்றம் அவர்களுக்குள்
துவங்க வேண்டியது என்பதை மறந்துவிடுகிறார்கள்.
கோ.தியாகு
24/07/25
Thiagarajan G
️️️️
துக்கம் நம்மை கடந்த காலத்தை,
பார்க்க வைக்கின்றது..!"
கவலை நம்மை இங்கேயும் அங்கேயும்,
பார்க்க வைக்கின்றது..!"
ஆனால்..,
நம்பிக்கை மட்டுமே நம்மை எப்போதும்,
முன்னாள் பார்க்க வைத்து,
முன்னேற செய்கின்றது...!!
RK
️️️️
Kalpana Subramaniam
நேரடி பகைவர்களிடமும்,
மோதி விடலாம்..!"
நண்பர் போன்று பழகி,
இங்கிருந்து அங்கே,
அங்கிருந்து இங்கே என்ற..,
நல்லவர்களோடு மோதுவது தான் கடினம்...!!
RK
Kalpana Subramaniam
ஊர் உலகம் எப்படியோ போகட்டும்..!"
உன் பார்வையில்,
உன்னை அழகாக வைத்திரு..!"
உன்னிடம் இருந்தே
உலகம் தொடங்கட்டும்...!!
RK
Kalpana Subramaniam
சொல்லும் செயலும் முரண்பட்டு இருப்பவர்களிடம்,
எதிர்மறையான சிந்தனைகள் கொண்டவர்களிடமும்..!"
முழுமையாக விலகியே இருக்க வேண்டும்..!"
இல்லையெனில்,
நம்மை பைத்தியமாக்கி விடுவார்கள்...!!
RK
Kalpana Subramaniam
நாம் முதுமை அடைந்தால்,
பிள்ளைகள் நம்மை பராமரிக்க இரண்டே காரணங்கள் தான்..!"
ஒன்று..
நாம் சேர்த்து வைத்த பணம்..!"
மற்றொன்று..
நாம் அவர்களை வளர்த்த விதம்...!!
RK
Kalpana Subramaniam
நிம்மதியாக நீ வாழ வேண்டுமெனில்..,
உன் மனதின் கவலைகளை தூண்டிவிடும்,
சிலரை சந்திப்பதையும்..,
அவர்களைப் பற்றி சிந்திப்பதையும்,
தவிர்ப்பது அவசியமே...!!
RK
அடுத்தவர் பின்னால் நின்று,
புறம் பேசாதீர்கள்..!"
புரிந்து கொள்ளுங்கள்..!"
உங்களுக்குப் பின்னாலும்,
ஒருவர் இருப்பார் என்று...!!
RK
Kalpana Subramaniam
பெண்ணே
உன்னை விட்டு
நழுவும் சேலைகள்
சிலைகளை மட்டுமே தழுவுவதேனோ.?.
சேலை கட்டியது
சிலையே ஆனாலும்
சொக்கி நிற்காமல்
செல்பவர் யாரோ?
சிலையை தழுவிய சேலையினாலே
சிலையின் சிரிப்பும்
ஈர்ப்பதேனோ?..
உடையும், இடையும்
உடுக்கை என்று
ஏற்றுக் கொள்ளாதவர்தான்
உலகில் யாரோ?
கவிதையின் காதலன்
மார்கழி குளிர்
என்னயும்
கோலம் போட
வைத்தது என்னவன்(வள்) கன்னத்தில்..
Karuppasamy
திரை நஞ்சு
கைப்பேசி என்ற
விசச்செடியின் நிழலில்
நேரப்பூ பறிக்கின்றோம்
வாழ்வின் வாசம் இழந்தே
மௌனமே மருந்தாகும்.
- சு. எழிலன்
Suresh Pandian
வெளக்குமாறாய் வா..
குப்பையாய் கிடக்கிறேன்..
கூட்டிச்செல்!
இப்படியும் ஒரு கவிதை
காலை வணக்கம்
Karuppasamy
கோபப்பட்டு இருப்பேன்..!"
சண்டை போட்டு இருப்பேன்..!"
ஆனாலும்..!"
ஒரு நாளும்..!"
பொய்யான அன்பை காட்டியதில்லை..!"
நான்...!!
RK
Kalpana Subramaniam
என்னோடு பேசுவதற்கு
வார்த்தைகள் இல்லாததால்
#அவள் இன்னும் மௌனமாகவே
இருக்கிறாள் ...
கடந்த ஏழு ஆண்டுகளாக !!
Karuppasamy
அவள் என் எதிரே அமர
அதில் நான் பூப்பரிக்கறேன்
அவளோடு பேசம் போது
கடிகாரம் கழட்டி வைக்கிறேன்
கடை மூடும் நேரம் வரை
கண் மூடாமல் இமை பார்கிறேன்
அரை மணி நேரத்தில் என்னை
கடற்கறை ஓரத்தில் நிருத்திவிட்டால்
Mugesh11
நன்றாக கவனித்துப் பார்..!"
கொஞ்சி பேசுகிறவர்கள்,
துணைக்கு வர மாட்டார்கள்..!"
கெஞ்சி பேசுபவர்களும்,
துணைக்கு வர மாட்டார்கள்..!"
கோபமா பேசுபவர்கள் தான்,
எதற்கும் துணை நிற்பார்கள்...!!
RK
Kalpana Subramaniam
வெளியே எறிந்த கோபம்,
மன்னிப்புக்கு வழி தேடும்..!"
உள்ளடக்கிய கோபம்,
பழிக்குப் பழி தேடும்...!!
RK
Kalpana Subramaniam
பேருந்தில் தவறி விழுந்த நாணயத்தை எடுக்க எத்தணித்த அவள் மீது ஆயிரம் கண்கள்...
பார்வை நாணயத்தை பற்றி அல்ல...........
Santhakumar Yavisan
அறியாமல் வந்த ஆசை தான்
அதனால் தான்
யாரும் அறிந்திடாமல் எழுதிடுகிறேன்.
எப்படியோ தொடங்கியாயிற்று.
தொலைதூரம் சென்றிடுமா???
இல்லை தொலைந்திடுமா???
கவிதா
தலைப்பு..மாலை...
நேற்றுநீமேடையில்இன்றுநிவீதியில்
Pandaya Rajam
நமக்கு உரிமை இல்லாத
இடத்தில். நமக்கான உரிமை
கேப்பது தவறு.....
Karuppasamy
பெண்,,
... வெட்கத்தில் பூமியை
பார்த்தால் பூமிதேவியும்
அவளை பார்த்து பொறாமை
கொள்கிறாள்..!
Karuppasamy
*மாற்றம் ஒன்றே மாறாதது*
நேர்மையற்ற பூமியில்
நேர்மையாய்
துரத்துகிறது காலம்..
தள்ளி விடாமலேயே
துள்ளி ஓடுகிறது நேரம்..
போகாதே என்றாலும்
போவேன்
என்கிறது வயது..
குறையாதே என்றாலும்
குறைந்து போகிறது இளமை..
தடுக்கவும், தவிர்கவும்
தெரியாமல் ஆளுமை
கொள்கிறது முதுமை..
*மாற்றம் ஒன்றே மாறாதது*
என்பதில் உறுதியாகிறது
வாழ்க்கை..
கவிப்ரியன்
BASKAR BASKAR
It is only when alone seems to be her strength and her weakness
_Shanthi
Shanthi
உலகிலேயே சிறந்த வாசனை
பொருள் உயிர் ...
அது மட்டுமில்லையென்றால்
உடல் நாற்றமெடுத்து விடும் !!
Karuppasamy
வெளிப்படுத்த முடியாத
ஒவ்வொரு அன்பிற்கும்
ஒரு பூ பூக்கும்.
உனக்கும் எனக்கும் இடையில் தான்
இந்த உலகம் பூத்தது..
-படித்தது
Karuppasamy
ஆண்கள் தான் சாதிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டும்...?
பெண்கள் சாதிக்க ஒரு அழுகை போதும்..!
Karuppasamy
நீ உறங்கும் வரை தான்..
நீ நினைக்கும் வாழ்க்கை..!
உன் இதயம்..
உறங்கி விட்டால்..!
நீ நினைத்தாலும்
இல்லை வாழ்க்கை..!!
RK
Kalpana Subramaniam
Saree பிடிக்கிற அளவுக்கு
Sorry பிடிப்பது இல்லை பெண்களுக்கு…!!!
Karuppasamy
பித்தன்
மனம்
திறந்து
பேசினான்
மனிதனோடு
அல்ல.....
மற்றவைகளோடு
-ரஹ்மான்
விடை இருக்கு,
கேள்வி இல்லை..!"
வலி இருக்கு,
வாழ்க்கை இல்லை..!"
நினைவு இருக்கு,
நீ இல்லை..!"
நிஜம் இருக்கு,
நிம்மதி இல்லை..!"
மதி இருக்கு,
ஆனால்,
யோசிக்க மனமே இல்லை..!"
கிடைத்ததையே,
பிடித்து கொள்ளுங்கள்..!"
பிடித்தது
கிடைக்காத போது, நினைவுகளே
உங்களை கொல்லும்...!!
RK
Kalpana Subramaniam
நெருங்கிய நண்பன்,
விலகி சென்றாலும்..!"
விலகியிருந்த எதிரி,
நெருங்கி வந்தாலும்..!"
ஆபத்து தான்...!!
RK
ஆயிரம் பேர்..
உன்னை..
வெறுத்தால் என்ன..
உண்மையான..
ஒருவர் வைக்கும்..
அன்பு போதும்...!!
RK
Kalpana Subramaniam
வீட்டில் அடங்கி கிடந்த பெண்களை உலகம் முழுவதும் மக்கள் பார்க்கும் படி இந்த தொல்லை பிடித்த தொலை பேசியின் வாயிலாக
Mohamed Bilal
காலை என்பது,
ஒரு பொழுது..!"
அது பொதுவானது..!"
தினம் ஒரு காலை..!"
தினம் ஒரு மாலை..!"
இருப்பினும்,
காலை புதுமையைத் தரக்கூடியது..!"
புத்துணர்ச்சி கொடுக்கக் கூடியது..!"
காலை எழுந்தவுடன் படிப்பு..!"
ஏனெனில்,
மனதில் அமைதி நிலவும் பொழுது..!"
நிம்மதி கொடுக்கும் பொழுது..!"
மெல்ல மெல்ல மயக்கம் தெளியும் பொழுது..!"
சூரியனின் முதற்பொழுது..!"
நிலவு மறையும் பொழுது..!"
வானத்தின் வண்ணப்பொழுது..!"
பூமிக்கு ஒளி வரும் பொழுது..!"
வெளிச்சம் வரும் பொழுது..!"
இருள் மறையும் பொழுது..!"
இன்பம் தரும் பொழுது..!"
மொத்தத்தில் பூமியின் புதுப்பொழுது..!"
இந்த புத்தம் புது காலை தான்...!!
*காலை வணக்கத்துடன்*
*என்றும் உங்கள்*
RK
️
Kalpana Subramaniam
நாளைய காலம் நாடகக் காலம்,
வேதனைக் காலம், வேகக் காலம்,
குறைந்த பொய்யை, சத்தியம் என்னும்
ஜோடனைக் காலம்,
சோதனைக் காலம்..!"
உன்னையும், என்னையும்
உரசிப் பார்த்து
உதவாதென்று, ஒதுக்கும் காலம்..!"
ஏணிப்படிகள் இறக்கவும் செய்யும்,
ஏனிப்படி என,
ஏங்கவும் செய்யும்..!"
எப்பதம் ஆயினும்,
எழுந்திட, பொலிந்திட,
ஏக்கம் அடங்கிட, ஏளனம் மாறிட,
இக்கணம் தொட்டு இயங்கத் தொடங்குவோம்..!"
இக்கணம் சத்தியம் இக்களம் நித்தியம்...!!
RK
முதல் நாள் முகம் தெரியாது,
பல நாள் உறவினர் போல..!"
பல அனுபவங்களை அள்ளி தருகின்றது, என் கல்லூரி...!!
RK
Kalpana Subramaniam
முகம் காட்ட தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
இணைந்திருப்போம்....
நண்பர்களாக
Karuppasamy
நிலா...
இலக்கண
தாய்ப்பால் குடித்த
இளவலே....
இரவின் மடியில்
தவழ்ந்த தென்றலே..
நித்தமும்
நித்திரையை
நினைவால்
நியாயப்படுத்திய வள்ளலே....
வெண்ணிற
ஆடை உடுத்தி
விதவைக் கோலம்
வியாபித்த
வெள்ளந்தியே....
புரட்டாசி மாதம்
புரண்டு போக
ஐப்பசியில்
சீர் கொண்டு வாரேன்
இடைவிடாது
கண்ணீர் சிந்தாதே
பிரியமுடன்
வையகம்...
இரவு வணக்கம்..
ராமசாமி.
Ramasamy Ramasamy
கந்தசஷ்டி விழா...
தமிழ் அன்னையின் மடியில் தவழ்ந்து
தரணி போற்றும் முத்தமிழ் வித்தகா..
மயிலை வாகனமாக்கி
சேவலை கொடியாக்கி..
ஓம்கார நாயகனே
உனக்கு
சஷ்டி விழா...
சிக்கலில்
வேல் வாங்கி
சிங்கமுகனை கூராக்கி
கவுந்த மலையை தூளாக்கி..
சம்காரம் நடத்திய சரவணே. . உனக்கு
முடி சூட்டு விழா..
காப்புக் கட்டி
விரதம் கொண்டு
எண்ணம் ஈடேற
நாளொரு வண்ணம்
கை தொழுவும் கந்தனை...
வாழ்க வளமுடன்
ராமசாமி...
.
Ramasamy Ramasamy
பாறையில் மலர்ந்த பூவாய்
கல்வி எனும் அறிவு மனதிற்குள் பூக்கின்றது...
Ilakkiya sri
நிதர்சனம்...
மட்டைப்பந்து
மகிழ்கிறது...
மருத்துவம்
நெறிக்கிறது...
சினிமா
சிரிக்கிறது...
நாட்கள்
தத்தளிக்கிறது...
நாற்காலிகள்
புலம்புகின்றன...
பேனாக்கள்
அழுகிறது...
பேப்பர் சிரிக்கிறது ..... கல்வி கடனாளியாகிறது
காலம் கைகட்டி
வேடிக்கை பார்க்கிறது....
அரசியல்
ஆட்சி செய்கிறது...
மக்கள்
மனதை பார்த்து
மேகங்களே
தேம்பி தேம்பி
அழுகிறது
மழைத்துளியாய்..
நன்றி
ராமசாமி...
Ramasamy Ramasamy
ஆடி அமாவாசை
கலங்கரை விளக்கமாய்
கதிரவன் கண் சிமிட்டி
கையில்
மங்கள நான் கொண்டு காத்திருக்க
சுவாசத்தின் மொழியே..
மேகத்தை ஆடையாக்கி..
நட்சத்திரத்தை பொட்டு வைத்து
நாள் பார்த்து
சந்திரனை
சம்சாரமாக்கிய
அம்மாவாசையே
வருக வருக...
நீத்தார் கடன்
செய்த திதியே..
நீருக்கு நீதி சொல்லி
நெஞ்சமெல்லாம்
நிறைந்த ஆடியே வருக வருக...
மக்கள் மனங்களில்
மணக்கச் செய்து
மகிழ்ச்சி பரவ செய்த
அமாவாசையே
வருக வருக..
நீடூழி வாழ
செல்வம் பெருக
ஆனந்தம் தருக..
நன்றி
ராமசாமி
Ramasamy Ramasamy
நிதர்சனம்...
மட்டைப்பந்து
மகிழ்கிறது...
மருத்துவம்
நெறிக்கிறது...
சினிமா
சிரிக்கிறது...
நாட்கள்
தத்தளிக்கிறது...
நாற்காலிகள்
புலம்புகின்றன...
பேனாக்கள்
அழுகிறது...
பேப்பர் சிரிக்கிறது ..... கல்வி கடனாளியாகிறது
காலம் கைகட்டி
வேடிக்கை பார்க்கிறது....
அரசியல்
ஆட்சி செய்கிறது...
மக்கள்
மனதை பார்த்து
மேகங்களே
தேம்பி தேம்பி
அழுகிறது
மழைத்துளியாய்..
நன்றி
ராமசாமி...
Ramasamy Ramasamy
நாட்காட்டி ...
வினாடிதோறும் வியப்பு
விடை காணாத பிறப்பு
கிரேக்கர் காலத்தில் உருவாகி வள்ளுவர்
காலத்தில் வாழம் வழிகாட்டி .ஒவ்வொரு
நாளும் ....
காலையில் மலர்ந்து
மாலையில் மடியும்
நாட்காட்டி ...
நட்ச்சத்திரத்தை நினைவு கூறி
யோகத்தை கூறும்
திசைகாட்டி ...
இவ்வளவு தான் மனித வாழ்வு என்று கூறும் நாட்காட்டி ...
சடங்குகளை கைபிடித்து
சாதியை கடந்தவன்..
ஆண்டுகள் பல கடந்தும்
அடையவில்லை மூப்பு..
யுகம் தோறும் யூகிக்க முடியாத வியப்பு..
என்னே உன் பிறப்பு...
என்றும் தொடருட்டும்
இந்த. சிறப்பு...
வாழ்க வளமுடன்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
ஆயுதபூஜை
ஆதவன்
ஆனந்தமாய் வெளிவர....
அழகிய தென்றலாய்
காலை கண் மலர
மக்கள்
மகிழ்ச்சி பொங்க..
மனதில்
உணர்ச்சி ததும்ப..
விஷேசம் எனும்
விருந்தோம்பல்
பார் வியக்க
வர்ணம் தீட்டி
பசு சாணம் மெழுகி
கண் வியக்க கோலமிட்டு..
கஜமுகனை கையில்
எடுத்து கற்பூரவள்ளி
மேல் பாக்கு வைத்து
தேன் வாழை கிள்ளி
தலவழை எடுத்து
தவறாத சுண்டல்
இட்டு. கூடவே
பலகாரம் வைத்து
பழவகை படைத்து
பள்ளி புத்தகம்
பதமாய் இட்டு..
பயன்பட்ட ஆயுதம்
தரித்து...
தேங்காய் உடைத்து
ஆசிர்வாதம் தர
அம்பாளை
ஆராதனை செய்து..
நவராத்திரியில்
நல்வாழ்வு வாழ
கொலு வைத்து
குலம் வளர
கும்பிடு போட்டு
வணங்கிறோம்..
வரம் பல தர வேண்டி
நிற்கும் உன்
அடியேன்..
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
திருப்பதியில் திருவிழா...
திசை எங்கும்
மக்கள் பெருவிழா..
அவதார புருஷனுக்கு
ஆன்மீக விழா..
உதாரண நாயகனுக்கு
புரட்டாசி விழா...
கீதை நாயகனுக்கு
சகஸ்ர விழா...
சீதை வல்லவனுக்கு
பிரம்மோற்சவ விழா
அலங்கார பிரியர்க்கு
ஆனந்த விழா...
ஆண்டாள் மணாளனுக்கு
சயன விழா...
வாமனனை வதம் செய்த நரசிம்மனுக்கு
சிறப்பு விழா...
வேதம் காக்க வரும்
கல்கிக்கு பேரின்பவிழா...
போற்றுவோம்...
வணங்குவோம்...
ராமசாமி
Ramasamy Ramasamy
... நடுநிசி...
நிசப்தமான நித்திரை
நித்தமும் நிமித்தம்
நிமிடமும் கலவரம்..
விடை தேடும் வினாக்கள்...
ஆள் அற்றவேலை
ஆங்காங்கே
அலறல் சத்தம்..
அடிக்கடி
வண்டுகள் ரீங்காரம்
அடிவயிற்றில்
அமில ஊற்று..
யாரோ ஞாபகம்
ஆவி நடமாட்டம்..
கண்கள் மிரட்சி
உதடுகள் உச்சரிப்பு
முருகா முருகா..
கசங்கிய திருநீறு..
வைகறை விடியல்
காத்திருப்பு.. அன்று
அம்மா கூச்சல்..
கண் விழித்தேன்..
பயங்கர கனவு..
உணர்ந்தேன்..
பதவி . பணம் வந்தது
படைத்தவனை
மறந்து விட்டேன்...
நடைபோட்டேன்...
ஆலயம் நோக்கி..
வாழ்வோம்.வளர்க
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
......தமிழ்....
முதற்கடவளின் மூலமந்திரம்
முருகனின்
தாரக மந்திரம்
முக்கனி சாறு எடுத்து
மூன்று காலம் எனும்
திகட்டாத தேன் கலந்து
எக்காலத்திற்கும்
வற்றாத நற்றமிழே
வாழிய செந்தமிழே
நக்கீரர் வழி வந்த
இன்பத்தமிழே....
நான்வகை நாயன்மார்
வழிவந்த தாய்தமிழே
கவிஞர்களின் கருப்பொருளே
காலத்தால் அழியாத
மெய்ப்பொருளே
கம்பரின் கவிப்பொருளே
கவிபேரசுவின்
கவிதை பொருளே
தங்கத்தமிழே
தமிழனின் தேசியமொழி
தன்னிகரில்லா
தொன்மை மொழி உன்
மடியில் பிறந்தற்க்கு
இதைவிட பெரும்பேறு
எப்ப கிடைக்கும்...
வாழ்க தமிழ்
வளர்க தமிழகம்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
கீரைகள்
சத்தானவன்
நித்தமும் சுவையானவன்...
உடலை பேணிகாப்பவன்
உள்ளத்தை குளிர்விப்பவன்...
எளிமையானவன் ஏழ்மையானவனின்
உறவுக்காரன்..
மனையாளை மயக்குபவன்...மருத்துவ குணம் நிறைந்தவன்
ஆரோக்கியமானவன்
ஆயுள் வளர்ப்பவன்
சாதாரனமானவன்
சாதனைக்கு சொந்தமானவன்...
ஏராளமான வகைக்காரன்..
என்னற்றவர் வாழ்வில்
ஒளியூட்டுபவன்...
என்னே கருணை
தொடருட்டும் பெறுமை
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
ஏய் மனிதா
ஒரு நிமிடம்...
புல்லினமே
பனித்துளியை தன்
நெஞ்சில் நிறுத்தி
புழுக்களுக்கு
வாழ்வு தரும்..
மலர்களே
மதுவால் வண்டுவுக்கு வாழ்வதரும்..
வானமே
மேகம் கொண்டு
மழைத்துளியாய்
வையகத்துக்கு வாழ்வு தரும்...
காகித கூழ்
புத்தகங்களாய்
சரித்திரம் பேசும்..
கற்களே
சிலைகளாய் சித்திரம் பேசும்...
வலைதளங்களில்
வாழ்வு தேடும்
ஏய் மனிதா
ஒரு நிமிடம்..
பிறப்பு இறப்பு
நூறு முறை அல்ல
பிறரை நேசி மனிதநேயம் மலரும்
ராமசாமி....
Ramasamy Ramasamy
வாழை
வாழம் போது வளப்படுத்துபவன்
வாழ்ந்த பின்னும்
வாழ்பவன்...
சுபகாரியத்தின்
சூத்திரதாரன்...
சூட்சுமத்தின் தந்திரதாரன்....
சமையல் கலையின்
சாதனையாளன்...
சாஸ்திரத்தின்
சரித்திரயாளன்....
நீரால் நிரம்பியவன்
நீரிழிவின் மருத்துவன்
கருவறைக்கு
கதளி ஆனவன்
கல்லறைக்கு
பூம்பழம் ஆனவன்
திகட்டாத சந்தம்
தரும் தேன்வாழையே
திரும்ப திரும்ப
ருசிக்கும் பச்சைநாடனே
யோசிக்காமல் நேசிக்கும் தாய்மையானவனே
யாசிக்க யாசிக்க
ருசிக்கும் ருத்ரனே
என்னே உன் நேசம்
என்றொன்றும்
தொடருட்டும் பாசம்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
பைத்தியக்காரன்
வாழ்க்கை பயணத்தில்
பாதையை தவறவிட்டவர்கள் பழைய. நினைவை
இழந்துவிட்டவர்கள்...
மருத்துவர்கள் நிராகரிக்கப்பட்ட
நிராயுதபாணிகள்...
மக்கள்மன்றத்தில்
மனநோயாளிகள்...
குருசேத்திரத்தில்
பரிதாபத்துகுரியவர்கள்
குற்றமில்லாத குற்றவாளிகள் ...
சமுதாயத்தில் ஏளனத்துகுரியவர்கள்...
சட்டத்திற்கு கேள்விக்குரியவர்கள்
கந்தலான துணிகள்
கனவுடன் கண்கள்
மழியாத ரோமம்
மனிதநேயத்துடன்
சில மனிதர்கள் ...
என்று மாறும் நிலைமை
எப்போது தீரும் அவலம்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
மல்லிகைப்பூ
நறுமணம் வீசும் நங்கையே...
நாள்தோறும் வளரும்
மங்கையே மனம்
வீசும் மலரே
மனதை மயக்கும்
மாதுவே....
வெளள்ளை நிற
மெல்லிடையாளே
வெள்ளந்தியாளீன்
குழலுக்கு பேரழகே...
வணிகர்களுக்கு
வாழ்வூட்டி
வாரச்சந்தையில்
மணம் கூட்டி
மணதை திருடும்
நறுமுகையே
காதலுக்கு தூதுஇட்டு
காதலியை திசைதிருப்பும்
கள்ளியே...
கவிதைக்கு மெட்டுகட்டி
புலவனுக்கு பாதைகாட்டி..
பனிதுளிக்கு இடம்
அளித்து பல
வண்ணங்களால்
வண்ணத்துப்பூச்சியை
போர்க்களைத்து
சூலகத்தை தளிர்க்கவிடும் சூத்திரமே....
என்னே உன் புகழ்
என்றென்றும் தொடர
வாழ்த்தும் இவண்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
பலா
வித்தில் உருவாகுபவன்
விதையில்லாமல் முளைப்பவன்...
விருட்சமாய் வளர்பவன்
விநாயகர் ஆசியுடையவன்...
முள்ளோடு உள்ளவன்
முக்கனியில் ஒன்றானவன்...
திகட்டாத தித்திப்பானவன் திரும்ப திரும்ப இனிப்பானவன்....
எண்ணிக்கையில் அடங்காதவன்
எண்ணியில்லா
சுளையானவன்
நகர்வீதியில் உலா
நலிந்தோர் வாழ்வில் குறைந்த விலை பலா
நாவில் தேனுரீயவனே
நாளுக்குநாள் மெருகேறுபவனே...
என்னே உன் புகழ்
என்றும் பரவட்டும் தமிழ்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
குளிர்பானம்..
கலவையின் கலப்படம்
இராசயனத்தின் இருப்பிடம் ...
தொண்டைக்கு இதமளித்து...
குடலுக்கு புற்றுநோய் தரும் வெள்ளைகாரனே
மக்களை குறுக்கு வழியில் கொள்ளையடிக்கும் குளிர்பானமே...
குளிர்ச்சியை ஏற்படுத்தும் கோககோலாவே...
கிளர்ச்சியை செய்யும் பெப்சியே...மறக்கமுடியாத. மெராண்டாவே
தண்ணீர் திருடும் தனியார் நிறுவனமே
தாமிரபரணியை அழித்த ஆங்கிலேயனே...பல
வர்ணங்களில் வந்தாலும்..வார்த்தை
வடித்தாலும் தமிழகத்தை ஆள. முடியாது தடமும் பதிக்க முடியாது
ஆதங்கத்துடன்....
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
அலமாரி...
ஆயிரமாயிரம்
ஆறறிவு மனிதர்க்கு
அறிவு ஜுவி..
எழுத்தாளர்கள்
எண்ணத்தை
தேக்கி வைத்த
நினைவாலயம்...
இலக்கியத்தை
இதயத்தில் வைத்து
இளைஞர்களை
கவரும்
புத்தகாலயம்...
உயிர் மூச்சு இல்லா
என் வாழ்வு...
உயிர்களுக்கு
உரம் இடும்
தீர்க்கதரிசி...
நான் அலமாரி...
நாள்தோறும் வைக்கவில்லை
ஒப்பாரி...
விடியல் தேடு..
விளக்கொளியில் அல்ல. நன்றி
ராமசாமி....
Ramasamy Ramasamy
மனம் அழகு
வைகறை அழகு
வான்முகில் அழகு
வானத்தில் சிதறும்
வான்மழை அழகு
வாசலில் வைத்த
கோலம் அழகு
பிரபஞ்சம் அழகு
பிறப்பு அழகு
தாய் பாசம் அழகு
தந்தை அறிவு அழகு
தங்கை கொடுத்த
முத்தம் அழகு
நண்பன் அழகு
நான்முகன் அழகு
காதலி அழகு
கடவுள் அழகு
காலம் கடந்த நினைவுகள் அழகு..
இறைவா இன்னொரு
பிறவி உன்னுடன்..
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
நீ நொழின்றி. வாழ விரும்பினால்! பிறரை நம்பாதே. உன் வாழ்க்கை உன் நம்பிக்கை. பிரறை நம்பி வாழாதே. உன்னை நீ நேசி அப்போது நீ உயர் அடைவாய்.
பாலமுருகன் க
முரண்பாடுகள்...
தலைப்பு இல்லாமல்
தவிக்கிறேன் ...
தலையீடூ இல்லாததை
மறுதலிக்கிறேன்...
மாற்றம் இல்லாமல்
தவிக்கிறேன் ...
முன்னேற்றம் இல்லாததை மறுதலிக்கிறேன்...
கிளர்ச்சி இல்லாமல் தவிக்கிறேன்...
புரட்சி இல்லாததை மறுதலிக்கிறேன்....
சாம்ராஜ்யம் இல்லாமல்
தவிக்கிறேன்...
சமுதாயம் இல்லாததை
மறுதலிக்கிறேன்...
பணம் இல்லாமல்
தவிக்கிறேன் ...
குணம் இல்லாததை
மறுதலிக்கிறேள்....
காதல் இல்லாமல் தவிக்கிறேன் ...
கடவுள் இல்லாததை மறுதலிக்கிறேன்....
உள் உணர்வுடன்...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
மனம்
உண்மையைப் பற்றி,
நிற்கும் விலங்கு..!"
அதை சூழலுக்குப்,
பழக்குதல் எளிதல்ல...!!
RK
Kalpana Subramaniam
தனியாகத்தானே
வந்தோம்..!"
பிறகு எதற்கு அவரை
இழந்தோம்..
இவரை இழந்தோம்..
என்று வருத்தப்பட்டு..
நம்
வாழ்க்கையின் பெறுமதியான..
நேரத்தை செலவிட வேண்டும்..!"
போகும் போதும் தனியாகவே
போக வேண்டும்..!"
இருக்கும் வரை,
எவரையும் எதிர்பாராமல்..
யாரையும் புண்படுத்தாமல்..
வாழ்ந்து
விட்டுத்தான்..
போவோமே யார்
தயவும் இன்றி...!!
RK
Kalpana Subramaniam
காற்றாய் இருந்து விடு..
உன்னை யாரும் தடுக்க முடியாது..!"
கடலாய் இருந்து விடு..
உன்னை யாரும் அளக்க முடியாது..!"
மழையாய் இருந்து விடு..
உன்னை யாரும் மறுக்க முடியாது..!"
மலையாய் இருந்து விடு..!"
உன்னை யாரும் ️மறைக்க முடியாது..!"
ஒளியாய் இருந்து விடு_
_உன்னை யாரும் பிடிக்க முடியாது_
_கடின உழைப்போடு..!"
நீ என்றுமே இருந்து விடு..!"
உன் வெற்றியை..
யாரும் தடுக்க முடியாது_.!!
RK
Kalpana Subramaniam
மனம் ஒன்றுதான்..
எண்ணங்கள் பல..
அன்பு ஒன்றுதான்..
அன்பிற்குரிய விஷயங்கள் பல..
விஷயங்கள் மாறுகின்றபொழுது..
அன்பும் மாறுகின்றது..
ஆனால்..,
அன்புக்காக மட்டும் அன்பிருந்தால்..
விஷயங்கள் மாறினாலும்..
அன்பு மாறாது...!!
RK
Kalpana Subramaniam
அலுவலகத்தில்
அவள் கால்களுக்கு பிடித்தது கொலுசோசை
வீட்டில் இருக்கையில் அவள் காதுகளுக்கு பிடித்தது அவன் கால் ஓசை ......
Karuppasamy
️️️️
ஒழுக்கம் இல்லை என்றால்,
நீ குற்றவாளி..!"
வேலையில் அக்கறை குறைவு என்றால்,
நீ சோம்பேறி..!"
வாகனத்தில் கவனம் இல்லை என்றால்,
நீ பிணம்..!"
வியாபாரத்தில் கவனம் இல்லை என்றால்,
நீ கடனாளி..!"
உணவில் கவனம் இல்லை என்றால்,
நீ நோயாளி..!"
RK
️️️️
Kalpana Subramaniam
️️️️
பகைவனுக்கு
மன்னிப்பை பரிசளி..!"
உன் குழந்தைக்கு,
நல்ல நடத்தையை பரிசளி..!"
உன் மனைவிக்கு,
நல்ல தன்மையை பரிசளி..!"
உன் தந்தைக்கு,
மரியாதையை பரிசளி..!"
உன் தாய்க்கு,
பெருமையை பரிசளி..!"
உன் நண்பனுக்கு,
உன் உள்ளத்தை பரிசளி..!"
உன் மனசாட்சிக்கு,
நம்பிக்கையை பரிசளி..!"
உன் உறவுகளுக்கு,
உன் உணர்வை பரிசளி..!"
உன் சகோதரனுக்கு,
நேசத்தை பரிசளி..!"
எல்லா மனிதரிடமும்,
தாராள குணத்தை பரிசளி...!!
RK
️️️️
Kalpana Subramaniam
ஆயுதபூஜை
ஆதவன்
ஆனந்தமாய் வெளிவர....
அழகிய தென்றலாய்
காலை கண் மலர
மக்கள்
மகிழ்ச்சி பொங்க..
மனதில்
உணர்ச்சி ததும்ப..
விஷேசம் எனும்
விருந்தோம்பல்
பார் வியக்க
வர்ணம் தீட்டி
பசு சாணம் மெழுகி
கண் வியக்க கோலமிட்டு..
கஜமுகனை கையில்
எடுத்து கற்பூரவள்ளி
மேல் பாக்கு வைத்து
தேன் வாழை கிள்ளி
தலவழை எடுத்து
தவறாத சுண்டல்
இட்டு. கூடவே
பலகாரம் வைத்து
பழவகை படைத்து
பள்ளி புத்தகம்
பதமாய் இட்டு..
பயன்பட்ட ஆயுதம்
தரித்து...
தேங்காய் உடைத்து
ஆசிர்வாதம் தர
அம்பாளை
ஆராதனை செய்து..
நவராத்திரியில்
நல்வாழ்வு வாழ
கொலு வைத்து
குலம் வளர
கும்பிடு போட்டு
வணங்கிறோம்..
வரம் பல தர வேண்டி
நிற்கும் உன்
அடியேன்..
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
பேச்சுக்கள் நீங்கிய மௌனங்களும்..
பிரச்சனைகள் இல்லாத பிரியங்களும்..
பிரம்மாண்டம் நிறைந்த தனிமைகளும்..
பழக்கமாய் பக்கம்வர..
வலிக்காதொரு வலி மட்டும்..
விலகிநின்று வேடிக்கை காட்டுகிறது..!!
RK
Kalpana Subramaniam
நூலகம்
சாஸ்திரங்களை உருவாக்கிய வேதசாலை
சாதனையாளர்களை
உருவாக்கிய. பாடசாலை
மக்களுக்கு வழிகாட்டிய
மகான்களின் அறிவாலயம்
பல ஆன்மாக்கள் வாழம்
நினைவாலயம்
மாணவர்களுக்கு வழிகாட்டிய சிந்தனைக்கூடம்
மாமனிதர்களை உருவாக்கிய புத்தககூடம்
ஆராய்ச்சியாளர்களை உருவாக்கிய விஞ்ஞானகூடம்
ஆசிரியர்களுக்கு வழிகாட்டிய பள்ளிகூடம்
உள்ளத்தை வழமைப்படுத்தி
சிந்தனை செழமைபடுத்தும் கலைகளஞ்சியம்
அறிவை பெருக்கி
ஆன்மீகத்தை வளர்ப்போம்
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
அவள்
நறுமுகையே நீ ஒரு நற்றினை..
நாள்தோறும் வளரும்
நளவெண்பா..
தென்றலே அவள் ஒரு
கலித்தொகை...
தேனூரும் அவள்
நினைவு திருவருட்பா
மேகமே அவள்
ஒரு வளையாபதி..
மென்மையான
கன்னம் மேகலை..
சிரிப்பு சிந்தாமணி
சீரிய வகுடு சிலப்பதிகாரம்...
அசையும்குன்டலகேசி
அவாதரும் நாலடியார்
என்னுள் பத்துபாட்டு
என்றும் ஓயாத பதினென்கீழ்கணக்கு
நினைவுடன் அகநானூறு...
தொடருட்டும் புறநானூறு...
ராமசாமி 9842943570
Ramasamy Ramasamy
என்னை
போர்க்களத்தில்
தள்ளிவிட்டு
நீ சமாதானப்புறா போல
தள்ளி நின்று கொல்கிறாய்...
Karuppasamy
பழகும் போது சொல்லும்,
பாதி பொய்களில்,
இதுவும் ஒன்று..!
உன்னை தவிர,
வேற எதுவுமே,
முக்கியம் இல்லை என்று...!!
RK
Kalpana Subramaniam
ஒவ்வொரு நாளின் தொடக்கத்திலும்..
ஒரு எதிர்பார்ப்பு..!
ஆனால்..
ஒவ்வொரு நாளின் முடிவிலும்..
ஒரு அனுபவம்..!
அதுதான் வாழ்க்கை...!!
RK
Kalpana Subramaniam
மனித பிறப்பித்து,
மகத்தான பிறப்பித்து,
அன்பால் வசப்படுத்தி
ஆளவேண்டிய உலகம் இது..!"
மனித உறவை தேடமறுத்து,
தீங்கிணை தேடும் உலகம்..!"
மனித உணர்வுக்கு இடமில்லை,
நல மனிதர்க்கு மதிப்பில்லை..!"
வசதி மட்டுமா வாழ்க்கை என்பது,
வாழ்ந்து மடியும் பொய்யான உலகில்,
அசதிக்கு ஆறுதல் தரும்,
அன்பு சொந்தங்கள் தேவை இல்லையா..!"
பணக்காரன் பெருமனிதன்,
கடன்காரன் தெருமனிதன்,
உறவுகள் இருந்தபோதிலும்,
பணமற்றவன் அநாதையே..!"
பார்த்தும் பார்க்காமல் செல்வான்,
பகைவன்போல் ஒதுங்கி செல்வான்,
நேற்றுவரை நெருங்கி இருந்தவன்,
இன்று தூரம் போனான்
சுயநலமாய்..!"
வரவை தேடியே உறவும் நெருங்கும்..!"
வரவிருந்தால் உறவு தொடரும்..!"
வரவில் கொஞ்சம் விரிசல் விழுந்தால்,
உறவில் கூடவே விரிசல் வரும்..!"
மனம் பார்க்காத உறவு அது..!"
குணம் பார்க்காத உறவு அது..!"
நிறம் பார்க்காத உறவும்,
வசதி தேடி உன்னுடன் உறவு கொள்ளும்..!"
அன்பு பாசம் நேசம் எல்லாம்,
அடகுவைத்துவிட்டார் பணமிடத்தில்..!"
உறவை தேடும் சொந்தம் உலகில் இல்லை..!"
வரவை தேடும் சொந்தகளுக்கிடையில்...!!
RK
️
Kalpana Subramaniam
மகனின் மாற்றத்தை,
திருமணத்திற்கு பின் உணரலாம்..!"
மகளின் மாற்றத்தை,
வாலிப வயதில் உணரலாம்..!"
கணவனின் மாற்றத்தை,
மனைவி நோய்வாய் படுதலில் உணரலாம்..!"
மனைவியின் மாற்றத்தை,
கணவனின் வறுமையில் உணரலாம்..!"
நண்பனின் மாற்றத்தை,
கஷ்ட காலத்தில் உணரலாம்..!"
சகோதரனின் மாற்றத்தை,
சண்டையில் உணரலாம்..!"
சகோதரியின் மாற்றத்தை,
சொத்து பரிமாற்றத்தில் உணரலாம்..!"
பிள்ளைகளின் மாற்றத்தை,
நமது முதுமை காலத்தில் உணரலாம்..!"
எப்படி எதையும் ஆராய்ந்தாலும்,
பல எண்ணங்கள் மனதில் சூழந்தாலும்,
ஒப்பிட மாறா ஒன்றில்லை என,
உணர்ந்தால் வாரா ஒரு தொல்லை..!"
தப்படி வைத்தே நடக்கின்றோம்..!"
பிறர் தடுப்பின் போரே தொடுக்கின்றோம்..!"
இப்படி இருக்கும் இவ்வுலகின்,
இனி எல்லாம் மாற்றம் மாற்றம் தான்..!!
RK
️
Kalpana Subramaniam
உரிமை..
எடுத்துக்கொண்டு..
நம்மிடம்..
கோபம் கொள்ளும்..
உறவுகள்..
எளிதில் எல்லோருக்கும்..
அமைவது இல்லை...!!
RK
Kalpana Subramaniam
நான் ஆசைப்படுகிறேன்.
நீ ஆச்சர்யப்படுகிறாய்.. !
Karuppasamy
காணவில்லை...?
நான் இருக்கிறேன் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்றவர்கள்.....!!
Karuppasamy
உன் கார் குழல்
அடங்க மறுக்கின்றதோ
யாருக்கும் கட்டுப்படாத
உன்னிடம்...
Ilakkiya sri
செயற்கை மலர்
வண்ணம் கலையாது
அன்று மலர்ந்த மலர்
போல் பெண்களின்
சிகையோடு உறவாடி
எழிலுடன் நகைக்கும் ...
Ilakkiya sri
கேரள பெண் மகள்
கலகலவென நகைக்கின்றாளே
மலர்கள் கூட மெல்ல மெல்ல
மொட்டுக்களை அவிழ்க்கும்
இவள் பூஞ்சிரிப்பின்
மொட்டுக்கள் நொடியில்
அவிழ்ந்து விடும்...
Ilakkiya sri
நீ என்னைப்பெண் பார்க்க
வருவாய் என்பதால் தான் இத்தனை ஒப்பனை இவை எல்லாம் கொஞ்ச நேரமே உண்மை எழில் காண விரும்பி கேட்கத்துணிவு இருந்தால் ஒப்பனை எதற்கடா...
Ilakkiya sri
மனதுக்கு திரை போட்டாலும்
வயதுக்கு திரை போட இயலாது...
Ilakkiya sri
தனிமையை விரும்பும் போது
மனம் இசை எனும் நதியினிலே
நீந்தி கரை சேர இயலாமல்
தவிக்கின்றது...
Ilakkiya sri
கடிதம் என்பது..
பிரியாமல்..
இருக்கும் உறவை..
மேலும் பிரியத்தோடு..
பிரியாமல்..
இருக்கவைக்கும்..
இயந்திரம் ஆகும்...!!
RK
Kalpana Subramaniam
உங்களின் புன்னகை அகம்
எனும் பெட்டிக்குள் அடைபடுவதை விட புறம் எனும் இதழ் கொண்டு புன்னகைத்தால் மழலையின் புன்னகைக்கு ஒப்பாகுமே...
Ilakkiya sri
அமைதியாய் இருக்கும் நபர்களை எப்போதும் துட்சமாக எண்ணாதே!_
_காற்று கூட அமைதியானது தான் ஆனால் அதன் உண்மை சுயரூபத்தை சூறைக்காற்றில் நன்கு அறிவாய்!
Freash Status
உன் புன்னகையை விலை பேசும் உரிமை எவருக்கும் இல்லை...
Karuppasamy
அடிமை பட்டு கிடந்தவனுக்கே தெரியும் சுதந்திரத்தின் மகிமை
பெற்ற சுதந்திரத்தினைப்
பேணிக் காப்போம்
ஒரு தாய் குழந்தையையைப்
பார்ப்பது போல
குழந்தைகள் தாயைப்
பார்ப்போம்
தரணியில் திளைப்போம்
saranya k
பேசுபவர்கள் பேசிக் கொண்டே இருக்கட்டும்!
அது ஆணவப் பேச்சாகக் கூட இருக்கலாம்!
என்றும் ஆய்ந்து அறிந்து பேசுவது நலம்!
அது அகமார்ந்த ஆனந்த பூரிப்புக்கு வழிவகுக்கும்!
மகுட தாரிணி
நன்மை, தீமை...
தீமையில் உழன்று வெற்றியில் திளைத்தாலும் கூட
தீயதையும் தீயவர்களையும் துளியும் மாற்ற முடியாது!
நன்மை செய்ய முயன்று தோற்றாலும் கூட
நல்லதையும் நல்லவர்களையும் புரிந்து கொள்ளவாவது உதவும்!
மகுட தாரிணி
குழந்தை சிரிப்பும்
குறும்பு மகிழ்ச்சியும்
உன்னால் மட்டுமே
தரமுடியும்
ஆதலால் எப்போதும்
என் பின்னால்
நிழலாய் இரு ......
Karuppasamy
இந்தப்
படத்தில்........!!
விலங்குகள்
பறவைகள்.......!!
துன்புறுத்தப்
படவில்லை......!!
ஆனால்......!!
மனிதர்கள்
துன்புருத்தப்
படுகின்றனர்........!!
படம் : ஜெய்பீம்
ஸ்ரீஜா
சந்திரசேகர்
ஸ்ரீஜா சந்திரசேகர்
வெட்டுமரத்தின்
தண்டில்
வந்தமர்ந்து
தன் கிளைகளை
தேடும்
பறவை பாேல்
நீ
சென்ற பின்னும்
அங்கேயே
நின்று
கொண்டிருக்கிறேன்
உன்னை
எதிர்பார்த்தபடி
படைப்பு
ஸ்ரீஜா
சந்திரசேகர்
ஸ்ரீஜா சந்திரசேகர்
தமிழ்
சந்தம் கொஞ்சும் தமிழ்
மலை வளம் உரைக்கும் தமிழ்
சிலம்பின் ஓசை அள்ளும் தமிழ்
கற்பின் கவி சொல்லும் தமிழ்
தூரிகையின் தீண்டலில்
உயிர் பெறும் தமிழ்
மலர்களின் காதலில்
திளைக்கும் தமிழ்
உலகம் போற்றிடும் தேன்
சிந்தும் தமிழாய் தவழ
நாம் அனைவரும்
இணைந்து தமிழை
அள்ளிப்பருகி வளர்ப்போம்.
Ilakkiya sri
குழந்தையின்
சிரிப்பு ஒன்றே
போதும்
மனதிலுள்ள காயங்களை
குணப்படுத்த...!
Shiny Mani
பௌர்ணமி இரவில்
கலவி கொள்ள நாணம் கொண்டு
இருளைத் தேடிய மலர்களும் பறவைகளும்...
Ilakkiya sri
கனவுகளை புதைத்து
நிஜங்களில் பயணி
அன்பு எனும் விதை நடு
ஆசை எனும் வேர் விருட்சமாகி
மலர்கள் பூத்து வாசம் சிந்தும்
நீ புதைத்த கனவுகள் நிஜமாகும்...
Ilakkiya sri
சொல்வதை செய்வது
செயல் படுத்த முடியாத கலை
நாம் செய்யும் செயல் முடிக்கும்
திறம் நிதி இலக்கு இவை அனைத்தும் ஒன்றினைந்தது சொல்வதை செய்யும் இன்றைய
கணினியின் வளர்ச்சி...
நிழல் முகங்களில்
இன்சொல் பேசி
நிஜங்களில்
வன்சொலால்
பிறர் மனதை
நோதலும் உலக
இயல்பு...
Ilakkiya sri
உன்னிடம்
பேசாமல் தான்
தவித்து கொண்டிருக்கிறேன்
என்பதை சொல்வதற்கு கூட
உன்னிடம்
பேச
முடியவில்லை ..
Karuppasamy
அதிகபட்சம்
என்னால் என்ன
செய்துவிட முடியும்..
மௌனமாய் இருப்பதை தவிர..
Karuppasamy
அளவில்லா ஆனந்தம்
தருவதும் அளவில்லா
சோகம் தருவதும்
நம் மனதிற்கு பிடித்தவர்கள்
மட்டும் தான்
Karuppasamy
சேருமிடம் பார்த்து சேர்..
கோயில் குளத்தில்
விழும் மழை தீர்த்தம்..
குட்டையில் விழும்
மழை அசுத்தம்..
அதுதான் வாழ்க்கை!
Karuppasamy
மண்ணுலக
மங்கையர்களுக்கு
மாதம் மாதம் வரும்
மாதவிடாய் ஒரு சாபம்
Arif Mohammed
மழை சாரல் நதியில் வீழ்கையில்
துள்ளும் மீன்களின் மகிழ்வும்
சிறகுகள் வெட்டப்பட்ட பறவைக்கு சிறகுகள் முளைக்கையில் அதன் மனதில் தோன்றும் மகிழ்வும்
நம்மிடம் காதலினை சொல்கையில் பல முறை முகம் காட்டும் கண்ணாடியில் நம் அழகினை கண்டு மகிழும் தருணங்களும்
மாராப்பு அணிகையில்
புதிதாக அணிந்த வளையலின்
சத்தங்கள் உன் துணைக்கு சந்தங்களாக மகிழ்ச்சிக்கு எல்லை ஏதாடா...
Ilakkiya sri
கடவுள் எந்த ஒரு மனிதரையும்...காரணமின்றி நம் வாழ்வில் அனுமதிப்பதில்லை..."
"பாடமாக சில பேர்"
"பாலமாக சில பேர்...!
Karuppasamy
கள்வர்களுக்கு உறக்கம் ஏது ?
"கனவுகள் வாடும் போது காயங்கள் மலரும்
நான் தூக்கத்தைக் களவாடும் நேரம்
அங்கே கள்வர்களின் நடமாட்டம் !!"
S Sankari
விவசாயம் சொல்லும் கதை
"காடு கன்னி பூக்கலயே
தோட்டந் தொரவு பாக்கலயே
என் மனசெல்லாம் விக்கித் தவிச்சு நாளும் கோளும் பார்க்கச் சொல்லுதய்யா !
நாமளும் கைய நீட்டி வெரசாத்தான் நடக்க வேணுமய்யா
கண்கள் ரெண்டிலும் காகங்கள் கரையுதம்மா
காலங் கெட்டு க் கிடக்குதய்யா மர அச்சாணி வேணுமுன்னு
அட்சதைப் போட கெடக்கலயே அரை அரிசி கூட இல்லயே
முழு நெல்லும் உமியாச்சு விளைஞ்சதெல்லாம் களையாச்சு
விவசாயம் இல்லேனா குலநாசம் ஆகுமுன்னு
இது சொல்லிவச்ச பாடமுங்க சொல்லாம விளங்குமுங்க"!
S Sankari
கழுதைய பாத்தா யோகம் தான் .
ஆனா அந்த கழுதையை பாக்குறதுக்கே யோகம் வேணும் ங்க...
MURUGESAN KR
இரவு பகல் பாராது
தத்தம் வேலைகளை செய்து விட்டு
இளைப்பாறும் நேரத்திலே கைபேசியை தொடுகையில் ஏனோ என் மனம் உற்சாகம் கொள்கிறது தொலைவில் இருந்தாலும் விருப்பமானவர்களிடம்
நிதம் கதைத்து களிப்புறவும்
பல நிகழ்வுகளைப்பகிர்ந்து கொள்ளவும் உன்னைத்தவிர
யார் உளர்...
Ilakkiya sri
கைக் கொள் என் உலகமே 888
"போகும் இடம் தெரியாமலே கால்கள் ஓடுதே !
காற்றாக கடல் அலையாக நெஞ்சம் பதறுதே !
உறவுகளைத் தாண்டி உணர்வைத் தாண்டி உலகம் வருமா ?
அன்பைத் தாண்டி அரணைத் தாண்டி உலகம் விரும்புமா ?
கேட்கிறேன் கேட்கிறேன் கேளா மொழிகள்
கேட்கிறேன் கேட்கிறேன் கேட்காமலேயே ஏன் இந்த பிறப்பு ?
வறுமை உலர்ந்த இந்த உலகம்
வளமை வளர்க்க என்று வரும் இந்த உலகம்?
போகிறேன் போகிறேன் போக்கிடம் உண்டா ?
போகிறேன் போகிறேன் போகும் இடம் வருமா ?
ஆராரோ ஆரீரரோ என்று பாட வந்தேன் தூங்கு என் உலகமே !
ஆராரோ ஆரீரரோ என்று பாடி
சொல்வேன் தூங்காத என் உலகமே !
பகல் இரவாய் நீயும் நானும்
தனிமையில் இருப்போம் யாரும் அறியாமலே !!"
S Sankari
செ ங் கம ல நூ த லில் சிறு செந்தூர உள்ள தூ என்று ஆக து டி ப் பில் துஞ்சும் பேதை நெஞ்சு பிழிப்பது தின்னம்
Palani Muthu
நினைவுகள் சுகமானவை
இசையை செவி மடுக்கையில் தென்றலின் அலையில் நினைவுகள் காற்றோடு கலந்துரையாடும் மலரோடு உரையாடும் நதிகளோடு உரவாடும் மான்களுடன் துள்ளி மகிழும் இந்நினைவுகளைத் தொட்டு விட முடியவில்லை என்றால் மறதி நோய் எட்டிப்பார்க்கும் உன்னை நீ அறிய மாட்டாய்...
Ilakkiya sri
மனம் என்னும் சாரலில்
மறைத்து வைத்த இரகசியத்தை
அள்ள முடியாது அவர்களாக
உரைத்தால் தவிர.
Ilakkiya sri
பொங்கி எழும் கடலின் ஓசையை
செவி மடுக்கையில் நம் மனம் அமைதி தரும்
நிதமும் மலர்கள் மலர்வதை கண்டு இரசித்தும் வாசம் நுகரும் போதும் மனம் அமைதி தரும்
நம் உணர்வுகளுக்கு உரமிட்டு நம்
மேல் காதல் வயப்படும் போது
மனம் அமைதி தரும்
இம்மன அமைதி கிடைத்தால்
உலகம் நம் வயப்படும்.
Ilakkiya sri
மழை நனைத்த காலையில்
தோன்றும் மண் வாசம்
தென்றலுக்கே
பெருமை சேர்த்தது.
Ilakkiya sri
கதை முடிந்த பின்னும்
கதையின் புனைவு
இயற்கை வளங்களில்
நம்மை ஒன்றச்செய்த விதம்
புதிய பரிமாணங்கள்
இவை அனைத்தும்
இரசித்த பின்னும் மீண்டும் நினைவுகளில் அலைகளாய் ஆர்ப்பரிக்கும் அதன் அழகு.
Ilakkiya sri
நிலவின் அழகு
காற்றின் ஓசை
நட்சத்திரத்தின் நடனம்
தலையணையுடன் உரையாடல்
கண்ணீர் துடைக்க போர்வை
என்னுடன் சண்டையிடும் கொசுக்கள்
கடமை தவறா நாய்களின் சத்தம்
நிலவின் அழகை ரசிக்க மறுக்கும் கண்கள்
கண் திறந்தால் அம்மாவின் சத்தம் (alarm)
என் இனிய தனிமையே..
t
நெற்கதிர்
விளைந்த வெள்ளிமணி அதன்மேல், வெயிலில் மின்னும் பனி!
ஒவ்வொரு விடியலும்
காண ஏங்கும் கனவு!
அந்த ஏக்கம் பிறக்காத உழவனும் இருந்ததும் உண்டோ!
மகுட தாரிணி
மௌனத்தில்
மஞ்சத்தில் தோன்றும்
புணர்ச்சியின் சிணுங்கல்கள்
கூடலின் அழகு .
Ilakkiya sri
வேட்கை
சோகம், அழுகை, இயலாமை, வெறுமை, நன்மை, தீமை, மகிழ்ச்சி இவை யாவும் புதைந்த மனிதமனம் குப்பைத் தொட்டியா?
துரோகம், எள்ளல், வெறுப்பு - இவை யாவையும் கொண்ட மனம் பொக்கிஷமா?
மனதின் அமைதியை அடையாளம் காணும் கலை, இசை, விளையாட்டு முதலியவை
நம் மனதை பேணிக் காக்கும்.
அது வெறும் தொழிலல்ல மனித மனதின் வேட்கை!
மகுட தாரிணி
தினமும் சுத்தம் செய்ய வருபவன் இன்றொரு நாள் வரவில்லையே என மறுநாள் காலை வரை காதலுடன் காத்திருக்கிறது
-குப்பைதொட்டி
பவி
உன் பெண்மையின்
மென்மையுடன் நடந்த
ஒப்பனை எழிலுற
சிகையிலே நட்சத்திரங்கள் மின்ன
காதனி மின்னி அசைய
விழிகள் வண்ண மீன்களாக
மூக்கணி மேலும் எழிலூட்ட
ரோஜா இதழ்கள் புன்னகைக்க
முத்துப்பற்கள் வரிசையொடு மின்ன
கழுத்திலே நவரத்தினங்கள் ஜொலிக்க
கொங்கைகள் மாதுளையாக
கைகள் தாமரையாக
இடையோ நாணலாக
பாரிஜாதம் நாணுற்று மலர
அன்னத்தின் நடையாக
பாதுகை மலர்களாக
புரவியிலே பவனி வர
அவளோ மண்ணில் இறங்க
நானோ அவளை ஏந்தினேன்
இரவினை நல்கி
இனிய மஞ்சத்தொடு..
Ilakkiya sri
உழைப்பாளர்களின்
கனவு நனவாக வேண்டும்
உழைப்பாளர் இல்லையெனில்
இருக்காத இயக்கங்கள்
உழைப்பாளரின் தேவையை
அறிந்து செய்
உழைப்பாளர்களுக்கு ஓய்வு கொடுத்து ஊக்குவி.
Ilakkiya sri
நம் இந்திய பாரதம் !
வந்தே மாதரம் நம் இந்திய பாரதம் !
அன்னை பாரதம் அணைக்கும் பாரதம் !
புகழினில் சிறப்பினில் ஓங்கிய நம் இந்திய நாடு !
நட்பினில் கருணையில் ஏங்கிய நம் இந்திய நாடு !
காலம் போற்றும் தனித்திரு நாடு !
உலகம் போற்றும் உன்னத நாடு !
குடிலைப் பெருக்கும் குலம் தரும் நாடு !
விடியலைச் சொல்லும் விழித்திரு நாடு !
பாண்டவர் வாழ்ந்திட்ட பழம்பெரும் நாடு !
விண்ணை அளக்கும் வித்தக நாடு !
S Sankari
அன்பாயிரு ! அன்னையாயிரு !
உணவை வீணடிக்காதே
உணவுக்காக நீ வீணடிக்கப்படுவாய்
உறவை உதாசீனம் செய்யாதே
உறவுக்காக ஒதுக்கப்படுவாய்
அன்பை அலட்சியம் செய்யாதே
அன்புக்காக அலைக்கழிக்கப்படுவாய்
நன்றியை மறக்காதே
நன்மைக்காக நீ மறைக்கப்படுவாய்
S Sankari
ஸ்ரீஅருணாச்சலா
தேவாதி தேவா ஸ்ரீஅருணாச்சலா !
தேவாரம் பாடி வந்தோம் ஸ்ரீஅருணாச்சலா !
கரம் குவித்து உன் புகழ் பாட வந்தோம் ஸ்ரீ அருணாச்சலா !
காத்திருந்து காத்திருந்து உன்னைச் சரணடைந்தோமே !
காலம் முழுதும் உனக்காக வணங்கி நின்றோமே !
திருமாலும் பிரம்மனும் உன் உருவைக் காண அருகில் வந்தவர்களாம் !
நீ அடி முடியாய் நீண்டிருந்தாய் ஸ்ரீஅருணாச்சலா !
ஜோதியாய் நின்ற உருவானவா !
உனக்காகவே நான் உருவானதா !
S Sankari
சின்ன சின்ன யானை
சின்ன சின்ன யானை
சிலுங்க வைக்கும் யானை
கூட்டுக்குள்ள யானை
கூடி பாடும் யானை
சிங்கார குரலு யானை
ஒய்யார நட யானை
பாப்பாவுக்கு பிடிக்கும் யானை
பம்பரமா சுழலும் யானை
கட்டி பிடிக்கவும் முடியாது
கட்டி போடவும் முடியாது
கேரளா வீட்டு யானை
கதகளி ஆடும் யானை
கண்ணழகு யானை
காலாட்டும் யானை
கொள்ளையழகு யானை
கொலுவிலிருக்கும் யானை
S Sankari
அழகிய பூனையே
எங்கோ பிறந்து எங்கோ திரிந்து
என்னிடம் வந்தாயோ
நினைக்கும் நேரத்தில் உணவருந்தினாயோ
பஞ்சனையில் துயின்றாயோ
என் மடியில் தவழ்ந்தாயோ
உனக்கொரு துணை கிடைத்ததா
அவனுடன் கூடல் கொண்டாயோ
அவன் மேல் எவ்வளவு அன்பு
அவனுக்கு பிடித்த உணவை
நீ உண்ணாமல் அவனுக்குத்தந்து
பார்த்து இரசித்தாயே
என் மீது அளவு கடந்த அன்படீ
உனக்கு இருப்பினும்
உன் தோழிகளை காண
இயலாமல் நீ தவிப்பது எனக்குப்புரியாதா
செல்லமே புரிந்தாலும்
உன்னை விட மாட்டேன்
நீயும் நானும் வேறானாலும்
இருவரின் அன்பும் ஒன்றல்லவா செல்வமே.
Ilakkiya sri
அழகிற்கு குறைவில்லை
அள்ளி எடுத்து அணைக்க
சந்தனக்குழம்பை மேனியில் பூசி
மெருகூட்டி வாசம் சேர்த்து
நறுமணம் மிக்க சாம்பராணி
தூபத்தை சிகையிலே காட்டி
அழகுடன் வாசம் மிகுந்து
சொல்லொனா மயக்கத்துடன்
நானும் அவளும்.
Ilakkiya sri
இருளின் மடியில்
தாரகைகள்
மின்னுவது போல்
இருளின் மடியில்
இரவின் தாலாட்டில்
இதய வாசல் திறந்திட
மனதிலே காதல்
பூக்கள் மலர
கவி பாடி தாரகையாய்
நீயும் மின்னுகிறாய்
இனிய நெஞ்சத்தொடு.
இத்தமிழ் புத்தாண்டில்
தமிழின் தமிழரின்
சிறப்பை
நினைவு
கொள்வோமே.
தமிழரின் மரபை
அறிவோமே
தமிழின் இனிமை
அறிவோமே
தமிழின் சுவையை அள்ளிப்பருகுவோமே
தமிழரின்
விருந்தோம்பலை
ஆராதிப்போமே
தமிழன் அன்பை
கொடுத்துப்பெற்று
களிப்புறுவதை
உணர்வோமே
தமிழினைக்கரம்
பிடித்தால்
நேசத்தை
அள்ளி
இரசிக்கலாமே
தமிழ்
நிலவு போல்
தண்ணொளி
வீசி பறக்கட்டுமே.
Ilakkiya sri
புலன்களின் தவம்
செவிகளுக்கும் விழி உண்டு
புலக்காட்சி என்ற தனை அழைப்பர் காணீரோ!
சொற்களுக்கும் நுகரும் தன்மை உண்டு,
நோக்கம் என்பார் அதனை,
செவி மடுப்பீரோ!
விழிகளுக்கும் இதயம் உண்டு,
கருத்துக்களுக்கும் உயிரோட்டம் உண்டு,
உணரீரோ!
உணர்வுகளுக்கும் அறிவு உண்டு,
அவதானித்தலில் தான் பெருமளவு அறிவு பெருகும்,
அறிவீரோ!
மகுட தாரிணி
மௌனம் அளவோடு இருத்தல் வேண்டும்
மௌனம் நம்மை யார் என அறிந்து கொள்ள முடியாமல் நம்மை காத்துக்கொள்ள உதவும்.
அதிகமான மௌனம் நம்மை யார் என அறியாமலே செய்து விடும்.
மௌனம் அதிகமானால் ஒன்றும் அறியாதவள் என்ற பட்டத்தை அளிப்பர்.
Ilakkiya sri
தமிழ் மொழி!
நாவினிலே நாட்டியமாடும் மொழி..
நற்பண்பை கற்பித்த மொழி!
ஆதிகால பழம்பெருமை வாய்ந்த மொழி..
ஆசான் கற்பித்த மொழி!
இயற்கை இயன்ற இனிமையான மொழி..
ஈசன் இறைத்த மொழி!
முப்பாட்டனார் பேசிய தேசிய மொழி..
முன்னோரின் மூத்த மொழி!
காதில் இன்னிசைப் பாடிடும் மொழி..
கனாவிலும் காட்சித்தரும் மொழி!
தாய்லாந்திலும் பேசப்படும் மொழி..
தாய்மொழி தமிழ்மொழி!
இதயத்தின்_குரல்
இன்னொரு பிறவி பூமியில் பிறந்தால் தமிழை நான் பேசிட வேண்டும்...
எத்தனை மொழிகள் கேட்கின்ற போதும் தமிழிலே பொருள் கொள்ள வேண்டும்...
செவி வழி கேட்கும் மொழிகளில் எல்லாம் தமிழ் மணம் வீசும் எப்போதும்...
மொழியினால் நாங்கள் பிரிவினை பேசி பிரிந்திடப்
போவதுமில்லை..
முத்தமிழ் யார்க்கும் முதல் மொழி எனவே அனைவரும் எந்தன் உறவே..
"என் தாய்க்கும் தாய் மொழி தமிழே..." என் தாய் இந்த வரியை படித்திடும் போதும் படித்ததின் அர்த்தம் சரியே..
உன்னோட நண்பன்
உன் கவிதை புத்தகத்தில் நீ தேடாத பக்கத்தில் நான் புதைந்து கிடக்கின்றேன்.
என்றேனும் தென்படுவேன் என்றே நான் உறங்குகிறேன்.
உன்னோட நண்பன்
முயற்சி
உன்னால் முடியும் என்பது நம்பிக்கை
Bhavaani Prakash
மணல் விளையாட்டு
ஆற்றங்கரை ஓரத்திலே
அத்தை மகள் அருகினிலே
மணச்சலித்து நிரூற்றி
மட்பாண்டம் பலச்செய்து
கூட்டாஞ்சோறுபல செய்து
பரிமாறும் பொழுதினிலே
மட்பாண்டம் உடைந்திடுமே!
மனசெல்லாம் நிறைந்திடுமே!
கடற்கரையின் நடுவினிலே
மணல் வீடுக்கட்டி முடித்திடவே
அலைவந்து நனைத்திடுமே
வீடுத்தனைக்கரைத்திடுமே!
அன்றிருந்த மணல் விளையாட்டு இன்றில்லை
மழலைக்களின் பிஞ்சு விரல்
மண்பிசைந்து விடையாடிடவே!
மணலும் தவம் கிடக்குது
மழலைகளே வாரீரே
மணல்விளையாட்டு விளையாடி
மனமெல்லாம் மகிழ்வோமோ
PREETHI KARTHIK
அ"ன்பில் எழுதிய கவிதை..
ஆ"சையில் எழுதிய கவிதை..
இ" சைக்கு எழுதுவேன் கவிதை..
ஈ "கைக்கு எழுதிய கவிதை..
உ"ரிமையில் எழுதிய கவிதை..
ஊ"க்கத்தில் எழுதினேன் கவிதை
எ"துகையில் எழுதிய கவிதை..
ஏ"ற்கொண்டு எழுதிய கவிதை..
ஐ"ந்தெழுத்தில் எழுதிய கவிதை..
ஒ"ன்றி படித்த கவிதை..
ஓ"ய்வில் எழுதினேன் கவிதை..
ஒள"வை சொன்ன கவிதை..
ஃ"கனம் பதிவிடுகிறேன்..
நூறாவது கவிதை.
பதிவிட்டேன் சில கவிதை..
பதியாமல் விட்டேன்
பல கவிதை..
மறந்தது சில கவிதை..
மறக்காமல் பல கவிதை..
அய்யத்தில் சில கவிதை.
சிறகடித்து பறக்கும்
தாய்மொழி கவிதை..
தமிழின் பெருமையில்
சில கவிதை..
படித்தேன் பிற மொழியில்
பல கவிதை..
தமிழுக்கு நிகர் இல்லை
ஒரு கவிதை..
கவிதையின் காதலன்
காலம் கடந்தால் என்ன நண்பா!!!!!!
கரை உனது அருகில் இருக்கும் போது!!!!!!
Kavi
சிறு துளி பெருமழையானால்,,,,,
சிறு புன்னகை பெரு மகிழ்ச்சியானால் ,,,,,,
சிறு கவலை பெரும் வலியானால்,,,,,,
சிறு முயற்சி பெரும்
வரமாகும்........!!!!!!
Kavi
உன்னை இழந்துவிடாதே
Kavi
ஆள துடிக்கும் ஆண்மையும் அனுபவிக்க துடிக்கும் பெண்மையும் ஓர் உயிரினில் கலந்து இருக்க ஆண், பெண் எனும் பேதம் ஏது
இது தெளிந்தால் ஒளிந்துவிடும் வேற்றுமையே
அழகாய் ஒண்றினையும் மானிடமே
Soundhariyan Jagan
பல நாட்களாக உறக்கமில்லை,
என் கனவே உன்னை அடைந்திட!!!!!!!!!!!
Kavi
குற்றம் செய்வதற்கு முன் குற்றவாளி ஆக்கி விடும்
உலகம் இது
விழித்துக் கொள் !!!!!!))
Kavi
கனவு காணும் உன் மனம்,,,,,,,
அந்த கனவை அடையவும்
வைக்கும்!!!!!!!
நம்பிக்கையோடு இரு......
Kavi
ஐன்னலில் ஓரத்தில்
வீசும் தென்றலுக்கு இணை வேறுண்டோ????
Kavi
இமைக்கும் நொடியில் நீ
இமைக்கா நொடியில் நான்
இப்படிக்கு கண்கள்️
shanas selvi
ஒருவன் நம்மை
மதிக்கவில்லையென்று
நினைப்பதைவிட
மதிக்கிற அளவிற்கு
அவன் இன்னும்
வளரவில்லையென
கடந்துசெல்
Ram siva
உதடுகளில் இருந்து
வருகிற வார்த்தைகளுக்கு
ஒருபோதும்
முக்கியத்துவம்
கொடுப்பதில்லை
ஏனென்றால் ?
நான் உள்ளத்தை மட்டும்
உள்ளபடி நேசிப்பவன்
Ram siva
மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள்
பிறரின் நல்வாழ்விற்கு
அதுவொரு வாய்ப்பாககூட இருக்கலாம்
Ram siva
தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை
"மௌனம்".
எந்த சூழ்நிலைக்கும்
சிறந்த பதில்
"புன்னகை".
கவிதையின் காதலன்
எதிர்ப்பார்ப்பை
நிறுத்தி கொள்
மகிழ்ச்சி தேடுவதை
கண்டு கொள்வாய்..
அதிகம் பேசுவதை
தவிர்த்துக் கொள்
கூடும் மதிப்பை
உணர்ந்து கொள்வாய்..
கவிதையின் காதலன்
தன்னையே மறந்து
விளையாடும் குழந்தைகளை
தன்னிலை மறந்து
பார்த்துக் கொண்டிருந்தேன்....
_Dheerov_ _dheerov_
இரவு
உணவிருந்தும் உண்ண மனம் இருந்தும் பசியோடு விழித்திருக்கும் இரவு...
உடல் அசதியிலும் உறக்கம் கண்ணில் சூழ்ந்திருந்தும் உறங்காதிருக்கும் இரவு...
பல சஞ்சலங்கள் எனை சூழ்ந்திடினும்
மனோ தைரியத்தில் உயிர் வாழ துடிக்கும் இரவு....
உறக்கம் என்ற ஒன்றை மட்டும் இமை கண்டிராத இரவு...
GOWRI S
எது வலி
"உயிர் பிரியும் போது பிரியமானவர் நினைவு
மனம் வலிக்க உயிர் நோக பிறர் பேசும் வார்த்தை
உடல் கூச மனம் மரத்து போக
பிறர் பேசும் வார்த்தை செவிகளை அடையாது
சிலைப்போல இருப்பது"
GOWRI S
மனம் அமைதியை தேடிக்கொண்டே இருக்கிறது ஒவ்வொரு நொடியும் பேசுவதை நிறுத்தாமல் என்ன பயன்?
selva.s
புத்தகம்
=======
தகவல் பல
தன்னுள் கொண்ட
நிலைப் பேழையின்
நிரந்தரக் கைதி...
விடுதலை கொடு
விடியல் உண்டு
புரட்டி எடு
புத்துயிர் பெறு...
BBB TAMIL VARIGAL
குடிகாரன்
போதை இருக்கும் வரை
நான் யாரையும்
மதிப்பதில்லை
போதை தெளிந்த உடன்
யாரும் என்னை
மதிப்பதில்லை.
குடிகாரன் பேச்சி
போதை தெளிந்த உடன்
போச்சி.
Gayathri
மனிதனின் ஆசை
நீ கோபப்பட்டால்
குச்சிகாரியுடன் படுத்துடு
நீ பாவப்பட்டால்
பத்தினியுடன் படுத்திடு
ஆனால் அன்று நினைத்ததை
அன்றே முடித்திடு
மனிதனின் வாழ்க்கை ஒரு முறை தான்
இதை நீ நினைத்திடு.
Gayathri
மழை பொழியா மேகமது பிழையில்லை
மணம் வீசா மலரது
குறையில்லை
சிறகில்லா காற்றது
அற்பமில்லை
இயற்கை பொழிவிழந்து செயற்கை நகைப்பை உமிழும்
விகாரம் பூண்ட மனத்தின் முன்னே..
மகி
பிழைகள்
உணராத வரை
எந்த மாற்றமும்
நிகழப் போவதில்லை
எதிலும்
Tamil Kumaran
இந்த உலகில் எதிரியிடம்
தோற்றவர்களை விட
நிழல் போல் கூட இருந்து
நட்பு என்ற பெயரில்
பலவீனம் படுத்திய
துரோகியிடம்
தோற்றவர்களே அதிகம்
உலகத்தை நேசி
ஒருவரையும் நம்பாதே
Tamil Kumaran
பொறுத்திருங்கள்
நீங்கள் செய்யும்
ஒவ்வொரு நல்ல (அல்லது தீய)
செயலுக்கும் அதற்கான
பிரதிபலன் கிடைத்தே தீரும்
Tamil Kumaran
கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்
Tamil Kumaran
முத்தமிழ்
***********
சிரம் தாழ்த்தி
வணங்கி மகிழ்கின்றேன்
சிகரமிக்க தமிழே
எங்களது சரீரத்தின்
சுவாசமல்லவா நீ!
தரணி முழுவதும்
தனித்துவம் பெற்ற
தங்கத்தமிழ் அல்லவா நீ!
உன்னைப்புரிந்தோருக்கு
முப்பால் நறுமணம் வீசுகிற
பைந்தமிழ் பூந்தோட்டத்திற்கும்
அழைத்துச்செல்லுகிற
செம்மொழியல்லவா நீ!
இகழ்ந்தோரை
போர்க்களத்திலும்
சந்திக்கச்செய்யும்
வீரமிக்க மொழியல்லவா நீ!
அடங்காமை ஆரிருள்
உயித்துவிடுமென்று
அகிலத்திற்கே எடுத்துரைத்த
அற்புத மொழியல்லவா நீ!
மூன்றெழுத்து
பொக்கிசமல்லவா நீ!
உனது புகழை பாடுவதற்கே
அவதரித்து வந்தனர் பலர்
அவர்கள் காட்டி சென்ற
பாதையில் நடப்பவர்கள் சிலர்
தமிழே உனக்கு ஒன்று தெரியுமா ?
நீ! உன்னை நேசித்ததை விட
நாங்கள் நேசிப்பதே அதிகமென்று
தமிழ் மண்ணிலே
தன்னுயிர் போகவேண்டும்
தமிழ் பேசியே தன்னுடல்
எரிந்து சாம்பலாகவேண்டுமென்று
எண்ணுவோர் பலர்
இப்படியாக எங்களுக்குள்
நீயிருக்க...
எப்படி ?
அன்னிய மொழியை
அனுமதிப்போம்
தமிழ் நாட்டுக்குள்ளே
சொல்...தமிழே...சொல்..
உணவோடு உணர்வையும்
ஊட்டி வளர்த்த தமிழே
உனக்காக நாங்கள்
உயிரையும் துச்சமென கருதுவோம்
எங்கள் தமிழே...
(தமிழ் ஆசிரியரை
வாழ்க்கை துணைவியாக பெற்று
எனது வாழ்க்கையும்
மணக்கிறது தமிழே...)
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
#கைப்பேசி
கற்பனை உலகத்திற்குள்
கட்டை விரல் கரம் பிடித்து
அழைத்துச் சென்ற
கைப்பேசியே
ஐப்பசியில் வந்த வருவாயால்தான்
ஐக்கியமானாய் எனக்குள்ளே
அமைதி காக்கவும்
என்ற வார்த்தை
நூலகத்திலும்
மருத்துவ மனைகளிலும் மட்டுமே
வளம் வந்தன
ஆனால்
இன்று நீ! இருக்குமிடமெல்லாம்
மயான அமைதியாகத்தான்
உள்ளதென்பதை அறிவாயா?
கைப்பேசியே
ஓத்துக்கொள்கிறேன்
தொலைவிலிருக்கும் உறவுகளிடம்
மறுகனமே உறவாட செய்ய
உதவிபுரிந்தாய் என்பதை
ஆனால்
இன்று உனக்குள் மட்டுமே
உரையாடிக்கொண்டிருக்கும்
மனங்களாக மாற்றிவிட்டாயே
சிலரை
வீட்டுக்குள்
நான்கு பேர் இருந்தாலும்
மௌனம் காக்கிறதே உன்னால்
அகில விசயமும்
உன்னில் உண்டு
அதில் ஆபாசமும் கொஞ்சமுண்டு
எங்கே? எங்கள் பிள்ளைகள்
திசைமாறி போய் விடுவார்களோ
என்ற அச்சமும் உண்டு
என்பதை அறிவாயா?
கைப்பேசியே
நீ! காலத்தால்
புறந்தள்ள முடியாத உறவுதான்
ஆனால்
எங்கள் உறவுக்குள்
பிளவு ஏற்பட்டுவிட்டதே
அவரவர் தனியாக
உன்னை தடவி உறவாடுவதால்
எது எப்படியோ?
உன்னால் இந்த சமூகத்திற்கு
நல்லது மட்டுமே நடந்தால் சரி
கைப்பேசியே,
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
முண்டாசு கவிஞனே...
எட்டயபுரத்து தமிழ் வேந்தே
உனது எழுத்து போதித்த
வீரத்தின் மிச்சத்தை
உனது முறுக்கு மீசையும் போதித்தது
உலகத்தாய்க்கு
முதல் குழந்தையான தமிழை
வீரக்குழந்தையாக
வியக்க வைத்ததல்லவா
உனது தமிழ் வீர எழுத்துப்பால்
புதுமைப்பெண் கண்ட
புலவனே...
குயில்பாட்டு எழுதிய
குணக்குன்றே...
நீ! எடுத்து வைத்த ஒவ்வொரு
அடியும்
தமிழுக்கு நீங்கா புத்துணர்ச்சி பெற்றது
உனது நேர் விழிப்பார்வையால்
தமிழ் நெஞ்சை நிமிர்த்தியது
பாரதியே
உனக்கான அடையாளமென்பது
முறுக்கு மீசையோ
முண்டாசு கட்டிய தலையோ
நிலவு போன்ற நெற்றி பொட்டோ அல்ல
தமிழன் என்றவுடன்
தனிப்பட்ட வீர உணர்வு வருமே
அங்கேதான் பாரதி நீ! வாழ்கிறாய்
என்றும் தமிழுக்கு
வீரனாக...
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
தாயே நீ!
கடைசி வரை
சேயை காப்பாயென்றால்
கட்டியணைத்து முத்தமிடு
இல்லையென்றால்?
கண் விழிக்குமுன்னே
குப்பை தொட்டிலில்
சேர்த்துவிடு
தவறாக ஈன்றெடுத்தாள்
தண்டனை என்னவோ
இந்த சமூகத்தில்
சிசுவுக்குத்தானே..
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
மெட்ரோ தூண்கள்..
வெறும் தலைவர்கள் முகமாய்
சினிமா போஸ்டர்களாய் மட்டுமே சுமந்த தூண்கள் ..
இன்று அழகு முகங்களை,
அழகான நொடிகளை,
படமாய் சுமக்கிறது...
மிகுந்த அழகாய் நம் கண்களை கவர....
Sugan
ஆயிஷா பீவிக்கும்
அப்துல் காதருக்கும்
பிறந்தால்
நீ! முஸ்லீம்
ஆரோக்கிய மேரிக்கும்
ஆரோக்கிய சாமிக்கும்
பிறந்தால்
நீ! கிறித்துவன்
ஆனந்தவள்ளிக்கும்
அருணாச்சலத்திற்கும்
பிறந்தால்
நீ! இந்து
எல்லாம் இருக்கட்டும்
நான்கேட்கிறேன் ?
யாருக்கும்
யாருக்கும்
பிறந்தால்
நீ! மனிதன் ?
Ram siva
எனது மனமென்ற
சமுத்திரத்தில்
அன்பென்ற
முத்துக்கள்தான்
அதிகமாக இருக்கிறது
மூழ்கி எடுப்போர்
முனைந்திடுக ...
Ram siva
காலமே
இழந்த உன்னை மீட்கவும் இல்லை
இருந்தபோது உன் அருமை தெரியவில்லை
துரத்தினாலும் கிடைக்கவில்லை
துக்கத்திலும் நீ நிற்பதில்லை
வேகமாக சுழலும் நீ எனக்கு வேதமாய் தெரிகிறாய்
ஒரு காலம் வந்தால் காதல் கிடைக்கும்போலும்
எந்த கடவுள் வந்தாலும் காலம் நீ கிடைக்கமாட்டாய்..
எனதருமை காலமே....
@உறங்கும் புத்தன்
உறங்கும் புத்தன் ????
#கருத்துள்ளவனுக்கு
#கண்ணீரால்_இரங்கற்பா
சிந்தனைப்பறவை
சிறகடித்து பறந்தது எங்கே ?
சின்னக்கலைவாணரே
சிந்தனைகளை
தவிக்கவிட்டு சென்றது எங்கே ?
புதல்வனை தொலைத்ததிலிருந்தே
புன்னகையை தொலைத்தவன்
நீ! என்பதை நன்குறிவேன்
அதற்காக நீயுமா
எங்களை தவிக்கட்டுச்செல்வாய்
சிந்தனை சிற்பியே...
நடிகனை மட்டுமே தொலைத்திருந்தால்
எண்ணிக்கையில் ஒருவனாக உன்னை எண்ணியிருப்போம்
தொலைத்தது
பகுத்தறிவுவை அல்லவா
பதறாமல் இருப்பது எப்படி ?
நீ! நட்டு வைத்த மரங்களுக்கு
உரமாக உன்னை உருவாக்கிக்கொண்டாயோ
உத்தமரே...
நல்லவனுக்கு ஏது காலம்
என்ற சொல்லை
உனது மரணமும் நிரூபித்துவிட்டது
உடன்பிறப்பே...
மாரடைப்பிற்கு
மாரடைப்பு நிகழப்போவது எப்போது ?
இனி...உன்னை நாங்கள் காணப்போவது எப்போது ?
விவேக் அண்ணா
அய்யா கலாம் நலனையும்
கேட்டதாகச்சொல்லுங்கள்
நீங்கள் சென்றமிடமெல்லாம்
உங்கள் பெயர் சிறக்கட்டும்
பல ஆத்மாக்களும் உங்கள் சிந்தனை சொற்களால் சிரித்து மகிழட்டும்...
வழியனுப்ப மனமில்லாமல்
விழி பிதுங்கி நிற்கிறேன்
சமுதாய அக்கறையுள்ளவனை
தொலைத்ததனால்
உனது ஆத்மா சாந்தியடையட்டும்
நல்லவரே...
கனத்த இதயத்துடன்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
உலக கவிதை தினமான இன்று
கவிபடைக்க முயல்கின்றேன்
கவி தினம் சொல்கிறது
உலகலாவிய தினத்திற்காக
ஆகாய காகிதவேண்டுமென்று
ஆசைப்படுகிறாயா
ஆசைத்தம்பி
உங்கள் முப்பாட்டன் வள்ளுவர்
உலகத்தையே
இரண்டு வரிக்குள்
அடக்கியவரல்லவா
நீ! அவரது
பேரானாச்சே
சொல்லவா வேண்டும்
ஒரு வரிக்குள்ளும்
சொல்லுவாய்
பல வரிகளாலும்
நச்சென்று
வெல்லுவாய்
வாரும்
உலக கவி தினமான
எனக்கு
உம்மால் முடிந்த மகிழ்ச்சியை தாரும்
உச்சி வெயிலில் தொடங்குகின்றீர்
கரும்புச்சாரு அருந்திவிட்டு
இனிப்பான
சொற்களால் காகிதத்தை
கற்பனைகொண்டு நிரப்பிடுக...
எனது கவிப்பசிக்கு
மதிய உணவு வழங்கிடுக..
முன்னுரை வழங்கிய
கவி தினத்திற்கு
நன்றிகள் பல
இதோ
நான் சிறம் தாழ்த்தியவாரு
எனது பேனாவும்
சிறம் தாழ்த்தி
வாழ்த்துச் சொல்ல முன்வருகிறது
கவி
"க" என்றால் ?
கண்டதுமே
"வி" என்றால் ?
விண்ணை
கண்டதும் விண்ணைத்தொட வைக்கும் விந்தையே
உன்னால்தானே நான்
என்னால் எப்படி ?
உன்னை மிஞ்சுவது
அன்னையை மிஞ்சுகிற
அன்பு சக்தி இவ்வுலகில்
உண்டுயெனில்
உலக கவி தினமே
உன்னையும் மிஞ்சுகிற
கவி இருந்தாலும்
படைக்க மறுக்கத்தான் செய்யும் என் மனது
குருவை பாராட்டி
ஒரு வரி மேலோங்கினாலும் தவறு
தவறுதானே
உலக கவி தினமான
உன்னிடம் ஆசிவழங்க மட்டுமே அனுப்பியுள்ளேன்
சில வரிகளை
என்றும் என் மனச்சிறைக்குள்
ஆயுள்கைதியாக நீ!
பரோலில் வர முற்பட்டால்லும் கூட
மறுகணமே
மண்ணுக்குள் சென்றுவிடுவேன்
நீயில்லா என் வாழ்வு
அர்த்தமற்றதனால்
ஆகவே
தொடர்ந்து
ஆசீர்வழங்கு மேலும் வளர்கிறேன்
வாழ்த்துகிறேன்
உன்னைப்போன்று
அனைவரையும்...
இப்படிக்கு
உன்னால் மட்டுமே
நான்
கவிஞனாய்
கடையநல்லூர்
கா.ஆசைத்தம்பி.
Ram siva
குறைகள் கூறி குறைத்துக்கொள்ள கூறுபவர்களை காண்பது மிகவும் எளிது,
குறைகளாக கூறப்படுவது உண்மையில் குறைகளா என்று கூறுபவர்களை காண்பதே மிகவும் அரிது.
- அன்பும் நானும்
சபலக்காரர்களுக்கு
தனது சரீரத்தால்
உணவளித்த தாய்
விலை மாது
Ram siva
ஆதவன் அளித்த ஆறா காயங்களை
ஆற்ற வந்ததோ இந்த உலாவும் நிலா!
-Sasikumar S
KaviKuil - COMPETITION
ஒரு மழைக்கால பின்னிரவில்
தனியே நடந்து செல்கிறேன்!
Kumar Krishnan
வாழ்க்கை
என்பது ஓவ்வொருவருக்கும்
ஒரு வழியை
ஏற்படுத்திவிட்டு
கடந்துபோகிறது
ஆனால்
நாம்தான்
வழியை
மறந்துவிட்டு
வாழ்க்கையை
தொலைத்துவிட்டு
கடைசியில் நாம் உணரும்
தருணத்தில் வாழ்க்கை
நம்மை விட்டு
தொலைதூரம்
சென்று விடுகிறது.
kamal raj
வெற்றியை கொண்டாட மட்டுமே முடியும்! தோல்வியில் மட்டும் தான் பலவற்றை கற்றுக் கொள்ள முடியும்!
Alfie jo
வரலாறு உன் பெயரை
சொல்ல வேண்டுமானால்
நீ பல முறை என்னை
தேடி வர வேண்டும்
இப்படிக்கு முயற்சி.
kumaran
சில நாள் பேசாமல் இருந்து பார், பலபேர் காணாமல் போய்விடுவார்கள்!
Alfie jo
தோற்று விடுவோம் என்ற
தோல்வி பயந்தான் உன்னை
ஜெயிக்க விடாமல்
தடுக்கிறது.....!
கிருஷ்ணன்
ஒவ்வொரு இரவும்
ஒரு விடியலின் ஆரம்பமே
ஒவ்வொரு தோல்வியும்
ஒரு வெற்றியின் ஆயத்தமே......!
கிருஷ்ணன்
தலையில் தீபமேற்றி
தன்னுடலை வருத்தி
ஒளி தருகிறான்
மெழுகுவர்த்தி....
John K
வீசிய வலை கடலை அடைவதற்குள்
விதியின் வலையில் சிக்கினான்
மீனவன்...
anishya anu
தேச பிதா காந்தி...
லட்டுக்கு தேவை பூந்தி...
அமைதிக்கு பெயர் தான் சாந்தி...!!!
Alfie jo
செல்ஃபி எடுக்க தேவை செல்லு,
பட்டாணி தின்ன தேவை பல்லு,
பாக்கு தல்ல தேவை கல்லு,
முடிஞ்சா நீ ஒரு கவிதை சொல்லு...
மல்லி
பெண்களின் அழகு பொன் நகையில் இல்லை,
புன்னகையில் தான் உள்ளது.
மல்லி
கோபம் என்பது
முட்டாள்தனத்தில் தொடங்கி
வருத்தப்படுவதில் முடிகிறது
கோபப்படும் போதெல்லாம்
நம் எதிரி வெற்றி பெறுகிறார்கள்
நாம் தோல்வி கொள்கிறோம்
Rolex
மாற்றம் ஒன்றே மாறாதது
ஆனால் மாற்றமும் மாறுகிறது
ஏமாற்றமாக
கவிஞர்.ராசு
யாரிடமும்
பேச வேண்டாம்
என மனநிலை
உருவாக காரணம்
அதிகமாக பேசியதன்
விளைவாக தான் இருக்கும்